Friday, 10 January 2014

பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்

பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்

·      அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள்,

பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்

·      ஆச்சார்ய விநோபாவே

“நான் பைபிள் குரான் இரண்டையும் படித்துள்ளேன். மறைமுகமுகமாக இரண்டும் சொல்வது, பசுவை கொல்வது பெரும் பாவமே”

·      ஹக்கீம் அஜ்மல் கான், இஸ்லாமிய தேசியவாதியும், இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், யுனானி மருத்துவத்தை மீட்ட மிக பெரும் நிபுணரும் ஆவார்,

“குரானோ, அரேபிய மரபுகளோ பசுக்கொலையை அனுமதிக்கவில்லை“

·      புகழ்பெற்ற இஸ்லாமிய தத்துவ மேதையும், பாக்தாத் இஸ்லாமிய மையத்தை தோற்றுவித்தவருமான அல்கஸ்அலி (1058-1111AD), அஹ்ய உல் தீன் (Revival of Religoious Science) என்னும் புத்தகத்தில்,

மாட்டின் இறைச்சி ஒரு நோய் (மார்ஸ்), அதன் பால் புனிதமானது, ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் அதன் நெய் ஒரு மருந்து.பசு மனித குலத்திற்கு தாயைப்போல.மனிதர்க்கு இறையருளை போல் அனைத்தையும் தரவல்லது. தாய் குழந்தைக்கு பாலூட்டுவதை போல் மனித சமூகதிர்க்கே பாலை கொடுக்கிறது. பசுவின் பால் மூளைக்கும் நினைவாற்றலுக்கும் நல்லது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. உறுதியான மூளை உள்ளவன் அல்லாவை என்றும் நினைத்திருப்பான். அதனால் பால் மனிதகுலத்தின் அடிப்படை தேவை. அப்படிப்பட்ட மாட்டை கொள்வது கொடிய பாவம். அசைவ உணவுக்கு மற்ற வழிகள் உள்ளபோது, மனித குலத்தின் நன்மை கருதி பசுவை கொல்வதை நிறுத்த வேண்டும். பசுக்களை காப்பது மானுட கடமை மட்டும் அல்ல அது ஒரு இறைகடனும் ஆகும்

·      மொகலாய சாம்ராஜ்யத்தின் முதல் அரசரும், இந்தியாவுக்குள் இஸ்லாமிய அரசை நிறுவியவரும், தீவிர இறை பற்றாளருமான மாமன்னர் பாபர் (தனது துசுக்-இ-பாபரிபுத்தகத்தில் ஏட்டில்),

மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் பசுக்கள் பலியிடபடுவத்தை/கொல்லப்படுவதை அனுமதிக்க கூடாது. இதை மீறும் எனது வழிவந்தவர்கள் யாராயினும் குடிமையாலும், சாமானிய மக்களாலும்  தூக்கி எறியபடவேண்டும்

·      மொகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர் 28.07.1857 அன்று வெளியிட்ட அரச கட்டளை,

இறைவனின் படைப்பில் (கல்க் குதா கா), பேரரசரின் சாம்ராஜ்யத்தில், தலைமை தளபதின் உத்தரவினால், யாரெல்லாம் பசுக்களையோ, காளைகளையோ, கன்றுகளையோ பொது இடத்திலோ/வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ரகசியமாகவோ- வெட்டினாலோ/பலியிட்டாலோ, பேரரசரின் விரோதியாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கபடுவார்கள்

·      மைசூர் சுல்தான்கள் சாம்ராஜ்ஜியம்:

பசுக்களும் மாடுகளும் கன்றுகளும் கொல்லப்படுவதும், பலியிடப்படுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்ட குற்றம். மீறுபவர்கள் கைகள் துண்டிக்கப்படும்

·      பத்மஸ்ரீ முஜாபர் ஹுசைன், 13 தேசிய விருதுகள் பெற்ற இஸ்லாமிய எழுத்தாளர்,


“புனித குரானின் எந்த ஒரு சுராவிலும் (அத்தியாயத்திலும்) பசுக்களையோ, காளைகளையோ கொல்ல அனுமதிக்கவில்லை

Friday, 3 January 2014

நாட்டு பசுக்கள் குறித்த புத்தகம் வாங்க..


கொங்க தேச தென்கரை நாட்டு வேணாவுடையார் பட்டாபிஷேகம்


நாட்டுப்பசு

நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவம் உணர்ந்து இன்று பலரும் நாட்டுப்பசுக்களை வாங்கி பயன் பெற துவங்கியுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால் நாட்டு பசுக்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து வாங்குகிறார்கள் மக்கள்.. அதன் பொருளாதார காரணங்களை கடந்து... எனவே வருங்காலத்தில் நாட்டுப்பசுக்களை அழிப்பது அவ்வளவு சுலபம் அல்ல..நாட்டு பசுக்களே நம் தெய்வங்கள்.. ஆதார சக்திகள்.. நாட்டு பசு வாங்குகிறேன் என்று குஜராத் கிர் பசுவை வாங்குவதும் முட்டாள்தனம் தான்.. அவரவர் வாழும் பகுதிக்கான பசுவை வாங்க வேண்டும்.. அதுவே முக்கியம்.. இதோ இன்று புதிதாக வாங்கப்பட்ட பசு.. எவ்வளவு பேர் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும் களத்தில் ஏற்படும் மாற்றங்களை தடுக்க இயலாது..! பசுக்கள் வெறும் பால் கொடுக்கும் மெஷின்கள் அல்ல.. பொருளாதார-தொழில் உபகரணம் அல்ல.. அவை மக்களின் வாழ்வோடும், உணர்வோடும், கலாசாரத்தொடும் இணைந்தவை.. காடுகளாக கிடந்த பூமிகளை விளைநிலங்களாக-நாடுகளாக வளப்படுத்தியத்தில் மனிதனை விட பசுக்களுக்குத்தான் பெரும்பங்கு உண்டு..! (குறிப்பு: பசு என்றாலே நாட்டு பசு மட்டும்தான் சீமைமாடுகள் அல்ல)

thanks: sasikumar


Tuesday, 31 December 2013

அடிமாடுகள் சொல்கின்றன

நாங்கள்
நரப் பூச்சிகளின்
நன்றி மறுப்பால்
அறுப்புக்குப் போகும்
அடிமாடுகள்

வயதான ஒருவன்
நோய் வந்த நண்பன்
பால் வறண்ட ஒருத்தி
முடமான முரடன்
நகரும் பொட்டலமாய்
சாகுமிடம் நோக்கி
நான்கு நாட்கள்
நீரில்லாமல்
நின்றபடி பயணம்
கால் தோய்ந்து
சாய்ந்து கொள்ள
சக மாட்டு முதுகுகள்
வயிறு காயும்
முதல் நாள் மட்டுமே
மலஜலம் அவதி
உழைப்பை உண்ட பின்
உடம்பையும் கூறு கேட்டாய்
பால் மட்டும் போதாதென்று
உதிரமும் உறிஞ்சக் கேட்டாய்
செத்தும் கொடுக்கிறோம்
சுவைத்துக் கொள்ளுங்கள்
ஆனால் எங்கள்
மரணப் பயணத்தை
சிறிதேனும்
மரியாதைப் படுத்துங்கள்
போன ஆண்டு பொங்கலுக்கு
பொட்டிட்டுப் பூ வைத்து
கடவுளாய் படையல் இட்ட
நீயே வெட்டி இருந்தால்
நிம்மதியாய் செத்திருப்பேன்


--முகநூல் வழி கிடைத்த கவிதை 


Friday, 27 December 2013

ஆலயம்



ஆலயம் – ஆ(நாட்டு பசு) + லயம் – பசு தன்னை மறந்து லயித்து பால் சுரந்த இடமே ஆலயம்.
கோயில் – கோ(நாட்டு பசு)+இல் – பசு இருக்கும் இடம்

மேலே உள்ள சிற்பங்களை நீங்கள் பல கோவில்களில் கண்டிருப்பீர்கள். கோவில் கருவறை உள்ள இடத்தை நாட்டு மாடோ, சித்தர்களோ, (ஞானிகள்-பெரும் வீரம் தியாகம் கற்பு நெறியில் சிறந்து விளங்கிய பெண்கள் போன்றோரின்) ஜீவசமாதி போன்ற  விஷயங்கள் தான் தீர்மானிக்கும். நம் விருப்பத்தின் படி கருவறை மாற்றப்பட்டால் அங்கு தெய்வ சக்தி இராது. கருவறையில் நல்லெண்ணெய் தீபம் மூலமே வெளிச்சம் இருக்க வேண்டும் (புகழ் பெற்ற கோவில்களை எண்ணி பார்க்கவும்). கருவறைக்குள் டைல்ஸ் கிரானைட் போன்றவற்றை போட கூடாது. இறைவன் திருவுருவம் பச்சை கற்பூரம், நாட்டு பசுவின் நெய் தீபம், நல்லெண்ணெய் விளக்கொளியில் தான் தீபாராதனை காட்ட வேண்டும்!

கோவில் என்பது ஆன்ம பலத்தை பேருக்கும் பொருட்டு உள்ள இடம். கருவறையை சுற்றி அந்த அந்த தெய்வத்தை பொறுத்து (சிவன்-விஷ்ணு-முருகன்-அம்பிகை-காளி) ஆகம விதியின் படி கோவில் அமைக்கப்பட வேண்டும்.

Monday, 9 December 2013

ராபர்ட் கிளைவ் மரணம்


ராபர்ட் கிளைவ் என்ற வெள்ளையன் தான் முதன் முதலில் பாரதத்தில் பசுக்கொலைக்கூடங்களை நிறுவினான். அவற்றை இன்றளவும் நேரு முதற்கொண்டு அவர் வம்சாவழியினர் பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவின் சுயசார்பு சமூக பொருளாதார கட்டமைப்பும், இயற்கை விவசாயம், ஆரோக்கியம் என அனைத்துக்கும் நாட்டு பசுக்களே முதுகெலும்பாக உள்ளதை உணர்ந்த கிளைவ் பசுக்களை அழிக்க வகுத்த திட்டம் இன்றளவும் நடந்து வருகிறது. இடையில் வெள்ளைக்காரனின் அடிவருடிகளாக இன்றலவுமுள்ள ஆட்சியாளர்கள் பலரும் இந்த சதிக்கு துணையாக உள்ளனர்.

சரி, இந்த மாபாதகன் ராபர்ட் கிளைவின் முடிவு எப்படிப்பட்டது என்று அறிந்தால் நமக்கு கொஞ்சம் ஆறுதலும், இன்றும் பசுக்கொலைக்கு ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கும் திராவிட, கம்யுனிஸ, முற்போக்கு தேச துரோக  கும்பல்களுக்கும் மற்றும் வெள்ளைக்காரன் வீசிய எலும்பு துண்டுகளை இன்றளவும் கடித்துக்கொண்டிருக்கும் துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவும் இருக்கும். 

ராபர்ட் கிளைவ் என்னதான் நரித்தனமாக பல போர்களை வென்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு பலமான அடித்தளம் போட்டிருந்தாலும், பசுக்கொலை கூடங்கள் நிறுவிய சிறிது காலத்திலேயே அவனது அழிவு காலம் துவங்கி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி அவனது செல்வாக்கு சரிய துவங்கியது. உள்ளூர் ஜமீன்கள் மன்னர்கள் துணையையும் மீறி இவனது ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்து ஊருக்கு திரும்பினான். அங்கு அவன் லஞ்சம வாங்கி கொள்ளையடித்த கதை வெளிவரவே அங்கும் எந்த செல்வாக்கும் அற்றவனாக மாறிப்போனான். கையிருப்பு நிதியும் வீழ துவங்கியது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என தூக்கமின்றி தவிக்க துவங்கினான். மனச்சிதைவு நோய்க்கு ஆளானான். பேசக்கூட ஆளில்லாத நிலைக்கு வந்தான். தூக்கம் வர தூக்க மாத்திரை ஊசி என்று போக ஒரு கட்டத்தில் அதுவும் பயனின்றி போக போதை மருந்துக்கு போனான். போதை மருந்து இல்லாமல் தூக்கமில்லை என்ற நிலைக்கு சென்றான். நரம்புகள் வலுவிழந்தது. உடல் ஒத்துழைக்க மறுத்தது. நடக்கவும் முடியவில்லை. உணவு தயாரிக்க முடியவில்லை. போடவும் ஆள் இல்லை. சிலர் பரிதாபப்பட்டு கொண்டு வந்த உணவை விழுங்க கூட இயலவில்லை. கஷ்டப்பட்டு நாட்களை நகர்த்தினான். தன்னை கொன்றுவிடுமாறு கதறி கெஞ்சினான். தூங்க முடியவில்லை, உண்ண இயலவில்லை, நடக்கக்கூட முடியாது என நரகத்தில் சித்ரவதை அனுபவித்தான்.

தற்கொலை செய்தால் அவன் மதம் ஏற்றுக்கொள்ளாது. சர்ச்சில் புதைக்கக்கூட அனுமதிக்காது என்பதால் சாவுக்கு ஏங்கினான். ஒரு கட்டத்தில் வலியின் கொடுமைகள் தாங்காமல் தனது கழுத்தை தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போனான். ரத்தம் உறைய காணவும் ஆள் இன்றி கிடந்தான். இவனது கொடூர சாவு, பசுக்கொலைக்கு துணை செல்லும் அத்தனை பேருக்கும் ஒரு சாவு மணி!

தெய்வம் நின்று கொல்லும்!