Wednesday, 3 September 2014

நாட்டுப்பசுக்களை அழிக்க நினைக்கும் கிறிஸ்தவ மாபியா


ஈரோடு அருகில் சேலம்-கோவை மெயின் ரோட்டில் உள்ளது பெருந்துறை. பெருந்துறை சரித்திர பழமை வாய்ந்த ஊர். மதமாற்றம் என்பதை அங்கீகரிக்காத ஊர். மேட்டுபாங்கான பகுதியாதலால் இங்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை மானாவரி விவசாயமே. காய்ந்த காலங்களில் நாட்டு மாடு மேய்த்து, மழை காலங்களில் சோளம், வரகு, எள், போன்றவைகளை பயிர் பண்ணி, வருவோர்க்கு நாட்டு மாட்டு மோரும், சோள சோறும் இட்டு விரும்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் இப்பகுதி மக்கள். இத்தாலூகாவின் சில பகுதிகளில் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் இடையில் வந்தது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் என மக்கள் பயிர்களை மாற்றினர். மாட்டையும் மாற்றினர். நாட்டு மாடுகளுக்கு பதில் சீமை மாடுகளுக்குச் சென்றனர். பால் கறந்து ஊற்றி லாபமில்லாமல் பொருளாதார வீழ்ச்சி அடைந்து உடல் நலம் கெட்டு, மனநலம் கெட்டு போயினர்.



நாட்டு மாடுகளை பேணும் விவசாயி

இப்படி வீழ்ந்த ஊர்களில் பெருந்துறை தாலூக்காவில் உள்ள நல்லாம்பட்டியும் ஒன்று. செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற விவசாயி நாட்டு மாடுகளை காக்க எண்ணினார். சில வருடங்களாக இந்த எண்ணம் கொண்டுள்ள அவர், முன்பு தனது கைகாசை (ரூ. ஐந்து லட்சம்) வைத்து அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவில் நாட்டு மாடுகள் கொண்ட கண்காட்சியை நடத்தினார். பின்பு அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கிர், தார்பார்க்கர், சிந்தி போன்ற வட நாட்டு மாடுகளை புறக்கணித்து தனது பகுதி நாட்டு மாடுகளான கொங்க மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார். முதலில் ஊரார் தூற்றினர். பைத்தியகாரன் என்றனர். (நல்ல வேலை கல்யாணமாகிவிட்டது. இல்லையேல், இவருக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டார்கள்). ஊரான் தூற்றல்களை சமாளித்து தற்போது பன்னிரண்டு கொங்க நாட்டு பசுக்கள், மூன்று நாட்டு காளைகள், ஏழு கன்றுக்குட்டிகள் என தனது தொண்டுபட்டியை (தொழுவம்) நாட்டு மாடுகளால் அலங்கரித்து வருகிறார்.

நாட்டு மாடுகளை கொண்டு மகத்தான வருமானம்
நாட்டு மாடுகளை வளர்ப்பதில் அவரது மனைவியும் மிகவும் சிரத்தை காட்டுகிறார்கள். நான்கு ஏக்கர் விவசாய நிலமும் அதில் பயிர்செய்தும், நாட்டு மாடுகளை வளர்த்தும் சுயஉழைப்பில் முன்னேற வேண்டும் என்று நினைத்தவருக்கு ஈரோட்டில் இயங்கி வரும் பஞ்சகவ்ய ஔஷதாலயம் மூலமாக நாட்டு மாடுகளை கொண்டு பால்பொருட்களை நம்பாமல் நல்ல லாபம் பெறமுடியும் என்பதை அறிந்துகொண்டார். மாட்டு மூத்திரத்தை காய்ச்சி அர்க்கம் எனும் ஆயுர்வேத மருந்து தயாரிக்கிறார். மேலும், மாட்டு சாணத்திலிருந்து விபூதி, சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை தயாரிக்க திட்டமிட்டார். மேலும், நாட்டு மாட்டு பாலை பேக் செய்து 1 லிட்டர் பாலை 65 ரூபாய்க்கு விற்று வருகிறார். மேலும், ஆயுர்வேத மருந்துக்கு அவசியமான மிகவும் அரிதான பாரம்பரிய முறையில் வீட்டில் செய்யப்படும் முறையில் நாட்டு மாட்டு நெய்யும் தயாரிக்கிறார். அவரது மனைவி துணையாக சுழன்று வேலை செய்கிறார். நாட்டு மாடுகளுக்கு கடந்த தைமாதம், முதல் தனது குலகுருவைக்கொண்டு பிரதி மாதம் கடைசி வெள்ளிகிழமை கோபூஜை நடத்தி வருகிறார். குலகுருவை மறந்த அவரும், உறவினர்களும் குருவை தரிசித்து ஆசிகளை பெறுவதோடு, கோ பூஜை புண்ணியத்தையும் அடைகின்றனர். அதோடில்லாமல், தான் மட்டும் நாட்டு மாடுகளை வளர்ப்பதோடில்லாமல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை ஊக்கமளித்து நாட்டு மாட்டுகளை வாங்க செய்துள்ளார். தனது பொலிக்காளைகளைக் கொண்டு அம்மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் இல்லாமல் இயற்கையாக சினை பிடிக்க உதவி வருகிறார்.

வங்கியின் உதவியை நாடுதல்
இந்த நாட்டு மாடுகளின் பொருட்கள் நல்ல வருமானம் கொடுப்பதாக இருந்தாலும், அரசு எந்த வித மானியமோ, கூட்டுறவு வங்கிகள் நேரடி நிதியுதவியோ அளிப்பதில்லை. அதனால், தனது நான்கு ஏக்கர் சொத்தை (ரூ. எண்பது லட்சம் மதிப்பு) அடமானம் வைத்து அவ்வூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் லோன் வேண்டுமென்று விண்ணப்பம் செய்தார். ஒரு ஆடிட்டரைக் கொண்டு முப்பது லட்சம் ரூபாய்க்கு லோன் பிராஜெக்ட் ரிப்போர்ட் கொடுத்தார். இதனை கடந்த ஜனவரியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் திரு.சந்தானராஜிடம் கொடுத்தார் (இவர் ஒரு கிறிஸ்துவர் என்பது குறிப்பிடத்தக்கது). நாட்டு மாட்டிலிருந்து அர்க்கம், ஷாம்பூ, சோப்பு, விபூதி, பால் முதலியவைகளால் நல்ல லாபம் பெற முடியும் என்று கூறி விண்ணப்பித்தார். சுமார் இருபது முறை இதை கொடு அதை கொடு என்று பேங்கில் தொந்தரவு செய்தும், பொறுமையாக அவர் கேட்டதை எல்லாம் கொடுத்த பிறகும் விவசாய லோன் ஏதுமில்லை என்று கூறிவிட்டாராம். பின் எதற்காக கிராமத்தில் வங்கியை வைத்துள்ளார்களாம்?

பின்வாசல் வழியே ஆப்ரகாமிய பாதிரிகள்
லோன் கேட்ட சில வாரங்களில் இரண்டு இளம்வயது பாதிரிகள் (நன்கு டக்-இன் செய்துகொண்டு) மார்ச் மாத கடைசியில் இந்த நாட்டு மாட்டு விவசாயியை சந்தித்து கோவையிலிருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்கள். TN 74 ரெஜிஸ்திரேசன் கொண்ட யூனிகாரன் பைக்கில் வந்துள்ளனர். இந்த நாட்டு மாட்டு காளைகள் மூன்றையும் மூன்று லட்சம் ரூபாய்க்கு எங்களிடம் கொடுத்து விடுங்கள்.
உங்களுக்கு கிர், தார்ப்பார்க்கர் போன்ற வடநாட்டு மாட்டு ஊசிகளை இலவசமா தருகிறோம்; உங்கள் நாட்டு மாடுகளுக்கு இதனை இட்டு கலப்பின மாடுகளை உருவாக்குங்கள். இப்படி உருவாகும் கலப்பின மாடுகள் நன்கு பால் கறக்கும். இந்த கொங்க மாடுகள் எல்லாம் வேஸ்ட் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இப்படி கூறியவுடன் அந்த விவசாயி உறுதியுடன் நாட்டு மாடுகளை வளர்ப்பதே என் லட்சியம் இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று என்று கூறி அவர்களை திருப்பியனுப்பியுள்ளார்.

இரண்டுமணி நேர மூளை சலவை
பின் இருபது நாட்கள் கழித்து ஏப்ரல் 17 ஆம் தேதி அந்த இரண்டு நபர்களும் மேலும் ஆறு பேருடன் வந்துள்ளார்கள். அன்று ஊரில் மாரியம்மன் பண்டிகையாதலால் வீட்டில் விவசாயியின் மனைவி மற்றும் பெரியோர்கள் யாருமில்லை. அந்த சமயத்தில் ரெஜிஸ்திரேசன் செய்யப்படாத மஹிந்திரா சைலோ காரில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பாதிரி ஒருவரும், முப்பது வயதில் இருவர், இருபது வயதில் மூன்று பேர் என ஒரு கும்பலாக வந்துள்ளனர். அனைவரும் நாகர்கோயில், மதுரை மற்றும் சென்னை பாஷைகளில் பேசியுள்ளனர். சுமார் இரண்டுமணி நேரம் மூளை சலவை செய்துள்ளனர். அவர்கள் கூறியவைகளாவது,

இந்த நாட்டு மாட்டை வைத்து நீங்கள் முன்னேற முடியாது,
உங்கள் காளை மாடுகளை எங்களிடம் விற்றுவிடுங்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறோம்.
கிர், தார்ப்பார்க்கர் போன்ற வடநாட்டு மாட்டு ஊசிகளை இலவசமா தருகிறோம்; உங்கள் நாட்டு மாடுகளுக்கு இதனை இட்டு கலப்பின மாடுகளை உருவாக்குங்கள்
அய்யர் (குலகுரு) போலி. யாகங்கள் செய்யறது ஒண்ணுக்கும் பயனில்லை. அவரை வைத்து கோ பூஜை பண்றது தப்பு,
ஏசுதான் மாட்டுக்கொட்டாயில் பிறந்தார். அவர்தான் நம்மை காக்க முடியும்,
இலவசமா போர்வெல் (ஆழ்துளை கிணறு) போட்டுத்தருகிறோம்.
இலவசமா உங்க வீட்டுக்கு ஜன்னல் அமைத்துத்தருகிறோம்,
வாரம் ஒருமுறை எங்கள் பாதர் வந்து ஜபம் செய்வார். அவர் வரும் நேரங்களில் கிடைக்கிற வருமானம் அனைத்தும் உங்களுக்குத்தான்,
உங்களது இடத்தில் இருபது சென்டில் எங்களுக்கு இடம் ரெஜிஸ்டர் செய்து வைக்க வேண்டும்,
உங்களது மாட்டு அர்க்கம், சோப்பு, ஷாம்பு போன்றவற்றை உலகம் பூரா மார்கெட்டிங் பண்ணித்தருகிறோம்,
உங்களுக்கு எவ்வளவு காசு வேண்டுமானாலும் தருகிறோம்.

இப்படியெல்லாம், ரெண்டுமணி நேரம் அந்த விவசாயியை வீட்டு மாட்டு கொட்டகையில் வைத்து பேசியுள்ளார்கள். விவசாயி போன் பேச அனுமதிக்கவில்லை. எட்டு பேரும் சுற்றி நின்று மிரட்டல் தொனியிலேயே பேசியுள்ளார்கள். விவசாயி செய்வதறியாது அவர்கள் கூறுவதை கேட்டுகொண்டு இருந்துள்ளார். இவ்வளவு நேரம் பேசிக்கொண்டுள்ளோம் ஒரு இளநி போட்டு தாங்க என்று கேட்டுள்ளனர். உடனே, விவசாயி என்னிடம் இளநி போட தென்னை மரமில்லை என்று பதிலளித்துள்ளார். உடனே, அவர்கள் உங்களிடம் இத்தனை ஏக்கர் இருக்கிறது. இத்தனை தென்னை மரங்கள் இருக்கிறது என்று சரியாக கணக்கு வைத்துக் கூறியுள்ளனர். விவசாயி தன்னைப்பற்றி இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்துள்ளனரே என்று நினைத்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் நாங்கள் மீண்டும் வருவோம் என்று கூறி விட்டு சென்றுள்ளனர்.

பத்து நாட்கள் கழித்து பெருந்துறையிலிருந்து போன் செய்து நாங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று கூறியுள்ளார்கள். விவசாயி அவர்களை வரச்சொல்லிவிட்டு முதல்முறை பேச்சுவார்த்தையின் போதே மிரட்டும் தொனியில் பேசிய அவர்களின் நடவடிக்கையை மனத்தில் கொண்டு அவர்களுடன் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம் என்ற எண்ணத்தில் ஊர்மக்களை அழைத்து வைத்திருந்தார். இதற்கிடையில் மீண்டும் அவர்கள் போன் செய்து ““ஊர்மக்களை திரட்டி வைத்துள்ளாய். நீ திருந்த மாட்டாய். நீ எங்களிடம் திரும்பி வருவாய். எங்கள் உதவி உனக்கு தேவைப்படும்” என்று கூறி போனை கட் செய்துவிட்டனர்.

பாரம்பரியத்தையும், காளைகளையும் ஒழிக்க திட்டம்
மதமாற்றம் செய்வது கிறிஸ்தவர்களின் நோக்கமாக இருந்தாலும், கொங்க காளைகளை வாங்க மூன்று லட்சம் ரூபாய் பாதிரிகளுக்கு எங்கிருந்து வருகிறது? காளைகளை ஏன் வாங்க நினைக்கிறார்கள்? வாங்கிய மாடுகள் எங்கே போகிறது? ஏன் வடநாட்டு மாடுகளை கலப்பினமாக்க நினைக்கிறார்கள்? போன்றவை யோசிக்கவேண்டியவை. குலகுரு செய்யும் கோ பூஜையை தடுக்க நினைக்கின்றனர்.

குலகுரு, பசு, காளைகள் போன்றவைகள் நாட்டில் பெருகுவதை அவர்கள் விரும்பவில்லை. மேன்மேலும், கலப்பினங்களை வலியுறுத்துவதிலேயே வந்தவர்கள் குறியாக இருந்துள்ளார்கள். நாட்டு காளைகளை ஒழித்து கிராமத்தில் நாட்டு மாடுகள் இனவிருத்தி ஆகக்கூடாது என்பது அவர்களது எண்ணம். நாட்டு மாடுகளை வளரவிடகூடாது என்று கிறிஸ்தவர்கள் குறியாக இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஜல்லிக்கட்டு தடை கூட இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஜல்லிக்கட்டு இருப்பதாலேயே நாட்டு காளைகளை இனவிருத்தி செய்து நல்ல முரட்டு காளைகளை உருவாக்க இளைஞர்கள் முயற்சிக்கின்றனர். இதனால், பொலிக்காளைகள் நாட்டில் இருப்பதால், நாட்டு காளைகள் இனவிருத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வேண்டுமெனில், நாட்டு காளைகளை பூண்டோடு அழிக்க வேண்டும். இருக்கவே இருக்கிறது புளூ கிராஸ் மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகள். அவைகளை வைத்து சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடுகிறார்கள். அதற்கு நிதியுதவி கூட பெறப்பட்டிருக்கலாம். ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும். காளைகள் அடிமாட்டிற்கு விற்கப்படும். நாட்டு காளைகள் பூண்டோடு அழியும். இதுதான் இந்த பின்வாசல் மாபியாக்களின் திட்டம். பசுக்களும், காளைகளும் தெய்வமாக ஜல்லிக்கட்டிலும், கோயிலிலும் கும்பிடப்படும் செயல் குறைந்தால்தான் மக்கள் தங்கள் கலாச்சாரத்தை விட்டு சந்தைகலாச்சாரத்திற்கு மாறுவார்கள் என்ற நோக்கமும் உள்ளே இருக்கலாம். நமது கலாச்சாரத்தை முற்றிலும் அழிக்கவேண்டும் என்று மிக நீண்டகாலமாக கிறிஸ்தவர்கள் சதி அதை பல வழிகளிலும் நிறைவேற்றி வருகிறார்கள். அரசாங்க துறைகளை உபயோகித்து கலப்பின ஊசிகளை இட்டு நமது நாட்டு பசு இனங்களை சீரழித்தனர். கலப்பின பயிர்களை உண்டாக்கி நமது பாரம்பரிய நெல் ரகங்களை அழித்தனர். முற்போக்கு கம்முனிச, திராவிட கும்பலை உருவாக்கி நமது மக்களின் மனத்தை கெடுத்து நமது குருமார்கள் மீது நாம் வைத்திருந்த மரியாதையை கெடுத்து குருமார்களை துவேசித்து ஒதுக்கி நம்மை முன்னோர் சாபங்களை பெற வைத்தனர். இப்படியாக பல்வேறு கோணங்களில் சதிவலை நம்மேல் பின்னப்பட்டுள்ளது. விழித்துக்கொள்ளுங்கள் பாரதவாசிகளே!

http://vsrc.in/சமூகம்/item/266-நாட்டு-காளைகளை-குறி-வைக்கும்-மதமாற்ற-கும்பல்/itemid-140

No comments:

Post a Comment