Monday 31 March 2014

பஞ்ச காலத்தில் பசு

பாருங்கடா!பஞ்சம் விடியாத பாவி பயல்களா..!

தன் குழந்தை சோறில்லாமல் இருக்கும் நிலையிலும், தன் வயிர்த்ருப்பாடு தீராமல் சாகும் நிலையிலும் இந்த பெருமகன் தன் பசுவை விற்கவோ, அடித்து தின்னவோ இல்லை.. இவர்தான் உண்மையான விவசாயி, நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை இதுதான்.. 

பசுக்கள் நம் வீட்டின்/குடும்பத்தின் அங்கம.. அதை வணிக பொருளாக நினைத்தால் பெரிய பாவம்..

குறிப்பு:பசுக்கள் என்றால் நாட்டு பசுக்கள் மட்டுமே.

Sunday 30 March 2014

முஸ்லிம் கோ ரக்ஷக் சம்மேளன்

முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் இயக்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த “முஸ்லிம் கோ ரக்ஷக் சம்மேளன் (முஸ்லிம் பசுப்பாதுகாப்பு மாநாடு) இரண்டு நாள் மாநாடு, மக்கள் மற்றும் சுற்றுசூழல் நலன்களை கருத்தில்  கொண்டு பசுவை தேசிய விலங்காக அறிவித்து பசுக்கொலையை பூரணமாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய சர்க்காரை வலியுறுத்தியது. இந்த மாநாட்டின் தீர்மானங்கள் மூலம் மு.ரா.ம. புதிய சரித்திரத்தையே படைத்துள்ளது. முஸ்லிம்களும் பசுக்கொலையும் பிரிக்க இயலாதது என்ற அபோதுக்கருத்தை உடைத்து முஸ்லிம் மனோபாவத்தின் புதிய பரிணாமத்தை இம்மாநாடு திறந்துள்ளது.

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பிரதேஷ், ம. பிரதேஷ், சட்டிஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இரநூருக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.



இம்மாநாட்டின் தீர்மானங்களை கூட்டதில் படித்த மாநாட்டின் புரவலர் திரு.இந்ரேஷ் குமார், இந்த சிக்கலான விஷயம் குறித்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் இவ்வளவு  துணிச்சலாக தங்கள் கருத்துக்களையும் உண்மைகளையும் பகிர்ந்து கொண்டமை குறித்து பாராட்டு தெரிவித்தார்.

·  முஸ்லிம்களால் நடத்தப்படும் உலகின் முதல் பசு பாதுகாப்பு மாநாடு என்று குறிப்பிட்ட அவர், 1857 ஆண்டு கடைசி முகலாய அரசரான பகதூர் ஷா பசுவதையை முற்றிலும் தடை செய்தார் என்று தெரிவித்தார். மேலும், பாரதத்தில் ராமராஜ்யம் ஏற்பட பசுப்பாதுகாப்பை வலியுறுத்திய மகாத்மா காந்தியின்  உறுதியான நிலைப்பாடு மற்றும் நம்பிக்கை குறித்து நினைவூட்டிய அவர், காந்திய வழியில் செல்வதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பசுக்களை கொல்ல கதவுகளை திறந்து விட்டதை குறிப்பிட்டார்.

·         தீர்மானத்தில், பசுக்களை கொலை செய்வதை பூரணமாக தடை செய்தும், அந்த தடையை தீர்க்கமாக அமுல்படுத்த வலிமையான மத்திய சட்டமும் கோரப்பட்டது. பசு அகில உலகின் தாய் என்றும், மு.ரா.ம. ஐக்கிய நாடுகள் சபையை அணுகி, மனித சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு அதன் உறுப்பினர் நாடுகளில் பசுக்கொலையை தடை செய்ய வலியுறுத்தும்படியும் அழுத்தம் கொடுக்கப்போவதாக தீர்மானித்துள்ளது.

·         கிறிஸ்தவம், இஸ்லாம், ஜூடாஸ்ம், புத்தம், சமணம், சீக்கியர் உட்பட பல்வேறு மத தலைவர்களும், மனித சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பை வலியுறுத்தி செய்திகள் வெளியிட வேண்டும் என்றும், மத்திய-மாநில  அரசுகள் பசுக்கள் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிக்கவும், இயற்கை வேளாண்மையை பிரபலப்படுத்தி அதன் சந்தை வாய்ப்புக்களை பெருக்கவும் வசதிகள் செய்து தர கோரியது.

·         மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவும் வருங்காலத்தில் ஆக்கிரமிக்க முடியாதவாறு வலிமையான சட்டங்கள் இயற்றவும், பசுமாமிசம் ஏற்றுமதியையும், பசுவதைக்கூடங்களையும் முழுமையாக தடை செய்து மூடிவிடவும் மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.


·         மாநாட்டின் உறுப்பினர்களை பசு சேவைக்கென தங்களின் நேரத்தை அர்ப்பணிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதோடு, மத்திய சர்க்கார் ய்ர்ப்பாட்டில் மாவட்ட அளவு வர தேசம் முழுவதும், பசுப்பாதுகப்ப்புக்கென ஒரு கமிஷன் ஏற்பாடு செய்யப்பட்டு, பசு நலன் குறித்த நடவடிக்கைகளும் பசு சார்ந்த இயற்கை வேளாண்மை மற்றும் இதர நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட வலியுறுத்தப்பட்டது.

·         மேலும், புனித குரானில் முதல் அத்யாயம் “சுரா பக்ரா பசுக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை நினைவூட்டினர். மேலும் இறைதூதர், நோய்கள ஏற்ப்படுத்தும் என்பதால் பசுமாமிசம் உண்பதை தடை செய்ததையும் அதே நேரம் பசுவின் பால் நெய் போன்றவை ஆரோக்கிய நற்குணங்கள் நிரம்பியவை எனவே அவற்றை அதிகளவில் பயன்படுத்தவும் உத்தரவிட்டதை குறிப்பிடப்பட்டது.

·         கடந்த 1432 ஆண்டுகளாக புனித மெக்காவில் பசுக்கள் பலியிடப்படவே இல்லை. எனவே பசுக்கொலை பிரச்னை அரசியல் பிரச்னை தான் எனவும், மனித சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் கண்ணோட்டத்தில் தான் அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பாரதத்தின் முதல் இஸ்லாமிய பள்ளியான “தாருல் உலூம் தேவ்பந் பல்வேறு காலகட்டங்களில் பசுக்கொலைக்கு எதிராக பத்வாக்கள் வெளியிட்டுள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.




இந்த தீர்மானங்களை அங்கீகரித்து அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட பலரும் கையெழுத்திட்டனர்.

Tuesday 18 March 2014

எல்லா சாம்பலும் விபூதியா?? - பிரபல பிராண்டுகளில் போலி விபூதிகள்

நம் தேசத்தில் திருநீருக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. மருத்துவம், ஆன்மிகம், அன்றாட வாழ்வு என்று அனைத்திலும் இரண்டற கலந்தது திருநீறு. ஆனால், இன்றளவில் நாம் உண்மையான விபூதியை பயன்படுத்தி அதன் பலன்களை அனுபவிக்கிரோமா என்றால் இல்லை. காரணம் போலி பொருட்கள். உண்மையான விபூதியில் கலப்படம் செய்தால் கூட ஒரு அர்த்தம் உண்டு; ஆனால் இங்கு விபூதி என்று விற்கப்படும் சாம்பல் விபூதியே அல்ல எனபதுதான். இங்கு வேடிக்கை என்னவென்றால் போலி பொருள் விலை அதிகம்; ஆனால் உண்மையான விபூதி விலை குறைவாக விற்பதுதான்!




திருநீறு என்பது நாட்டுபசுவின் சாணத்தை உருண்டை பிடித்து தட்டி காயவைத்து அடுக்கி நெல் கருக்கை கொண்டு ஸ்புடம் போட்டு தயாரிக்கப்படுவதே. இதற்கு பல விதிமுறைகளும் வழிமுறைகளும் உண்டு. அவ்வாறு இரண்டு மூன்று நாள் பொடிந்து வரும் சாம்பலை சலித்து எடுத்து வருவதே சுத்தமான விபூதி. இதை இட்டுக்கொள்வதால் பித்தம் உறிஞ்சப்படும் மற்றும் விபூதியின் பலன் என்று சொல்லப்படும் அனைத்து நன்மைகளும் கிட்டும். 



ஆனால் தற்போது விபூதி என்று பிரபல பிராண்டுகள் முதற்கொண்டு பல பிராண்டுகளில் விற்கப்படும் திருநீறுகள் பேப்பர் சாம்பல், கல் பொடி, குப்பைகளின் சாம்பல் என்று நைஸாக வர என்ன என்ன உதவுமோ அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர், சீமை மாட்டின் சாணத்தில் இருந்து விபூதி செய்கிறார்கள்; சிலர் நாட்டுபசுவின் சாணத்தில் கேஸ் எடுத்து நான்கு நாள் ஊறிபோய் வெளியேறும் ஸ்லரி (slurry) கொண்டு விபூதி செய்கிறார்கள். இவை அனைத்துமே தவறானதாகும். இவர்கள் மொழியில் திருநீறு என்பது வெறும் சாம்பல் என்றாகிவிட்டது! இந்த போலி சாம்பலை விபூதி என்று கோயில்களில் இறைவனுக்கு பயன்படுத்துவதோ மக்களுக்கு கொடுப்பதோ பெரும்பாவமாகும். இவற்றை அணிவதால் உடலுக்கு தீங்கே விளையும்.  நல்ல திருநீறு சாம்பலை போலவும் கொஞ்சம் நற நற வென்றே (நன்றாக சலிக்கப்பட்டால் இன்னும் கொஞ்சம் நைசாக)  இருக்குமே ஒழிய, வெள்ளை வெளேர் என்றும் மிக மிக நைஸாகவெல்லாம் இருக்காது. 

சுத்தமான விபூதி வேண்டுவோர், நாட்டுப்பசுக்களை வைத்துள்ள நல்ல கோசாலைகளை அணுகி, சுத்தமான விபூதியா என்று உறுதி செய்து வாங்கி பயன்படுத்தவும். கோயில் நிர்வாகிகளிடம் சுத்தமான விபூதியை வாங்கி  கொடுக்குமாறு அறிவுறுத்தவும். அப்படி சுத்தமான விபூதி வேண்டுவோர், வெளியில் வாங்க இயலாதோர் +91 88837-40013 எண்ணை தொடர்பு கொள்ளவும். சுத்தமான விபூதி கிடைக்கக் ஏற்ப்பாடு செய்வார்.

Friday 14 March 2014

தமிழக சர்க்காரின் அறிவுறுத்தலும் காவல் துறையின் மெத்தன போக்கும்

தமிழக சர்க்காரின் கால்நடைத்துறை 2012 டிசம்பர் மாதத்திலேயே, எல்லா எஸ்பி, கலக்டர் அலுவலகங்களுக்கும் மிருக வதைகள் சட்டம் மற்றும் கால்நடை போக்குவரத்து குறித்த தகவல்களையும், அதை மீறுவோருக்கும், பசுக்களை ஏற்றி செல்லும் வண்டிகளையும் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்குகள் பதிவு செய்ய சொல்லியும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. RoC No: 64816/J2/2012.

பசு ஆர்வலர்கள், அவரவர் மாவட்டத்தில், இதுவரை எத்தனை வழக்குகள் பதிந்துல்லார்கள். எவ்வளவு பசுக்கள் மீட்கப்பட்டன என்பது குறித்து தகவல் பெரும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க வேண்டும். ஏனெனில், ஒரு முறை மாவட்ட துணை கலக்டருக்கே இந்த சட்டங்களின் ஷரத்துக்களை நம் குழு தான் சொல்லித்தந்தது. நிலை இவ்வாறு இருக்க, இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சாமானிய காவலர்களுக்கு இதை பற்றி அறிய வாய்ப்பில்லை. 

இந்த தகவல் நமக்கு மிக சிறந்த ஆயுதமாகும். இதை கொண்டு அரசாங்கத்தை வேளை செய்ய வலியுறுத்தலாம்.