நம் தேசத்தில் திருநீருக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. மருத்துவம், ஆன்மிகம், அன்றாட வாழ்வு என்று அனைத்திலும் இரண்டற கலந்தது திருநீறு. ஆனால், இன்றளவில் நாம் உண்மையான விபூதியை பயன்படுத்தி அதன் பலன்களை அனுபவிக்கிரோமா என்றால் இல்லை. காரணம் போலி பொருட்கள். உண்மையான விபூதியில் கலப்படம் செய்தால் கூட ஒரு அர்த்தம் உண்டு; ஆனால் இங்கு விபூதி என்று விற்கப்படும் சாம்பல் விபூதியே அல்ல எனபதுதான். இங்கு வேடிக்கை என்னவென்றால் போலி பொருள் விலை அதிகம்; ஆனால் உண்மையான விபூதி விலை குறைவாக விற்பதுதான்!
திருநீறு என்பது நாட்டுபசுவின் சாணத்தை உருண்டை பிடித்து தட்டி காயவைத்து அடுக்கி நெல் கருக்கை கொண்டு ஸ்புடம் போட்டு தயாரிக்கப்படுவதே. இதற்கு பல விதிமுறைகளும் வழிமுறைகளும் உண்டு. அவ்வாறு இரண்டு மூன்று நாள் பொடிந்து வரும் சாம்பலை சலித்து எடுத்து வருவதே சுத்தமான விபூதி. இதை இட்டுக்கொள்வதால் பித்தம் உறிஞ்சப்படும் மற்றும் விபூதியின் பலன் என்று சொல்லப்படும் அனைத்து நன்மைகளும் கிட்டும்.
ஆனால் தற்போது விபூதி என்று பிரபல பிராண்டுகள் முதற்கொண்டு பல பிராண்டுகளில் விற்கப்படும் திருநீறுகள் பேப்பர் சாம்பல், கல் பொடி, குப்பைகளின் சாம்பல் என்று நைஸாக வர என்ன என்ன உதவுமோ அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர், சீமை மாட்டின் சாணத்தில் இருந்து விபூதி செய்கிறார்கள்; சிலர் நாட்டுபசுவின் சாணத்தில் கேஸ் எடுத்து நான்கு நாள் ஊறிபோய் வெளியேறும் ஸ்லரி (slurry) கொண்டு விபூதி செய்கிறார்கள். இவை அனைத்துமே தவறானதாகும். இவர்கள் மொழியில் திருநீறு என்பது வெறும் சாம்பல் என்றாகிவிட்டது! இந்த போலி சாம்பலை விபூதி என்று கோயில்களில் இறைவனுக்கு பயன்படுத்துவதோ மக்களுக்கு கொடுப்பதோ பெரும்பாவமாகும். இவற்றை அணிவதால் உடலுக்கு தீங்கே விளையும். நல்ல திருநீறு சாம்பலை போலவும் கொஞ்சம் நற நற வென்றே (நன்றாக சலிக்கப்பட்டால் இன்னும் கொஞ்சம் நைசாக) இருக்குமே ஒழிய, வெள்ளை வெளேர் என்றும் மிக மிக நைஸாகவெல்லாம் இருக்காது.
சுத்தமான விபூதி வேண்டுவோர், நாட்டுப்பசுக்களை வைத்துள்ள நல்ல கோசாலைகளை அணுகி, சுத்தமான விபூதியா என்று உறுதி செய்து வாங்கி பயன்படுத்தவும். கோயில் நிர்வாகிகளிடம் சுத்தமான விபூதியை வாங்கி கொடுக்குமாறு அறிவுறுத்தவும். அப்படி சுத்தமான விபூதி வேண்டுவோர், வெளியில் வாங்க இயலாதோர் +91 88837-40013 எண்ணை தொடர்பு கொள்ளவும். சுத்தமான விபூதி கிடைக்கக் ஏற்ப்பாடு செய்வார்.
No comments:
Post a Comment