Tuesday 31 December 2013

அடிமாடுகள் சொல்கின்றன

நாங்கள்
நரப் பூச்சிகளின்
நன்றி மறுப்பால்
அறுப்புக்குப் போகும்
அடிமாடுகள்

வயதான ஒருவன்
நோய் வந்த நண்பன்
பால் வறண்ட ஒருத்தி
முடமான முரடன்
நகரும் பொட்டலமாய்
சாகுமிடம் நோக்கி
நான்கு நாட்கள்
நீரில்லாமல்
நின்றபடி பயணம்
கால் தோய்ந்து
சாய்ந்து கொள்ள
சக மாட்டு முதுகுகள்
வயிறு காயும்
முதல் நாள் மட்டுமே
மலஜலம் அவதி
உழைப்பை உண்ட பின்
உடம்பையும் கூறு கேட்டாய்
பால் மட்டும் போதாதென்று
உதிரமும் உறிஞ்சக் கேட்டாய்
செத்தும் கொடுக்கிறோம்
சுவைத்துக் கொள்ளுங்கள்
ஆனால் எங்கள்
மரணப் பயணத்தை
சிறிதேனும்
மரியாதைப் படுத்துங்கள்
போன ஆண்டு பொங்கலுக்கு
பொட்டிட்டுப் பூ வைத்து
கடவுளாய் படையல் இட்ட
நீயே வெட்டி இருந்தால்
நிம்மதியாய் செத்திருப்பேன்


--முகநூல் வழி கிடைத்த கவிதை 


Friday 27 December 2013

ஆலயம்



ஆலயம் – ஆ(நாட்டு பசு) + லயம் – பசு தன்னை மறந்து லயித்து பால் சுரந்த இடமே ஆலயம்.
கோயில் – கோ(நாட்டு பசு)+இல் – பசு இருக்கும் இடம்

மேலே உள்ள சிற்பங்களை நீங்கள் பல கோவில்களில் கண்டிருப்பீர்கள். கோவில் கருவறை உள்ள இடத்தை நாட்டு மாடோ, சித்தர்களோ, (ஞானிகள்-பெரும் வீரம் தியாகம் கற்பு நெறியில் சிறந்து விளங்கிய பெண்கள் போன்றோரின்) ஜீவசமாதி போன்ற  விஷயங்கள் தான் தீர்மானிக்கும். நம் விருப்பத்தின் படி கருவறை மாற்றப்பட்டால் அங்கு தெய்வ சக்தி இராது. கருவறையில் நல்லெண்ணெய் தீபம் மூலமே வெளிச்சம் இருக்க வேண்டும் (புகழ் பெற்ற கோவில்களை எண்ணி பார்க்கவும்). கருவறைக்குள் டைல்ஸ் கிரானைட் போன்றவற்றை போட கூடாது. இறைவன் திருவுருவம் பச்சை கற்பூரம், நாட்டு பசுவின் நெய் தீபம், நல்லெண்ணெய் விளக்கொளியில் தான் தீபாராதனை காட்ட வேண்டும்!

கோவில் என்பது ஆன்ம பலத்தை பேருக்கும் பொருட்டு உள்ள இடம். கருவறையை சுற்றி அந்த அந்த தெய்வத்தை பொறுத்து (சிவன்-விஷ்ணு-முருகன்-அம்பிகை-காளி) ஆகம விதியின் படி கோவில் அமைக்கப்பட வேண்டும்.

Monday 9 December 2013

ராபர்ட் கிளைவ் மரணம்


ராபர்ட் கிளைவ் என்ற வெள்ளையன் தான் முதன் முதலில் பாரதத்தில் பசுக்கொலைக்கூடங்களை நிறுவினான். அவற்றை இன்றளவும் நேரு முதற்கொண்டு அவர் வம்சாவழியினர் பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவின் சுயசார்பு சமூக பொருளாதார கட்டமைப்பும், இயற்கை விவசாயம், ஆரோக்கியம் என அனைத்துக்கும் நாட்டு பசுக்களே முதுகெலும்பாக உள்ளதை உணர்ந்த கிளைவ் பசுக்களை அழிக்க வகுத்த திட்டம் இன்றளவும் நடந்து வருகிறது. இடையில் வெள்ளைக்காரனின் அடிவருடிகளாக இன்றலவுமுள்ள ஆட்சியாளர்கள் பலரும் இந்த சதிக்கு துணையாக உள்ளனர்.

சரி, இந்த மாபாதகன் ராபர்ட் கிளைவின் முடிவு எப்படிப்பட்டது என்று அறிந்தால் நமக்கு கொஞ்சம் ஆறுதலும், இன்றும் பசுக்கொலைக்கு ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கும் திராவிட, கம்யுனிஸ, முற்போக்கு தேச துரோக  கும்பல்களுக்கும் மற்றும் வெள்ளைக்காரன் வீசிய எலும்பு துண்டுகளை இன்றளவும் கடித்துக்கொண்டிருக்கும் துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவும் இருக்கும். 

ராபர்ட் கிளைவ் என்னதான் நரித்தனமாக பல போர்களை வென்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு பலமான அடித்தளம் போட்டிருந்தாலும், பசுக்கொலை கூடங்கள் நிறுவிய சிறிது காலத்திலேயே அவனது அழிவு காலம் துவங்கி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி அவனது செல்வாக்கு சரிய துவங்கியது. உள்ளூர் ஜமீன்கள் மன்னர்கள் துணையையும் மீறி இவனது ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்து ஊருக்கு திரும்பினான். அங்கு அவன் லஞ்சம வாங்கி கொள்ளையடித்த கதை வெளிவரவே அங்கும் எந்த செல்வாக்கும் அற்றவனாக மாறிப்போனான். கையிருப்பு நிதியும் வீழ துவங்கியது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என தூக்கமின்றி தவிக்க துவங்கினான். மனச்சிதைவு நோய்க்கு ஆளானான். பேசக்கூட ஆளில்லாத நிலைக்கு வந்தான். தூக்கம் வர தூக்க மாத்திரை ஊசி என்று போக ஒரு கட்டத்தில் அதுவும் பயனின்றி போக போதை மருந்துக்கு போனான். போதை மருந்து இல்லாமல் தூக்கமில்லை என்ற நிலைக்கு சென்றான். நரம்புகள் வலுவிழந்தது. உடல் ஒத்துழைக்க மறுத்தது. நடக்கவும் முடியவில்லை. உணவு தயாரிக்க முடியவில்லை. போடவும் ஆள் இல்லை. சிலர் பரிதாபப்பட்டு கொண்டு வந்த உணவை விழுங்க கூட இயலவில்லை. கஷ்டப்பட்டு நாட்களை நகர்த்தினான். தன்னை கொன்றுவிடுமாறு கதறி கெஞ்சினான். தூங்க முடியவில்லை, உண்ண இயலவில்லை, நடக்கக்கூட முடியாது என நரகத்தில் சித்ரவதை அனுபவித்தான்.

தற்கொலை செய்தால் அவன் மதம் ஏற்றுக்கொள்ளாது. சர்ச்சில் புதைக்கக்கூட அனுமதிக்காது என்பதால் சாவுக்கு ஏங்கினான். ஒரு கட்டத்தில் வலியின் கொடுமைகள் தாங்காமல் தனது கழுத்தை தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போனான். ரத்தம் உறைய காணவும் ஆள் இன்றி கிடந்தான். இவனது கொடூர சாவு, பசுக்கொலைக்கு துணை செல்லும் அத்தனை பேருக்கும் ஒரு சாவு மணி!

தெய்வம் நின்று கொல்லும்!


Thursday 31 October 2013

100% மானியத்தில் உம்பலச்சேரி நாட்டு பசுக்கள்



மண்ணின் வளம், தட்ப வெப்பம், அங்கு விளையும் தீவனங்கள் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்ட இன மாடுகளை, நம் முன்னோர் வகைப்படுத்தி வளர்த்து வந்தார்கள். அந்தந்த மாடுகள் வளரும் பகுதிகளை வைத்தே காங்கேயம், மணப்பாறை, உம்பளாச்சேரி என பெயரிட்டு அழைத்தார்கள்! ஆனால், கலப்பின மாடுகளின் வருகைக்கு பிறகு, பாரம்பரிய இனங்களுக்கு கலப்பினக் காளைகளின் உறைவிந்து செலுத்தப்பட்டு பாரம்பரிய இனங்களின் தனித்துவம்.. அழிய ஆரம்பித்துவிட்டது. இத்தகையக் கொடுஞ் சூழலிலும்.. பாரம்பரிய இனங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வரும் விவசாயிகள் தமிழகம் முழுக்கவே ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், காவிரி டெல்டா பகுதியின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான ‘உம்பளாச்சேரி’ இன மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கி, பாதுகாத்து வருகிறார்கள் நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களின் எல்லையோரத்திலுள்ள உம்பளாச்சேரி, கொருக்கை கிராம மக்கள். உம்பளாச்சேரி மாடுகளின் மகத்துவத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால், அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சென்று, இந்த இனத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வரும் இப்பகுதி விவசாயிகள், பெரும்பாலும் உம்பளாச்சேரி ரக மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இப்படித்தான் இருக்கும் உம்பளாச்சேரி!
இதைப் பற்றி பெருமையோடு பேசிய, ‘உம்பளாச்சேரி பாரம்பரிய கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் தீனதயாளன், இந்த பகுதியில் இயற்கையாகவே ‘உப்பளப்புல்’ என்ற  ஒரு வகையான புல் அதிகமாக வளர்ந்திருக்கும். இதை ‘உப்பள் அருகு’ என்று சொல்லுவாங்க. இதுதான் மருவி உப்பளச் சேரி என்று மாறி .. கடைசியில் ‘உம்பளாச்சேரி’ என்று வந்து நிற்கிறது. அதுவே எங்க ஊருக்கும், இந்த பகுதி மாட்டிற்கும் பெயராகிவிட்டது. இந்த மாடுகளை, தெற்கத்தி மாடு, மோழை மாடு, மொட்டை மாடு, தஞ்சாவூர் மாடு எனும் பல பெயர்களில் சொல்லுவாங்க. நெத்தி வெள்ளை, வால்வெள்ளை, கால் வெள்ளை என்பதுதான் இந்த மாடுகளோட அடையாளம். அதாவது.. நெற்றியில் வெள்ளை கலரில் நட்சத்திர வடிவம் இருக்கும். வாலோட நுனிப்பகுதி முழுசுமாகவோ, ஒரு பகுதி மட்டுமோ... நல்ல வெள்ளை கலரில் இருக்கும். காலில் குளம்பிற்கு மேலே வெள்ளை நிறத்தில் வளைய அடையாளம் இருக்கும். குட்டையான, கூர்மையான கொம்பு, குட்டையாக படுக்கை வசமான காது மடல், சின்னதாக அழகாக இருக்கும் அலை தாடி, குட்டையாக இருந்தாலும் பலமாயிருக்கும் கால்கள், சின்னக் குளம்பு, குட்டையான வால், சின்னதாக அதிக இடைவெளியில் இருக்கும் பால் காம்பு, இதுதான் ஒரிஜினல் உம்பளாச்சேரி மாடுகளின் அடையாளம் என நுட்பமாக பட்டியலிடும் தீனதயாளனிடம் 25 உம்பளாச்சேரி மாடுகள் இருக்கின்றன.

தீவனச்செலவே இல்லை!
இதே சங்கத்தைச் சேர்ந்த கொருக்கை பகுதிக்கான தலைவர் ஜானகிராமன், உம்பளாச்சேரி இன மாடுகளுக்குள்ளேயே ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, கணபதியான் மாடு என்று பல உட்பிரிவு இருக்கு. ஆனால்.. இப்ப எங்களால் அதை தெளிவாக அடையாளப்படுத்திச் சொல் முடியவில்லை. இந்த மாடுகளுக்கு தீவனச் செலவே கிடையாது. முழுக்க முழுக்க மேய்ச்சல் மட்டும்தான். ஆனாலும் கூட, மனசு கேக்காமல், தினமும் ஒரு மாட்டுக்கு 2 கிலோ தவிடும், அரைக்கட்டு வைக்கோலும் கொடுப்போம். அதிக நோய் எதிர்ப்பு சக்தி, சோர்வு இல்லாத உழைப்பும்தான் இந்த மாடுகளோட சிறப்பு. டெல்டா பகுதியோட சேறு பத்தி சொல்லவே வேணாம். அப்படிப்பட்ட சேத்தில் தொடர்ந்து 8 மணிநேரம் ஏர் பூட்டி உழுதாலும்.. சோர்வில்லாமல் இருக்கும். இதோட கால் குளம்பு, குதிரையோட குளம்பு போலவே இருக்கும். கால தரையில் வைத்து இழுக்காமல் தூக்கி வைத்து நடக்கும். கிடேரிக் கன்னுகளை 3 வயதில் பருவத்திற்கு வரும். சினை பிடித்ததிலிருந்து 281 – ம் நாள் கன்னு ஈனும். ஒரு பசு... சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனும். தினமும் இரண்டரை லிட்டர் பால் கொடுக்கும். இதில் சத்து அதிகம். 9 லிருந்து 12 மாதம் வரைக்கும் கறவை இருக்கும்.

கோடையில் பராமரிக்கும் கோனார்கள்!
இந்தப் பகுதியில் கிடை சேர்க்கும் கோனார்கள் இருக்காங்க. கோடைக் காலத்தில் பசுந்தீவனம், தண்ணீருக்கு தட்டுப்படாக இருக்கும். அந்த நேரத்தில் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விவசாயிங்க  கஷ்டப்படுவாங்க. அவங்களுக்கு உதவுறதுதான் கோனார்களோட வேலை. தை, மாசியில் நெல் அறுவடை முடிந்ததும், மாடுகளை கோனார்கிட்ட ஒப்படைச்சுட்டால், அவங்க மேய்ச்சி, முறையாக பராமரித்து, கிடைக்கு பயன்படுத்திட்டு.. வைகாசி மாதம் திரும்ப உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவாங்க. இதற்கு ஒரு மாட்டுக்கு கூலியாக 100 ரூபாய் கொடுத்தால் போதும்.எல்லா மாடுகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு கிடையா மேய்ப்பாங்க. ஒரு கிடையில் சுமாராக 500 பசு  மாடுங்களும்.. 2 பொலிக்காளைங்களும் இருக்கும். மேய்ச்சலுக்குப் போகும் போது கிடையில் இரக்கும் காளைகளோட, இணைந்து, பசு மாடுகள் சினை ஆயிடும். பொதுவாக இந்தப் பகுதியில் சாகுபடிக்கு முன்ன கோனார்க்கிட்ட சொல்லி நிலத்தில் கிடை போடுவாங்க. உள்நாட்டில் இருக்கும் நாட்டு இன மாடுகளிலேயே, இந்த உம்பளாச்சேரி மாடுகளோட கழிவில் நல்லது செய்யும் பாக்டீரியா அதிகமாக இருக்குனு சொல்றாங்க. அதனால், மண்ணுக்கு நிறைய சத்து கிடைக்கிறது. ஒரு ஏக்கர் நில்திற்கு, ஒரு நாளைக்கு கிடை போட, 1,600 ரூபாய் கொடுக்கணும். இதன் மூலமாக கோனார்களுக்கும் வருமானம் வந்துவிடும்.

100% மானியத்தில் மாடுகள்!
இந்த இன மாடுகளோட, வேற இனங்களை கலந்துடாக்கூடாது என்பதில் எங்க சங்கம் மிகவும் கவனமாக இருக்கு. இந்த பகுதிகளில் இருக்கும் உம்பளாச்சேரி மாடுகளுக்கு இதே இன மாடுகளோட உறைவிந்தைத்தான் செலுத்தணும் என்று கலெக்டர், முதலமைச்சர்கிட்ட கோரிக்கை வைத்து, வெற்றி அடைந்திருக்கோம்.எங்க சங்கத்தோட முயற்சியால், விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உம்பளாச்சேரி மாடுகளை வாங்கி கொடுத்து இருக்கோம். உம்பளாச்சேரியில் மட்டுமே சுமார் 2 ஆயிரம் மாடுகளும், கொருக்கையில் ஆயிரம் மாடுகளுக்கு மேலையும் இருக்கு. இன்னும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பல ஆயிரம் மாடுகள் இருக்கு. இதை பல லட்சமாக பெருக்கணும் என்பதுதான் எங்க லட்சியம். அதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக செய்துகிட்டு இருக்கோம் என்றார் ஜானகிராமன்.
தொடர்புக்கு
ஜானகிராமன், செல்போன் : 93454 - 48550

Wednesday 30 October 2013

நாட்டு பசு விற்கும்போது

நாட்டு பசு விற்கும்போது:



நாட்டுபசுக்களை வணிக பொருளாக கருதாமல் உங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராக பாருங்கள். உங்களிடம் அதிகமாக பசுக்கள் இருந்தாலும் உங்கள் வீட்டுக்கென்று ஒன்றிரண்டு பசுவை வைத்துக்கொள்ளுங்கள். காலம் காலமாக தலைமுறைகளாக வைத்து பராமரிக்க.. உங்கள் குடும்பத்தின் அங்கமாக.. மிக மோசமான சூழல் தவிர வேறு எந்த சூழலிலும் அதை மட்டும் விற்க வேண்டாம். அப்படி ஒரே ஊரில் பல தலைமுறைகளாக வளரும் பசுக்களுக்கு விலை மதிப்பே கிடையாது! உங்கள் குடும்பத்திற்கே ஆன பசுவாக மாறிவிடும். அப்படி நம் முன்னோர்கள் பசுக்களை வைத்திருந்ததால் தான் திருமண சீதனத்தில் பிறந்த வீட்டு பசுவும் இடம் பெற்றிருந்தது

 (உதாரண-ஆதாரம்: கொங்கு நாட்டின் மங்கள வாழ்த்து).

வரிகள்: கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!

குழந்தை பிறந்து செல்லும் போதும் ஆச்சி மாடு (குழந்தை பாலுக்கான பசு)கொடுக்கும் சடங்கும் இருந்தது.

நீங்கள் நாட்டு பசுக்களை வாங்கும் போதும் விற்கும் போதும், "பசுவை துன்புறுத்தாமல் வைத்து பராமரிப்பேன். எக்காலத்திலும் அடிமாட்டுக்கு விற்க மாட்டேன். மறுபடி விற்கவேண்டிய சூழல் ஏற்ப்பட்டாலும் இதுபோல உறுதி வார்த்தை தருபவருக்கு மட்டுமே பசுவை கொடுப்பேன்" என்று வாக்குறுதி பெறுங்கள்/கொடுங்கள். இது திடீர் என்று சொல்லப்படுவதல்ல. காலம் காலமாக நம் முன்னோர் பின்பற்றியது. இது வெறும் சடங்காக கருதி பொய் சத்தியம் செய்பவனுக்கு கொடுக்காமல் உண்மையிலேயே இவன் பசுவை கொலைக்கு அனுப்ப மாட்டான் என்று நம்பும் நபர்களுக்கு மட்டுமே பசுவை விற்கவும்.

Tuesday 22 October 2013

பசுக்கொலையை நியாயப்படுத்தலாமா..??



மான்களும், புலிகளும் கூடத்தான் ஒருகாலத்தில் வேட்டையாடப்பட்டு வந்தது. அதை மன்னர்களும் செய்தார்கள். வெள்ளையர்களும் ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினர். பல இனக்குளுக்களுக்கு அது குலத்தொழில்-முன்னோர்கள் கலாசாரம் கூட!. ஏன் வேடர் என்ற சாதியே அரசு பட்டியலில் உண்டு. அதற்காக மான்களை/புலிகளை கொல்ல கோருவது இன்றைய சூழலுக்கு ஒப்புமா..??

மான்கள்/புலிகளை போலவே நாட்டு பசுக்களின் எண்ணிக்கையும் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கிறது. பல நாட்டு பசு இனங்கள் மிக மிக அருகி விட்டன. தமிழகத்தில் மட்டுமே முற்காலத்தில் 122 க்கும் மேற்ப்பட்ட நாட்டு பசு இனங்கள் இருந்துள்ளன. தற்போது அது விரல்விட்டு எண்ணிவிடும் அளவு குறுகி விட்டது. புலிகளின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு அதன் வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது. மான்கள்/புலிகளுக்கு ஒரு நியாயம், பசுக்களுக்கு ஒரு நியாயமா..?

நம் பாரதத்தில் பசுக்களை வெறிபிடித்தது போல வெட்டி உண்ணும பழக்கம் இல்லை. இறந்த பசுக்களை மட்டுமே உண்டு வந்தனர்; அதுவும் சில இனக்குழுக்கள் மட்டுமே. விலை குறைவு என்று பார்த்தால் மார்சுவரியில் இருக்கும் அநாதை பிணங்கள் பசு மாமிசத்தை விட சீப், நாய்க்கறியும் சீப்பாக கிடைக்கும். ஏன் சும்மாவே கிடைக்கும். சீப் என்று பார்த்தால் தற்போது இயற்கை வேளாண் பொருட்கள் மரபணு மாற்றப்பட்ட-செயற்கை உரங்கள் கொண்டு விளைவித்த உணவை விட விலை கூடவே இருக்கின்றன-அப்போது மட்டும் பணத்தை பார்க்காமல் இயற்கை உணவை பரிந்துரைப்பது ஏனோ..??

பசு மாமிசம் என்பது வெளிநாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக கையாளப்படும் தந்திரம். இங்கு மற்ற விலங்குகள், ஆன்மிகம் இத்யாதிகளை கொண்டு குழப்பாமல் இயற்கைக்கு, தற்கால சூழலுக்கு நன்மை எது என்று ஆலோசிப்பது சரியான பாதையாக இருக்கும்.

சீமை மாடுகளை வெறி அடங்கும் வரை அதன் மேல் பாய்ந்து பச்சையாக அதன் கறியை கடித்து குதறினாலும் இந்த மாமிச வெறியர்களை யாரும் கேள்வி கேட்க போவதில்லை. அக்கரை நாட்டு பசுக்களின் மீதுதான். நாட்டு பசுக்கள் இருந்தால் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்துகள், மருத்துவம் என பல லட்சம் கோடி வணிகத்துக்கு வேலை இன்றி போகும்!

இவற்றை விட்டுவிட்டு பல்வேறு முகமூடிகளில் திரியும் கம்யுனிஸ்ட்கள் கற்று தந்த குதர்க்கமான கேள்விகளை கேட்டு தன்னை அறிவாளி என்று நிறுவி கொள்ள முனைவதால் எந்த பயனும் யாருக்கும் இருக்கபோவதில்லை.இதை உணர்ந்து நாட்டு பசுக்களை காக்கவும், மீட்கவும் இயற்கை/வேளாண் ஆர்வலர்கள் முன்வர வேண்டும்..!

மேலும்,

எந்த ஒரு மாமிசம் சாப்பிடுவதும் பாவச்செயல் தான் மனித இனம் எந்த ஒரு விலங்கையும் சாப்பிட கூடாது என்பது இயற்க்கை நியதியும் கூட .. எப்படி என்றால். மற்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் விலங்குகள் அனைத்தும் (உதாரணமாக சிங்கம், புலி,நரி,சிறுத்தை,நம் வீட்டில் வளர்க்க படும் நாய்) வரை தண்ணிரை நாக்கினால் நக்கித்தான் குடிக்கும். ..

இதுவே சைவ உணவை மட்டும் உண்ணும் விலங்குகளான பசு,ஆடு,யானை,மான் மனிதன் வரை தண்ணீரை வாயினால் உறிஞ்சு மட்டுமே குடிக்கின்றோம். இதில் இருந்தே தெரிய வேண்டும் நம் உணவு சைவம் என்பதே.. நாம் மனிதர்கள் தானே...

அசைவ உணவு என்பதே மனித வாழ்க்கைக்கு புறம்பானது தான். எனவே அணைத்து அசைவ உணவுகளும் தவறானது தான். இதை தடுப்பதற்கு தான் முதல் முயற்சியாக நாம் நம் நாட்டு விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள நாட்டு பசுக்களை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று போராடி வருவது... ஏன் என்றால் நாட்டு பசுக்களை காப்பாற்றினால் தான் அவைகள் தரும் பொருட்களை வைத்து நமது நாட்டின் இயற்க்கை விவசாயத்தை மீட்டெடுக்க முடியும்..

மேலும் இறைச்சிக்காக ஆடுகளை போலவும், கோழிகளை போலவும் பசுக்களை பண்ணை வைத்து வளர்ப்பது இல்லை. மேலும் பசும் பாலில் உள்ள மகத்துவம் தெரியாதவர்கள் தான் எருமை மாட்டின் பாலையும் பசும் பாலையும் சமமாக பார்ப்பார்கள். இவர்கள் பாலையும் கள்ளையும் கூட ஒன்று தான் என்று சொல்ல்வார்கள் போல..

எருமை மாட்டின் பாலை தொடர்ந்து குடித்தால் என்ன என்ன தீமைகள் வரும் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது .அதேபோல் பசுவை பாலுக்காக மட்டுமே வளர்ப்பது அதன் பால் வற்றிய உடன் அடிமாட்டிர்க்கு அனுப்பவது என்பதெல்லாம் பசு என்று நினைத்து நம் நாட்டிற்கு கொண்டு வந்த சீமை பன்னிகள் வந்த பின்பு தான்.. 

ஏன் என்றால் அவற்றின் சாணம் மற்றும் மூத்திரத்தை கண்ணால் கண்டால் கூட நோய் கிருமிகள் தொற்றி விடும் அந்த அளவிற்கு அவை உடல் முழுவதும் விஷம் தான்.. எருமை சாணமும் பசுவின் சாணத்தின் மகத்துவத்தில் பாதிகூட கிடையாது. எருமை சாணத்தில் விபுதி செய்து உபயோகம் செய்து பாருங்கள் இந்த உண்மை தெரியும்..

மேலும் பசுக்கள் வளர்ப்பதே பாலுக்காகதான் என்று நம்மை நம்பவைத்தது தான் நம் நாட்டு பசுக்கள் அழிய முக்கிய காரணம்.. எனவே நம் நாட்டு விவசாயத்தின் முதுகெலும்பான நாட்டு பசுக்களை அழிய விடாமல் அவற்றில் கிடைக்கும் பொருட்ட்களை வைத்து இயற்க்கை விவசாயம் செய்து வந்தேறி அசைவ உணவு பழக்கங்களை படி படியாக வெளியில் அனுப்புவதே சரியாக படும்.. மேலும் நமது விவசாயமும் நம் நாட்டு பசுக்களும் வேறு வேறு இல்லை என்பது தான் உண்மை.. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ளும் வரை பசுக்கொலையை நாம் ஆதரிப்பது தவறு தான்.

Monday 21 October 2013

குஜராத் பக்ரீத் குர்பானி

“இது காஷ்மீர் அல்ல; நீங்கள் பிடித்து வைத்திருக்கும் காவலர்களை கொல்வீர்கள் என்றால் கொன்றுபோடுங்கள்; அதற்குப்பிறகு என்ன செய்யவேண்டுமோ அதை எங்களுக்குச் செய்யத்தெரியும்; ஆனால் நாங்கள் கைது செய்திருக்கும் பசுவதையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய மாட்டோம்.” - சந்தீப் சிங் DSP, வதோதரா, குஜராத்.

குஜராத் மாநில வதோதராவில் சன்ஸ்ரோட் எனும் கிராமத்தில் பெரும்பான்மையினரான முஸ்லிம்கள் பக்ரித் விருந்துக்கு பசுக்களை கொன்றுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சோதனையிட்டு நான்கு கொலையாளிகளைக் கைது செய்தபோது, மசூதியிலிருந்து எச்சரிக்கை ஒலியெழுப்பி 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் வந்து காவல்துறையினரைத் தாக்கியுள்ளனர். 3 காவலர்களைக் கடத்திச் சென்று அவர்கள் மிரட்டியபோதுதான் வதோதரா டி.எஸ்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பின்னர் குஜராத் போலீஸிடம் தங்கள் பச்சா பலிக்காது என்று தெரிந்தவுடன் 3 காவலர்களையும் விடுவித்துள்ளனர் முஸ்லிம்கள். குஜராத் காவல்துறைக்கு நம் பாராட்டுகள்.

ஆனால் அதற்கு ஒருதினம் முன்பு சென்னை அருகே செங்குன்றம் காவல் எல்லையில் ஹிந்து முன்னணியினர் 4 பேர், பக்ரித் பலிக்கு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 42 பசுக்களைக் காப்பாற்றி செங்குன்றம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தபோது, அவர்களை காவல்நிலையத்திற்குள் அடைத்து வைத்து அவர்களுடைய கைப்பேசிகளையும் பிடுங்கி வைத்துக்கொண்டு, 42 பசுக்கள் கொண்ட லாரியை மீண்டும் செக் பொஸ்டுக்கு அனுப்பி அங்கிருந்து முஸ்லிம்கள் அவற்றை மீட்டுச் செல்லும்படியாக, முஸ்லிம்களுக்கு அனுகூலமாக நடந்துகொண்டுள்ளது தமிழக்க் காவல்துறை.


Thursday 3 October 2013

தினமும்..

வீட்டிலோ அருகிலோ பசு இருந்தால், உங்கள் உணவின் முதல் பிடி சாதத்தை பசுவுக்கு எடுத்து வைத்து கொடுங்கள். எல்லா தெய்வங்களும் திருப்தி அடையும். உங்கள் நாள் லட்சுமி கடாட்சத்தொடு துவங்கும். பல பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். இது நம் முன்னோர் பின்பற்றிய வழக்கம் கூட (இடையில் மறக்கடிக்கப்பட்டது!)

Thursday 26 September 2013

ஏன் பசு மாமிசம் கூடாது?

பாரதத்தில் மாமிச உணவுப் பழக்கம் என்பது காலம்காலமாக சில பிரிவு மக்களிடையே இருந்து வந்துள்ளது. பசுக்களை உண்பதும் கூட மிகச்சில இனங்கள் பின்பற்றின. ஆனால் இவை யாவும் விழாக்கால உணவாகத்தான் இருந்து வந்துள்ளது.



 அசைவ உணவுக்கலாசாரம் பற்றிய பார்வை:
கடந்த ஒரு நூற்றாண்டை எடுத்துகொண்டாலும், அசைவ உணவு அடைந்த பரிணாம வளர்ச்சியை கண்கூடாக பார்க்கலாம். முதலில் சில சாரார் மட்டுமே (அதுவும் கோவில் விழாக்களின் போது மட்டுமே) பலிபூஜை  மாமிசம் உண்டு வந்தனர். அந்நிய கலாசாரத்தின் தாக்கத்தால், கோவில் பிரசாதம் என்ற சமாதானத்தோடு, அனைவருக்குமான உணவாக மாற்றப்பட்டது. விழா பிரசாதம்  பின்னர் மாத உணவாக வார உணவாக மாறியது. ஊருக்கு ஊர் கசாப்பு கடைகள் முளைத்தது. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. வீட்டுக்கு வெளியில் தனியே பாத்திரங்கள் கொண்டு (கறிச்சட்டி&வாணசட்டி) சமைத்து உண்டுவிட்டு, பின்னர் தலை முழுகி வீடு மொழுகுவர். மாமிசத்தை குற்றமாக பார்த்த சில பெரும்பான்மை சமூகங்கள் கூட அனைவரும் உண்கிறார்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக்கி பழக்கபடுத்தபட்டனர். வெளியில் இருந்த கரிச்சட்டிகள் சமையலறைக்குள் புகுந்தது. இப்போது வீதிக்கொரு கசாப்புக்கடை, வார வாரம் இல்லை வாரமிருமுறை என மாமிச உணவு, ஊருக்கு ஊர் மாமிச உணவு விடுதி என்று களேபரப்படுகிறது. போதாக்குறைக்கு இன்று முளைத்து வரும் கேஎப்சி, மெக்-டொனால்டு போன்ற வெளிநாட்டு காளான்கள் மாமிச உணவை வாழ்க்கைத்தரத்தின் அடையாளமாக திணிக்கவும் துணிந்து விட்டார்கள்.

இந்த மாமிச உணவுகள் மக்களின் உணர்வுகள், குணங்கள், ஆரோக்கியம், இயற்கை வளங்கள் என அனைத்திலும் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பாரம்பரிய பாரதத்தில் இருந்த ஒழுக்கம்-தர்மம்-கற்பு நெறி சார்ந்த சாத்வீக வாழ்வு தற்போது குறைந்து போக காரணம் மாமிச உணவும் மாற்றப்பட்ட சமூக கலாசார சூழலுமே ஆகும். இவை அனைத்தும் யதார்த்தமாக நடக்கவில்லை. வெள்ளையர்கள் தூண்டுதலால், கிறிஸ்தவம் பரப்பவும், இந்தியா எப்போதும் உணர்வு ரீதியாக வியாபார ரீதியாக மேற்குலகின் அடிமையாக இருக்கவும் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இவற்றின் நோக்கம் பாரத கலாசாரம் தர்ம நெறிகள் உடைக்கபடுதலே. இத்திட்டத்திற்கு திராவிட கம்யுனிஸ கொள்கைகள் வலுச்சேர்த்து அரங்கேற்றின.

இயற்கை
இந்தியாதான் உலகிலேயே பீப் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது. இதை ஏன் பிற நாடுகள் செய்வதில்லை? பசு மாமிசம் என்று எடுத்துக்கொண்டால், பிற உணவுகளை விட பசு மாமிசம் வளர்க்க பெருமளவு நீர் செலவழிக்க வேண்டும். இதை உணர்ந்த வெளிநாடுகள் பீப்பை வளர்த்து தரும் வேலையை இந்தியாவுக்கு தள்ளி விட்டனர். சீனா கூட, அவர்கள் மக்கள் விரும்பி உண்ணும பன்றி இறைச்சியை வளர்க்க நீர் அதிகம் தேவை படுவதால் அதை வெளிநாடுகளுக்கு தள்ளி விட துவங்கியுள்ளது. தற்பொழுது சகஜமாக்கபட்ட கோழி-ஆட்டு கறிகள் போல பசு மாமிசம் சகஜமாக்கபட்டால், நாமக்கல் கோழிப்பண்ணைகள் போல மாமிசத்திற்கான  பசுப்பண்ணைகள் உருவானால், இந்தியா வறண்ட பூமியாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் அனைத்தும் மாமிச பசுக்கள் வளர்க்கவே சரியாக போகும்.






அதே சமயம், குறைந்து போன நாட்டு பசுக்களின் எண்ணிக்கை தற்போது தான் மீண்டு வளர துவங்கியுள்ளது. நாட்டு பசுக்கள் எண்ணிக்கை குறைந்தால் சுற்று சூழலின் நிலைத்தன்மையும் இயற்கை விவசாயமும் கேள்வி குறியாகும் என்பதில் ஐயமே இல்லை.



ஆரோக்கியம்
ஆரோக்கியம் என்று பார்த்தால் பசு மாமிசம் உண்பதால் இதய வால்வுகள் தடிமனாகி இதய நோய்கள மற்றும் மாரடைப்பு வருகிறது என்பதும், குடல் வாலில் நோய் தொற்று ஏற்படுவதும், கார்சினோஜென் எனப்படும் கான்சர் காரணிகளால் புற்றுநோய் ஏற்படுவதும், ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் எனப்படும் ஆண்மை சார்ந்த கேன்சரும், ஊதிப்பெருக்கும் உடல் பருமன், ஸ்ட்ரோக் (பக்கவாதம்) மற்றும் சர்க்கரை நோயும் தாக்கும் என உலகம் முழுவதும் பல அறிஞர்களால் அறிவுறுத்தபடுவட்டு வருகிறது. அதே சமயம் நாட்டு பசுவின் பால், கோமியம், பஞ்சகவ்யம் போன்ற பொருட்கள் மூலம் எண்ணிலடங்கா நன்மைகளை மனித உடலின் அரோக்கியதிற்கும் மருத்துவத்திற்கும் தருகின்றன.

பொருளாதாரம்
பொருளாதார ரீதியாக பார்த்தால் நாட்டு பசுக்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் 70% உர இறக்குமதியையையும் 65% ஆங்கில மருந்துகளையும் தவிர்த்திட முடியும். இதனால் பெருமளவு அந்நிய செலாவணி மிச்சமாகும்.

நிலைமை இவ்வாறு இருக்க சில சமூக விரோத இயக்கங்கள் புரட்சி என்னும் பெயரால் மாட்டுக்கறியை சகஜமாகக துடிக்கின்றன. இவை வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதி. அதுவுமன்றி முற்போக்கு, இயற்கை காவலர் என்றும் உலகின் நண்பர்கள் என்றும் சொல்லிக்கொண்ட இயக்கங்களும் பசு மாமிச வெறியை பரப்புகிறார்கள். இது வெளிநாட்டு முதலாளிகளின் கூலிக்கு மாரடிக்கும் அஜெண்டாவின் ஒரு பகுதி. பசுக்கள் எண்ணிக்கை குறைந்தால் அது வெளிநாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாகவும் இந்திய பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் சாபக்கேடாக முடியும் என்பதும் இந்த புரட்சி பித்தர்களுக்கு தெரியாமல் இல்லை என்பது இவர்கள் இயக்கம் சார்ந்த உண்மைத்தன்மையை ஆராய தூண்டுபவையாகும்.


ஜீவகாருண்யம், ஆன்மிகம், பாரததேச பாரம்பரியம், பண்பாடு போன்றவை பசுகொலையை தடுக்க காரணமாக இருப்பினும், அதற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதங்களான மேற்சொன்ன இயற்கை, ஆரோக்கியம், நீர் தேவை, பசுக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம் போன்றவற்றை முன்னிறுத்தி பசுக்கொலையையும் மாட்டுக்கறி கலாசாரத்தையும் எதிர்க்கவும் ஒழிக்கவும் வேண்டும்.

Sunday 22 September 2013

நம் நாட்டில் ஒழிக்கப்பட வேண்டியவை

இலக்கிய உலகில்-அரசியலில் உள்ள அந்நிய சக்திகள் பற்றி குறிப்பிடவில்லை.


Wednesday 11 September 2013

கொஞ்சம் வரலாறு கொஞ்சும் உண்மைகள்!



பசு இறைச்சி பாரத சமுதாயத்தில் பல காலம் பின்பற்றப்பட்டது என்று பொய்யை பரப்பி வருகிறார்கள்.. பசுக்கொலை காலம் காலமாக பின்பற்றப்படவில்லை! ஏன்? நம் நாட்டில் இறைச்சி கூடங்களே பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வந்தது! ராபர்ட் கிளைவ் ஆல்... முகமதியர் மற்றும் ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் தான் வெறி பிடித்தது போல பசுக்களை கொலை செய்து திண்ணும் மிருகத்தனம் வளர்ந்தது! ஏன் நம் பாட்டிகளை கேட்டால் கூட சொல்வார்கள்.. கறிச்சட்டி என்று தனியே மாமிசதுக்காக இருக்குமாம்.. வீட்டிற்கு வெளியேதான் அந்த சமையல்.. தாத்தா காலத்தில் அதுவும் கிடையாது..

(கறிக்கடைகளின் பெயரை வைத்தே உணர்ந்துகொள்ளுங்கள் - 'கசாப்' கடை - உருது சொல் )

அதற்கு முன்னர் பலிபூஜை போன்ற விழா காலங்களில் மட்டுமே நடந்தது. அந்த பலியிடப்பட்ட மிருகங்களையும் சில சமூகங்களே உண்டன. அனைவரும் மாமிசம் உண்டனர் என்பது பொய். பசுக்கள் இயற்கையாக மரணித்த பின்னரே உணவுக்காக ஒரு சில குடிகள் பயன்படுத்தின. வேதங்களில் பசு மாமிசம் என்று சொல்வதெல்லாம் டுபாக்கூர். கம்யுனிஸ மொள்ளமாறிகள் செய்த சதி வேலைகள்.

(http://agniveer.com/no-beef-in-vedas-ta/)

உலகம்-பாரதத்தின் முதுகெலும்பு விவசாயம். விவசாயத்தின் முதுகெலும்பு நாட்டு பசுக்கள். தன்னிறைவு பெற்ற வாழ்க்கைக்கு நாட்டு பசுக்கள் இன்றியமையாதது. பால் கொடுக்கும் காலம் முடிந்தாலும் கூட அவற்றின் சிறுநீரும் சாணமுமே பொருளாதார வளத்தை உறுதி செய்யும் வருமானம் கொடுக்கும். பொருளாதாரத்தை காரணம் காட்டி பசுக்களை கொல்ல அனுப்புவதை நியாயப்படுத்துவது தவறானது!

பிற கால்நடைகள் மாமிசதுக்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆனால் பசுக்கள் அன்றாட உணவு (பால் பொருட்கள்), விவசாயம், ஆரோக்கியம், மருத்துவம், உழைப்பு உட்பட வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கலந்த ஜீவன். பசுவை மற்ற கால்நடைகளோடு ஒப்பிடுதல் வட்டத்தையும் சதுரத்தையும் ஒப்பிடுவது போல..

ஆரோக்கியம், கிராமமயமாக்கல், தன்னிறைவு பொருளாதாரம், ஒழுக்க வாழ்வு. இவை அனைத்தும் பசுக்கள் இன்றி சாத்தியமில்லை. பசுக்கொலையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. கம்யுனிஸ-காலனித்துவ-இஸ்லாமிய -கிருத்துவ-முற்போக்கு-திராவிட போன்ற விதண்டாவாதம் மற்றும் தேசத்தை அழிக்கும் சித்தம் இருந்தால் நிச்சயம் நியாயப்படுத்தலாம்!!

நன்றி: சசிகுமார் (கால்நடை விற்பனை தகவல் மையம் குழுவில்)

Friday 16 August 2013

வேதங்களில் பசு மாமிசம் கூறப்படவில்லை


“வேதங்கள் கோமாமிசம் உண்பதை வலியுறுத்துகிறது என்னும் கட்டுக்கதையை ஆதாரத்துடன் நிர்மூலமாக்குவோம். மேலும், அஸ்வமேத யாகம், கோமேத யாகம் என்பனவற்றின் உண்மையில் என்ன என்பதையும் பார்ப்போம், வாருங்கள்!”
வேதச் சொற்களின் மூலத்தை, அவை சொல்லப்பட்டிருக்கும் சூழ்நிலை, அதன் சொல்வளம், இலக்கணம்,  மொழி ஆய்வு, மற்றும் வேத மந்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள இன்றியமையாத இன்னபிற வழிகளைக் கொண்டும் செய்யப்பட்ட மிக ஆழமான, எதிலும் சார்பற்ற ஒரு ஆய்வின் விளைவே இக்கட்டுரை.  மேலும், மேக்ஸ் முல்லர், க்ரிஃப்பித், வில்சன், வில்லியம்ஸ் மற்றும் பல இந்தியவியலாளர்கள் வேதங்களையும் அதன் மொழிகளையும் பற்றிப் படைத்தவைகளைக் கண்ணை மூடிக்கொண்டு மறுபதிவு செய்ததில்லை இத்தொகுப்புகள். அவை மேலைநாட்டுக் கல்வியுலகின் பிரபலமான கருத்துக்களாக இருப்பினும் அவை நம்பத்தகுந்த, ஆதாரபூர்வமானவை அல்லஎன்ற நிலைப்பாடு எமக்குண்டு. அது ஏன் என்ற ஆதாரங்களையும் இத்தொகுப்புகளில் காணலாம்.
ஞானத்தின் முதற்புத்தகங்களான வேதங்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்த்து உண்மையை ஆராய்ந்தறியும் கட்டுரைத் தொகுப்பின் முதற்பகுதிக்கு தங்களின் நல்வரவு.
பூமியில்  ஞானத்தின் முதல் வழிவகையான, ஹிந்து தர்மத்தின் வேர்களாகிய வேதங்கள் மனித இனம் ஆனந்தமயமான வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளைச் சொல்வதற்காக ஏற்பட்டது.
நூற்றாண்டுகளாக ஹிந்துக்களின் புனித கிரந்தங்களாகிய வேதங்களில் புனிதமற்ற, தீங்கான கருத்துக்களிருப்பதாக அவதூறு பரப்பப்பட்டது. இக்கருத்துக்களை அப்படியே நம்பத்தொடங்கி விட்டால் ஹிந்து தர்மம், கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியம் இவை காட்டுமிராண்டித்தனம், விலங்கினம் மற்றும் நரமாமிசமுண்ணும் நெறிகள் அன்றி வேறொன்றுமில்லை என எண்ணத் தோன்றும்.
உலகெங்கிலுமுள்ள ஹிந்துக்களை சங்கடப்படுத்தி, அவர்கள் தங்களைத் தாங்களே கீழாக எண்ணச் செய்யும் பொருட்டு இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள்  பல்வேறு தரப்பினரால் பரப்பப்பட்டன. இப்பிரச்சாரங்கள் வேதங்களிலிருந்தே ஆதாரங்களைக் காட்டுவதாய்ப் பீற்றிக் கொண்டன.
இவை ஏழைகள் மற்றும் படிப்பறிவில்லாத இந்தியர்களை அவர்களுடைய தர்மத்தின் ஆதாரமாகிய வேதங்கள் பெண்மையைக் கீழ்த்தரமாக சித்தரிப்பதாயும், பலதாரமணத்தை ஊக்குவிப்பதாயும்,  ஜாதி வெறி பிடித்தவர்களாயும், அனைத்திற்கும் மேலாக பசு மாமிசமுண்ணுபவர்களாயும் காட்ட வெகு வசதியாயிருந்தது. இது அவர்களிடத்தில் வேதங்களின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்ய வெகு செளகரியமாயிருந்தது.
இவை போதாதென்று மிருகங்களைக் கொன்று யாகம் என்ற ஒன்றை செய்பவர்களாயும் சித்தரித்தார்கள். கேலிக் கூத்தாக, பாரதத்திலிருந்து உதித்து, பண்டைய இந்தியாவைப் பற்றி வெகு ஆழமாய்ப் படித்ததாய்ச் சொல்லிக் கொள்ளும் சில அறிவாளிகளும் இந்த மேலைநாட்டு அறிஞர்களின் (?!) கூற்றை ஆதாரமாய்க் காட்டி ஆம், ஆம், வேதங்களில் இவை இருக்க்த்தான் செய்கின்றன என்று மார்தட்டினார்கள்.
வேதங்கள் கோ-மாமிசம் உண்ணுவதையும், பசுவதை செய்வதையும் அனுமதிக்கிறது என்பது ஒரு ஹிந்துவின் ஆத்மாவிற்கே பேரிடியாகும். பசு ரக்ஷணம் என்பது ஹிந்து தர்மத்தின் ஆணிவேராம். இப்படியிருக்கையில் ஆதார ஸ்ருதியான வேதங்களே இவற்றை ஊக்குவிக்கின்றன என்று சொல்லி விட்டு அதிலிருந்து ஆதாரங்களையும் காட்டுவதாய் சொன்னால்? இந்தியன் வெகு எளிதாக குற்றஞ்செய்தவன் போல எண்ணுவான். இவர்களின் பொய்பிரச்சாரத்திற்கு இரையுமாவான்.  இப்படி பல கோடி ஹிந்துக்கள் இப் பொய் பிரச்சாரத்தை அதன் அடிவேரை ஆட்டும் வண்ணம் எதிர்-வாதம் செய்ய இயலாமல், தெரியாமல் மெளனமாக இருக்கிறார்கள், இன்னமும்!!!
இப்பிரச்சாரக் கூட்டம் வெறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு இந்திய மொழியாய்வாளர்களைக் கொண்டது மட்டுமல்ல, ஹிந்துக்களில் ஒரு சாராரே வேதங்களில் சொல்லியிருப்பவையாகக் கண்டதையும் கூறி அவற்றை ஏற்குமாயும் அப்படி ஏற்காதவர் பாதகர்களாவார்கள் என்றும் பசப்பி சமூகத்தில் மெலிவடைந்த பிரிவினரை மிரட்டி  வந்தனர். இந்த புனைச்சுருட்டின் மையமாக மஹிந்தர், உவாத் மற்றும் சாயான் போன்றவர்களின் கருத்துக்களைச் சொல்லலாம், மேலும் தாந்திரிகர்கள் வேதங்களின் பெயரால் தம் புத்தகங்களில் பரப்பியவையும் சேரும்.
நாளடைவில் இப்பொய்கள் நன்கு பரவி மேலைநாட்டு அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மஹிதர், சாயான் போன்றவர்களின் கருத்துக்களை தங்களது அரை வேக்காட்டு சமஸ்க்ருத அறிவைக் கொண்டு மொழிபெயர்த்ததோடு அவற்றை வேதங்களின் மொழிபெயர்ப்பு என்றும் பெயர் கொடுக்கலாயினர்.
ஆனால் இவர்கள் வேதங்களை சரியாகப் புரிந்து கொள்வதற்கும் அறிவதற்கும் முதற்படியாகிய சிக்ஷை (ஒலியியல் அல்லது உச்சரிப்புக் கலை பற்றிய சாஸ்திரம் – phonetics ) , வியாகரணம் (இலக்கணம் – grammar), நிருக்தம் (மொழியியல் அல்லது பாஷாவிலக்கணம் – philology),  நிகந்து (சொல்வளம் – vocabulary), ச்சண்டா (யாப்பிலக்கணம் – prosody), வானியல் அல்லது வானசாஸ்திரம் (astronomy), கல்பஇவைகளைப் பற்றிய அறிவுடையவர்களாக இல்லை.
அக்னிவீர் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் வேதங்களின் மீதுள்ள இவ்வகை தூற்றுதலை தெளிவாகவும், ஆதாரத்துடனும் தகர்த்தெறிந்து அவற்றின் பெருமை, ஞானோபதேசங்கள், அதன் தூய்மை – ஹிந்துக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு மனிதருக்கும், ஜாதி, இன, நிற வேறுபாடுகளின்றி அவை காட்டும் நன்னெறிகளை மீண்டும் நிலைநாட்டுவதே!
பகுதி 1 – மிருகங்களிடத்தில் காட்டும் அஹிம்சை
—————–
யஸ்மிந்த் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத:
தத்ர கோ மோஹா கஹ் சோகாஹ் ஏகத்வமனுபச்யத:
யஜுர் வேதம் – 40.7
“எல்லாவற்றிலும் ஆன்மாவைக் காண்பவர் அதன் புறத் தோற்றத்தில் மயக்கமோ துயரமோ அடைவதில்லை, ஏனெனில் அவர் தன்னிலும் அவைகளிடத்திலும் வேறற்ற தன்மையைக் காண்கிறார்”
—————–
அனுமந்தா விஷசீதா நிஹந்தா க்ரயவிக்ரயீ
சம்ஸ்கர்த்தா சோபஹர்த்தா ச கதாகஷ்சேதி காடகா:
மனுஸ்ம்ருதி – 5.51
“மிருக வதையை அனுமதிப்பவரும், மிருகங்களைக் கொல்வதற்காக கொண்டு வருபவரும், வதை செய்பவரும், மாமிசம் விற்பவரும், அதை வாங்குபவரும், அதிலிருந்து உணவுப் பதார்த்தம் செய்பவரும், அதைப் பரிமாறுபவரும், அதை உண்பவரும் கொலைப் பாதகஞ்செய்தவரே”
—————–
ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்
ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள  மா ஹின்சிஷ்டம்
பிதரம் மாதரம் ச
அதர்வ வேதம் – 6.140.2
“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள்.  இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”
—————–
யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:
கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி
அதர்வ வேதம் – 8.6.23
“நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்”
—————–
அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே
மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:
அதர்வ வேதம் – 10.1.29
“வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்”!
இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?
—————–
அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:
யஜுர் வேதம் – 1.1
“ஓ மனிதனே – மிருகங்கள் அக்ஃன்யா – அழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக”
—————–
பஷுன்ஸ்த்ராயேதாம்
யஜுர் வேதம் – 6.11
“மிருகங்களைக் காப்பீர்”
—————–
த்விபாதவா சதுஷ்பாத்பாஹி
யஜுர் வேதம் – 14.8
“இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்”
—————–
க்ரவி த – க்ரவ்ய (மிருக வதை செய்பவரிடமிருந்து பெறப்பட்ட மாமிசம்) + அத (அதை உண்பவர்) – மாம்ஸமுண்பவர்
பிசாசா – பிசித (மாம்ஸம்) + அஸ (உண்பவர்) – மாமிசமுண்பவர்
அசுத்ர்ப – அசு (ப்ராண வாயு) + த்ர்ப (தன்னைத் திருப்தி படுத்திக் கொள்பவர்) – தன் உணவிற்காக பிற உயிர்களைக் கவர்பவர்
கர்ப த & அண்ட த – கரு மற்றும் முட்டைகளை உண்பவர்
மன்ஸ் த – மாமிசம் உண்பவர்கள்
மாமிசம் உண்பவர்களை எப்போதும் கீழானவர்களாகவே பார்க்கிறது வேத இலக்கியங்கள். அவர்களை ராக்ஷசர்கள், பிஷாசர்கள் என்றெல்லாம் அழைக்கிறது. இவர்களை மேம்பட்ட சமுதாய வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே கருதியிருக்கிறது.
—————–
ஊர்ஜம் நோ தேஹி த்விபாதே சதுஷ்பதே
யஜுர் வேதம் – 11.83
“இரு காலுள்ளவையும் நான்கு கால்களுள்ள ஜீவன்களும் பலமும் ஆஹ்ருதியும் பெறட்டும்”
இம்மந்திரம் பெரும்பாலான ஹிந்துக்களால் உணவருந்துவதற்கு முன் சொல்லப்படும். ஒவ்வொரு ஆத்மாவும் எக்கணமும் நலமுற்று வாழப் பிரார்த்திக்கும் தத்துவம் மிருக வதையை எவ்வாறு அங்கீகரிக்கும்?
லோக சமஸ்தா சுகினோ பவந்து – இந்த மந்திரத்தின் அர்த்தம் தெரியுமல்லவா? சமஸ்த என்றால் அனைத்தும் என்றர்த்தம்.
[பாகம் 2] – வேதங்கள் அஹிம்சையையே போற்றுகின்றன!
யஞங்கள் பலரின் விருப்பமான மற்றும் அவர்கள் பிரபலப்படுத்திய நம்பிக்கைப்படி மிருக வதையைக் குறிப்பதில்லை. யக்ஞம் என்ற சொல் வேதங்களில் ஒரு புனிதமான செயல் அல்லது மிகவுயர்ந்த தூய்மைப் படுத்தும் செயல் என்றே குறிக்கப் படுகிறது.
—————–
அத்வர இதி யக்ஞநாம – த்வரதிஹிம்சாகர்மா தத்ப்ரதிஷேத:
நிருக்தம் 2.7
யாஸ்க ஆச்சார்யரின் கூற்றுப்படி, நிருக்தத்தில் (பாஷாவிலக்கணம்) யக்ஞம் என்ற பதத்தின் ஒரு பொருள் அத்வர என்பதாகும். த்வர என்பது ஹிம்சை அல்லது வன்முறை என்றாகும். எனவே அ-த்வர என்பது அ-ஹிம்சை என்பது தெளிவாகிறது. வேதங்களில் பல இடங்களில் அத்வர பிரயோகம் காணக்கிடைக்கிறது.
—————–
மஹாபாரதக் காலத்திற்குப் பின்னர் வேதங்களைத் திரித்துக் கூறுதல் மற்றும் மற்ற புனித நூல்களில் இடைச்செறுகல்கள் பல நடைபெற்றன. சங்கராச்சாரியார் வேதங்களின் மாண்பை ஒருவாறு மறுபடி நிலைநாட்டினார். சமீப காலத்தில் வாழ்ந்த ஸ்வாமி தயானந்த சரஸ்வதி வேதங்களை அவற்றின் வழிமுறைகளுக்கேட்ப, நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் பொருள்படுத்தினார்.  அவருடைய வேதங்களைப் பற்றிய கருத்து, பொழிப்புரை அடங்கிய இலக்கியங்கள் சத்யார்த் ப்ரகாஷ் என்பவரால் “உண்மையின் ஒளி (Light of Truth), வேதங்கள் ஓர் அறிமுகம் (An Introduction to the Vedas) மற்றும் இன்னும் பலவாறாக மொழிபெயர்க்கப்பட்டுப் பல்கிப் பரவி வேத தர்மத்தின் சார்பில் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கியதோடு வேதங்களைப் பற்றிய கட்டுக்கதைகளைத் தவிடுபொடியாக்கியது.
வேதங்கள் யக்ஞங்கள் பற்றி என்ன கூறுகின்றன பார்ப்போம்..
—————–
அக்னே யம் யக்ஞமத்வரம் விஷ்வத: பரி பூரஸி
ச இத் தேவேஷு கச்சதி
ரிக் வேதம் 1.1.4
ஓ ஒளிர்விடும் கடவுளே! நீங்கள் எல்லா திக்குகளிலிருந்தும் போதிக்கும் அஹிம்சை யக்ஞம் அனைவருக்கும் பயனுள்ளதாகிறது, தெய்வீக நிலைகளைத் தொடுகிறது, மேலும் மேம்பட்ட ஆத்மாக்களால் அங்கீகரிக்கப்படுகிறது.
—————–
ரிக் வேதம் யக்ஞம் என்பதை அத்வர (அஹிம்சை) என்றே எங்கும் குறிப்பிடுகிறது. மற்றைய மூன்று வேதங்களிலும் அங்ஙனமே. இவ்வாறிருக்கையில் வேதங்கள் மிருக வதையை ஊக்குவிக்கிறதென்று எவ்வாறு முடிவு செய்யலாம்?
கால்நடை மற்றும் பசு வதை வேதங்களில் இருக்கிறது என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டு அவை தொட்டு வரும் பெயர்களினாலேயே திரிபடைந்து வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு அஸ்வமேத யக்ஞம், கோமேத யக்ஞம், நரமேத யக்ஞம் முதலியன. மிக அதீத கற்பனையிலும் இச்சொற்களில் வழங்கப்பெறும் “மேத” என்பது “பலி” என்பதாக வழங்கப்படமாட்டாது.
யஜுர் வேதம் குதிரையைப் பற்றி என்ன சொல்கிறதென்ற அற்புதமானதொன்றைப் பார்ப்போம்.
——————————————————–
இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு
யஜுர் வேதம் – 13.48
“மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!”
——————————————————–
அஸ்வமேத யக்ஞம் என்றால் குதிரையைப் பலி கொடுக்கும் யக்ஞம் என்று பொருளல்ல! யஜுர் வேதம் மிகத் தெளிவாகக் குதிரையைப் பலி கொடுக்காதீர் (ம) என்று சொல்லி விட்டது.
ஸப்தபாதத்தில் அஷ்வ என்றால் தேசம் அல்லது சாம்ராஜ்யம் என்று பொருள்படும்.
மேத என்றால் வதை அல்ல. அது புத்திக்கு ஏற்றாற்ப்போல செய்யப்படும் ஒரு காரியம் என்றும் ஒருங்கிணைப்பு அல்லது ஆக்கம் என்றும் பொருள் பட ஏதுவாகிறது. இதன் மூல அர்த்தம்: மேத — மேத்ரு சங்-க-மே
ராஷ்டிரம் வா அஷ்வமேதா:
அன்னம் ஹி கெள
அக்னிர்வா அஷ்வா:
ஆஜ்யம் மேதா:
(ஷத்பதம் 13.1.6.3)
ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தன் உண்மையின் ஒளியில் (Light of Truth) கூறுகிறார்:
“ஒரு சாம்ராஜ்யத்தின் / தேசத்தின் பெருமை, நலன் மற்றும் வளத்தை முன்னிறுத்தி செய்யப்படும் யக்ஞத்தின் பெயர் அஷ்வமேத யக்ஞம் எனப்படும்.”
“உணவைப் புனிதமாக வைக்கவும் அல்லது புலன்களை கட்டுப்பாட்டில் வைக்கவும் அல்லது உணவைப் புனிதமாக ஆக்கவும் அல்லது சூரியனின் கதிர்களை நற்பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும், பூமியை அசுத்தத்திலிருந்து காக்கவும் செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம் எனப்படும்”
ஞானபூமி — இதில் நம் தமிழ் மொழியில் கோமகன் என்றால் கொற்றவன் / மன்னவன் என்றும் கண்டிருக்கிறோம், கோமகன் என்றால் பசுவின் மகன் என்றா பொருள்படும்? ஒரு வேளை மேதாவிலாசம், மேதை என்ற சொல்லும் மேத என்ற சமஸ்க்ருத சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். தமிழ் மொழியும் சமஸ்க்ருதமும் ஒன்றையொன்று வார்த்தைப் பிரயோகங்களை கொடுத்து வாங்கியது என்பது மொழியாய்வாளர்களின் கருத்தே –
“கெள என்றால் பூமி, பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் காக்கவென்று செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம்”
“வேதங்களின் அடிப்படையில் உருவான வழிமுறைகளின் படி இறந்தவரின் உடலை எரியூட்டுவதன் பெயர் நரமேத யக்ஞம்”
[பாகம் 3] – வேதங்களில் பசு மாமிசம் (கோமாம்ஸம்) கூறப்படவில்லை
குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை. மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட்டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.
வேதங்களானது மிருக வதைக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, வெகு தீவிரமாக பசுவதையை எதிர்க்கவும் தடை செய்யவும் செய்கிறது. யஜுர் வேதம் பசுவதையை முற்றிலும் தடை செய்கிறது, பசுக்கள் மனிதருக்கு முற்றிலும் சத்துள்ள உணவைத் தருகிறதென்றும் கூறுகிறது.
——————————————————–
க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி:
யஜுர் வேதம் – 13.49
“பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!”
——————————————————–
ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து
ரிக் வேதம் – 7.56.17
“ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது”
——————————————————–
 சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாம
அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ
ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20
அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது – அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்.
——————————————————–
கெள என்ற பதத்திற்கு அர்த்தமாக அக்ன்ய, அஹி, அதிதி என்ற பதங்களையும் நிகண்டு தருகிறார். யஸ்கரும் இதையே -
அக்ன்ய – கொல்லக் கூடாத ஒன்று
அஹி – வதை செய்யக் கூடாத ஒன்று
அதிதி – துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாத ஒன்று
பசுவின் இம்மூன்று பெயர்களும் மிருகவதை கூடாதென்பதை வலியுறுத்துகிறது. இவை வேதங்களில் மீண்டும் மீண்டும் பசுக்களைக் குறிப்பதாய் வருகிறது.
——————————————————–
அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே செளபாகாய
ரிக் வேதம் – 1.164.27
“பசு – அக்ன்ய – நமக்கு ஆரோக்கியமும் வளமும் கொணர்கிறது”
சுப்ரபாணாம் பவத்வக்ந்யாயா:
ரிக்வேதம் – 5.83.8
“அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம் கிடைக்க மிகச் சிறந்த வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்”
யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா
ரிக் வேதம் – 10.87.16
“மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா அகன்மா
யஜுர் வேதம் 12.73
“அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள் உனக்கு வளங்களைக் கொணர்பவை”
மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா
ரிக் வேதம் 8.101.15
“பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”
அந்தகாய கோஹாதம்
யஜுர் வேதம் – 30.18
“பசுவதை செய்பவர்களை அழி!”
யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்
தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ
அதர்வ வேதம் – 1.16.4
“யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”
வத்ஸம் ஜாதமிவாக்ன்யா
அதர்வ வேதம் – 3.30.1
பிறரைக் – கொல்லப் படக்கூடாத – ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்
தேனு சதனம் ரயீநாம்
அதர்வ வேதம் – 11.1.34
பசுவே அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாம்
ரிக்வேதத்தின் 28 ஆம் சூக்தம் அல்லது 6வது மண்டல ஸ்லோகம் அனைத்தும் பசுவின் பெருமையைப் பாடுகிறது.
ஆ காவோ அக்னமன்னுத பத்ரமக்ரந்த்சீதந்து
ஃபூயோ ஃபூயோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே
ந தா நஷந்தி ந பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ வ்யதிரா ததர்ஷதி
காவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சான்
யூயம் காவோ மேதயதா
மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ:

  1. அனைவரும் பசுக்களை தொந்தரவுகளிலிருந்து காத்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
  2. பசுக்களைப் பராமரிப்பவரைக் கடவுள் ஆசிர்வதிக்கிறார்.
  3. பகைவரேயானாலும் பசுக்களின் மீது எந்த ஆயுதப் பிரயோகமும் செய்யலாகாது.
  4. பசு வதை யாரும் செய்யக் கூடாது.
  5. பசு வளமையும் வலிமையும் கொணர்கிறது.
  6. பசுக்கள் ஆரோக்யமாகவும் மகிழ்வுடனுமிருந்தால் ஆண்-பெண்களும் வியாதிகளற்று வளம் பெறுவர்.
  7. பசுக்கள் சுத்தமான் தண்ணீரைப் பருகியும் பச்சைப் புல்லைப் புசித்துமிருக்கட்டும். அவைகளைக் கொல்ல வேண்டா, அவை நமக்கு வளத்தையளிப்பவை.
    —————————————————–
இப்படி பலப் பல இடங்களில் பசு ரக்ஷணம் பற்றியும் பசு வதை கூடாதென்பதையும் வலியுறுத்துகிறது வேதங்கள். பசுக்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும்ம் மிக்க மரியாதையுடனும் குறிக்கப் படுகிறது. படித்தவர்கள் அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். வேதங்கள் உயிர்வதையை, மேலாக பசுவதையையும் மாட்டிறைச்சியையும்  எதிர்க்கிறதென்பதை.
ஆதார நூல்கள்:
1. Rigveda Bhashya – Commentary on Rigveda by Swami Dayanand Saraswati
2.    Yajurveda Bhashya – Commentary on Yajurveda by Swami Dayanand Saraswati
3.    No Beef in Vedas by BD Ukhul
4.    Vedon ka Yatharth Swaroop (True nature of Vedas) by Pt Dharmadeva Vidyavachaspati
5.    All 4 Veda Samhita by Pt Damodar Satvalekar
6.    Pracheen Bharat me Gomamsa – Ek Sameeksha (Beef in Ancient India – an analysis) by Geeta Press, Gorakhpur
7.    The Myth of Holy Cow – by DN Jha
8.    Hymns of Atharvaveda – Griffith
9.    Scared Books of the east – Max Muller
10.    Rigveda translations by Williams/Jones
11.    Sanskrit English Dictionary – Monier Williams
12.    Commentary on Vedas by Dayanand Sansthan
13.    Western Indologists – a study of motives by Pt Bhagvadutt
14.     Satyarth Prakash by Swami Dayanand Saraswati
15.     Introduction to Vedas by Swami Dayanand Saraswati
16.     Cloud over understanding of Vedas by BD Ukhul
17.    Shathpath Brahman
18.     Nirukta – Yaska Acharya
19.     Dhatupath – Panini
இக்கட்டுரையாசிரியர் மேலும் கூறுகிறார்.
  1. இதை எழுதிய பின் எனக்குப் பின்னூட்டங்களாக பலப் பல கருத்துக்கள், வேத ஸ்லோகங்களையும் மனு ஸ்ம்ருதிகளையும் காட்டி அவை பசு மாமிசத்தை காட்டுவதாய்க் கூறின. மனு ஸ்ம்ருதியை பற்றிய ஒழுங்கான கருத்துக்களைப் படிக்க டாக்டர் சுரேந்திர குமாரின் புத்தகத்தைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்: கிடைக்குமிடம் – http://vedicbooks.com
  1. இவர்கள் கூறும் ஒரு வழக்கமான சாக்கு மான்ச என்பதை மாமிசம் என்று மொழிபெயர்ப்பதே. உண்மையில் மான்ச என்பது ஒரு பழச்சதை, கூழ் என்ற பொதுப் பெயருடன் விளங்குவது. மாமிசத்தை மான்ச என்று சமஸ்க்ருதத்தில் சொல்வது அது கூழாக, சதைப் பற்றாக இருப்பதாலேயே, சதைப்பற்றாக இருப்பவை எல்லாமே மான்ச என்ற பொருளாகாது. அதன் முழு வாக்கியத்தையும் முன்னும் பின்னும் சொல்லப் பட்டிருக்கும் ஸ்லோகங்களையும் வைத்துப் பார்த்தால் அதன் உண்மைப் பொருள் நன்கு புலப்படும்.
  1. இவர்கள் மேலும் சுட்டிக் காட்டுவது ரிக் வேதம் 10/85/13 ஐ. இது சொல்கிறதாம் “ஒரு பெண்ணின் திருமணத்தின் போது பசுக்களும் எருதுகளும் வதை செய்யப்பட்டன” என்று.
உண்மை –  இந்த மந்திரம் சொல்வதென்னவென்றால், பனிகாலத்தில் சூரியனின் கதிர்கள் ஹீனமடைந்து  மறுபடி வசந்தத்தின் போது பலமடைகிறது என்பது. சூரியக் கதிரைக் குறிக்க பயன்படுத்தப் பட்ட சொல், பசுவையும் குறிக்கும் “கோ” என்பது. எனவே பசு என்று எளிதாக மொழிபெயர்த்து விடலாம். ஹீனமடைவதற்கான சொல் “ஹன்யதே” என்பது, அது வதைப்பது என்றும் பொருள்படும். இது இவ்வாறானால், எதற்காக அம்மந்திரம் மேலும் அடுத்த வரியிலேயே “வசந்தத்தில் இவை மீண்டும் தன் சுய ரூபத்தை அடைந்து விடும்” என்று சொல்ல வேண்டும்?
பனிகாலத்தில் வதை செய்யப்பட்ட பசு எவ்வாறு வசந்தத்தில் மீண்டும் உயிர்பெறும்? இதிலிருந்தே தெரியவில்லையா இவர்களது வண்டவாளம்?
மேலும்…
ரிக்வேதம் 6/17/1 – “இந்திரன் பசு, கன்று, குதிரை மற்றும் எருதுகளின் மாமிசத்தை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்” – என்பது.
உண்மை – இம்மந்திரம் “அதிபுத்திசாலிகளாகிய அறிஞர்கள் இவ்வுலகை ஒளிமிக்கதாக்குகிறார்கள், எப்படி யக்ஞத்தின் நெருப்பை மரங்கள் ஒளிபெறச்செய்கின்றனவோ அப்படி” – இதில் இந்திரன், பசு, குதிரை அவைகளின் மாமிசங்கள் இவையெல்லாம் எப்படிப் புகுந்தன என்று வியப்பாயிருக்கிறது!
முடிவாக, வேதங்களில் ஒரு மந்திரமாவது பசுவதையையோ அல்லது பசு இறைச்சி உண்பதை ஊக்குவிப்பதாகவோ இல்லை, இல்லை, இல்லையென்பதே நிரூபணமாகிறது!
Thanks: http://agniveer.com/no-beef-in-vedas-ta/