• ஆலயம் – ஆ(நாட்டு பசு) + லயம் – பசு தன்னை மறந்து லயித்து பால் சுரந்த இடமே ஆலயம்.
• கோயில் – கோ(நாட்டு பசு)+இல் – பசு இருக்கும் இடம்
மேலே உள்ள சிற்பங்களை நீங்கள் பல கோவில்களில் கண்டிருப்பீர்கள். கோவில் கருவறை உள்ள இடத்தை நாட்டு மாடோ, சித்தர்களோ, (ஞானிகள்-பெரும் வீரம் தியாகம் கற்பு நெறியில் சிறந்து விளங்கிய பெண்கள் போன்றோரின்) ஜீவசமாதி போன்ற விஷயங்கள் தான் தீர்மானிக்கும். நம் விருப்பத்தின் படி கருவறை மாற்றப்பட்டால் அங்கு தெய்வ சக்தி இராது. கருவறையில் நல்லெண்ணெய் தீபம் மூலமே வெளிச்சம் இருக்க வேண்டும் (புகழ் பெற்ற கோவில்களை எண்ணி பார்க்கவும்). கருவறைக்குள் டைல்ஸ் கிரானைட் போன்றவற்றை போட கூடாது. இறைவன் திருவுருவம் பச்சை கற்பூரம், நாட்டு பசுவின் நெய் தீபம், நல்லெண்ணெய் விளக்கொளியில் தான் தீபாராதனை காட்ட வேண்டும்!
கோவில் என்பது ஆன்ம பலத்தை பேருக்கும் பொருட்டு உள்ள இடம். கருவறையை சுற்றி அந்த அந்த தெய்வத்தை பொறுத்து (சிவன்-விஷ்ணு-முருகன்-அம்பிகை-காளி) ஆகம விதியின் படி கோவில் அமைக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment