Tuesday 22 October 2013

பசுக்கொலையை நியாயப்படுத்தலாமா..??



மான்களும், புலிகளும் கூடத்தான் ஒருகாலத்தில் வேட்டையாடப்பட்டு வந்தது. அதை மன்னர்களும் செய்தார்கள். வெள்ளையர்களும் ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினர். பல இனக்குளுக்களுக்கு அது குலத்தொழில்-முன்னோர்கள் கலாசாரம் கூட!. ஏன் வேடர் என்ற சாதியே அரசு பட்டியலில் உண்டு. அதற்காக மான்களை/புலிகளை கொல்ல கோருவது இன்றைய சூழலுக்கு ஒப்புமா..??

மான்கள்/புலிகளை போலவே நாட்டு பசுக்களின் எண்ணிக்கையும் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கிறது. பல நாட்டு பசு இனங்கள் மிக மிக அருகி விட்டன. தமிழகத்தில் மட்டுமே முற்காலத்தில் 122 க்கும் மேற்ப்பட்ட நாட்டு பசு இனங்கள் இருந்துள்ளன. தற்போது அது விரல்விட்டு எண்ணிவிடும் அளவு குறுகி விட்டது. புலிகளின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு அதன் வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது. மான்கள்/புலிகளுக்கு ஒரு நியாயம், பசுக்களுக்கு ஒரு நியாயமா..?

நம் பாரதத்தில் பசுக்களை வெறிபிடித்தது போல வெட்டி உண்ணும பழக்கம் இல்லை. இறந்த பசுக்களை மட்டுமே உண்டு வந்தனர்; அதுவும் சில இனக்குழுக்கள் மட்டுமே. விலை குறைவு என்று பார்த்தால் மார்சுவரியில் இருக்கும் அநாதை பிணங்கள் பசு மாமிசத்தை விட சீப், நாய்க்கறியும் சீப்பாக கிடைக்கும். ஏன் சும்மாவே கிடைக்கும். சீப் என்று பார்த்தால் தற்போது இயற்கை வேளாண் பொருட்கள் மரபணு மாற்றப்பட்ட-செயற்கை உரங்கள் கொண்டு விளைவித்த உணவை விட விலை கூடவே இருக்கின்றன-அப்போது மட்டும் பணத்தை பார்க்காமல் இயற்கை உணவை பரிந்துரைப்பது ஏனோ..??

பசு மாமிசம் என்பது வெளிநாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக கையாளப்படும் தந்திரம். இங்கு மற்ற விலங்குகள், ஆன்மிகம் இத்யாதிகளை கொண்டு குழப்பாமல் இயற்கைக்கு, தற்கால சூழலுக்கு நன்மை எது என்று ஆலோசிப்பது சரியான பாதையாக இருக்கும்.

சீமை மாடுகளை வெறி அடங்கும் வரை அதன் மேல் பாய்ந்து பச்சையாக அதன் கறியை கடித்து குதறினாலும் இந்த மாமிச வெறியர்களை யாரும் கேள்வி கேட்க போவதில்லை. அக்கரை நாட்டு பசுக்களின் மீதுதான். நாட்டு பசுக்கள் இருந்தால் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்துகள், மருத்துவம் என பல லட்சம் கோடி வணிகத்துக்கு வேலை இன்றி போகும்!

இவற்றை விட்டுவிட்டு பல்வேறு முகமூடிகளில் திரியும் கம்யுனிஸ்ட்கள் கற்று தந்த குதர்க்கமான கேள்விகளை கேட்டு தன்னை அறிவாளி என்று நிறுவி கொள்ள முனைவதால் எந்த பயனும் யாருக்கும் இருக்கபோவதில்லை.இதை உணர்ந்து நாட்டு பசுக்களை காக்கவும், மீட்கவும் இயற்கை/வேளாண் ஆர்வலர்கள் முன்வர வேண்டும்..!

மேலும்,

எந்த ஒரு மாமிசம் சாப்பிடுவதும் பாவச்செயல் தான் மனித இனம் எந்த ஒரு விலங்கையும் சாப்பிட கூடாது என்பது இயற்க்கை நியதியும் கூட .. எப்படி என்றால். மற்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் விலங்குகள் அனைத்தும் (உதாரணமாக சிங்கம், புலி,நரி,சிறுத்தை,நம் வீட்டில் வளர்க்க படும் நாய்) வரை தண்ணிரை நாக்கினால் நக்கித்தான் குடிக்கும். ..

இதுவே சைவ உணவை மட்டும் உண்ணும் விலங்குகளான பசு,ஆடு,யானை,மான் மனிதன் வரை தண்ணீரை வாயினால் உறிஞ்சு மட்டுமே குடிக்கின்றோம். இதில் இருந்தே தெரிய வேண்டும் நம் உணவு சைவம் என்பதே.. நாம் மனிதர்கள் தானே...

அசைவ உணவு என்பதே மனித வாழ்க்கைக்கு புறம்பானது தான். எனவே அணைத்து அசைவ உணவுகளும் தவறானது தான். இதை தடுப்பதற்கு தான் முதல் முயற்சியாக நாம் நம் நாட்டு விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள நாட்டு பசுக்களை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று போராடி வருவது... ஏன் என்றால் நாட்டு பசுக்களை காப்பாற்றினால் தான் அவைகள் தரும் பொருட்களை வைத்து நமது நாட்டின் இயற்க்கை விவசாயத்தை மீட்டெடுக்க முடியும்..

மேலும் இறைச்சிக்காக ஆடுகளை போலவும், கோழிகளை போலவும் பசுக்களை பண்ணை வைத்து வளர்ப்பது இல்லை. மேலும் பசும் பாலில் உள்ள மகத்துவம் தெரியாதவர்கள் தான் எருமை மாட்டின் பாலையும் பசும் பாலையும் சமமாக பார்ப்பார்கள். இவர்கள் பாலையும் கள்ளையும் கூட ஒன்று தான் என்று சொல்ல்வார்கள் போல..

எருமை மாட்டின் பாலை தொடர்ந்து குடித்தால் என்ன என்ன தீமைகள் வரும் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது .அதேபோல் பசுவை பாலுக்காக மட்டுமே வளர்ப்பது அதன் பால் வற்றிய உடன் அடிமாட்டிர்க்கு அனுப்பவது என்பதெல்லாம் பசு என்று நினைத்து நம் நாட்டிற்கு கொண்டு வந்த சீமை பன்னிகள் வந்த பின்பு தான்.. 

ஏன் என்றால் அவற்றின் சாணம் மற்றும் மூத்திரத்தை கண்ணால் கண்டால் கூட நோய் கிருமிகள் தொற்றி விடும் அந்த அளவிற்கு அவை உடல் முழுவதும் விஷம் தான்.. எருமை சாணமும் பசுவின் சாணத்தின் மகத்துவத்தில் பாதிகூட கிடையாது. எருமை சாணத்தில் விபுதி செய்து உபயோகம் செய்து பாருங்கள் இந்த உண்மை தெரியும்..

மேலும் பசுக்கள் வளர்ப்பதே பாலுக்காகதான் என்று நம்மை நம்பவைத்தது தான் நம் நாட்டு பசுக்கள் அழிய முக்கிய காரணம்.. எனவே நம் நாட்டு விவசாயத்தின் முதுகெலும்பான நாட்டு பசுக்களை அழிய விடாமல் அவற்றில் கிடைக்கும் பொருட்ட்களை வைத்து இயற்க்கை விவசாயம் செய்து வந்தேறி அசைவ உணவு பழக்கங்களை படி படியாக வெளியில் அனுப்புவதே சரியாக படும்.. மேலும் நமது விவசாயமும் நம் நாட்டு பசுக்களும் வேறு வேறு இல்லை என்பது தான் உண்மை.. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ளும் வரை பசுக்கொலையை நாம் ஆதரிப்பது தவறு தான்.

1 comment:

  1. இது என்னமோ திடீர்ன்னு திட்டமிட்டு செஞ்ச சதியல்ல.. மெதுவா வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போன்று கலப்பின பன்னிகளை நம் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வர்ணஜாலம் காட்டி மயக்கி தெய்வமாய் நாம் வணங்கி வந்த நம் பசுவையும் சேர்த்து கொல்ல அனுப்பிய சூழ்ச்சிக்காரன் மாய வலை... பித்தம் தெளிந்தது.. எல்லொரும் இன்று பசுவின் இன்றியமையாததை அறிந்து பாதுகாக்க தொடங்கிவிட்டார்கள்.. இனி நாம் நம் பணிகளை நம் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைப்புடன் செயல்படுவோம்

    ReplyDelete