Wednesday 30 October 2013

நாட்டு பசு விற்கும்போது

நாட்டு பசு விற்கும்போது:



நாட்டுபசுக்களை வணிக பொருளாக கருதாமல் உங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராக பாருங்கள். உங்களிடம் அதிகமாக பசுக்கள் இருந்தாலும் உங்கள் வீட்டுக்கென்று ஒன்றிரண்டு பசுவை வைத்துக்கொள்ளுங்கள். காலம் காலமாக தலைமுறைகளாக வைத்து பராமரிக்க.. உங்கள் குடும்பத்தின் அங்கமாக.. மிக மோசமான சூழல் தவிர வேறு எந்த சூழலிலும் அதை மட்டும் விற்க வேண்டாம். அப்படி ஒரே ஊரில் பல தலைமுறைகளாக வளரும் பசுக்களுக்கு விலை மதிப்பே கிடையாது! உங்கள் குடும்பத்திற்கே ஆன பசுவாக மாறிவிடும். அப்படி நம் முன்னோர்கள் பசுக்களை வைத்திருந்ததால் தான் திருமண சீதனத்தில் பிறந்த வீட்டு பசுவும் இடம் பெற்றிருந்தது

 (உதாரண-ஆதாரம்: கொங்கு நாட்டின் மங்கள வாழ்த்து).

வரிகள்: கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!

குழந்தை பிறந்து செல்லும் போதும் ஆச்சி மாடு (குழந்தை பாலுக்கான பசு)கொடுக்கும் சடங்கும் இருந்தது.

நீங்கள் நாட்டு பசுக்களை வாங்கும் போதும் விற்கும் போதும், "பசுவை துன்புறுத்தாமல் வைத்து பராமரிப்பேன். எக்காலத்திலும் அடிமாட்டுக்கு விற்க மாட்டேன். மறுபடி விற்கவேண்டிய சூழல் ஏற்ப்பட்டாலும் இதுபோல உறுதி வார்த்தை தருபவருக்கு மட்டுமே பசுவை கொடுப்பேன்" என்று வாக்குறுதி பெறுங்கள்/கொடுங்கள். இது திடீர் என்று சொல்லப்படுவதல்ல. காலம் காலமாக நம் முன்னோர் பின்பற்றியது. இது வெறும் சடங்காக கருதி பொய் சத்தியம் செய்பவனுக்கு கொடுக்காமல் உண்மையிலேயே இவன் பசுவை கொலைக்கு அனுப்ப மாட்டான் என்று நம்பும் நபர்களுக்கு மட்டுமே பசுவை விற்கவும்.

No comments:

Post a Comment