Thursday, 26 September 2013

ஏன் பசு மாமிசம் கூடாது?

பாரதத்தில் மாமிச உணவுப் பழக்கம் என்பது காலம்காலமாக சில பிரிவு மக்களிடையே இருந்து வந்துள்ளது. பசுக்களை உண்பதும் கூட மிகச்சில இனங்கள் பின்பற்றின. ஆனால் இவை யாவும் விழாக்கால உணவாகத்தான் இருந்து வந்துள்ளது.



 அசைவ உணவுக்கலாசாரம் பற்றிய பார்வை:
கடந்த ஒரு நூற்றாண்டை எடுத்துகொண்டாலும், அசைவ உணவு அடைந்த பரிணாம வளர்ச்சியை கண்கூடாக பார்க்கலாம். முதலில் சில சாரார் மட்டுமே (அதுவும் கோவில் விழாக்களின் போது மட்டுமே) பலிபூஜை  மாமிசம் உண்டு வந்தனர். அந்நிய கலாசாரத்தின் தாக்கத்தால், கோவில் பிரசாதம் என்ற சமாதானத்தோடு, அனைவருக்குமான உணவாக மாற்றப்பட்டது. விழா பிரசாதம்  பின்னர் மாத உணவாக வார உணவாக மாறியது. ஊருக்கு ஊர் கசாப்பு கடைகள் முளைத்தது. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. வீட்டுக்கு வெளியில் தனியே பாத்திரங்கள் கொண்டு (கறிச்சட்டி&வாணசட்டி) சமைத்து உண்டுவிட்டு, பின்னர் தலை முழுகி வீடு மொழுகுவர். மாமிசத்தை குற்றமாக பார்த்த சில பெரும்பான்மை சமூகங்கள் கூட அனைவரும் உண்கிறார்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக்கி பழக்கபடுத்தபட்டனர். வெளியில் இருந்த கரிச்சட்டிகள் சமையலறைக்குள் புகுந்தது. இப்போது வீதிக்கொரு கசாப்புக்கடை, வார வாரம் இல்லை வாரமிருமுறை என மாமிச உணவு, ஊருக்கு ஊர் மாமிச உணவு விடுதி என்று களேபரப்படுகிறது. போதாக்குறைக்கு இன்று முளைத்து வரும் கேஎப்சி, மெக்-டொனால்டு போன்ற வெளிநாட்டு காளான்கள் மாமிச உணவை வாழ்க்கைத்தரத்தின் அடையாளமாக திணிக்கவும் துணிந்து விட்டார்கள்.

இந்த மாமிச உணவுகள் மக்களின் உணர்வுகள், குணங்கள், ஆரோக்கியம், இயற்கை வளங்கள் என அனைத்திலும் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பாரம்பரிய பாரதத்தில் இருந்த ஒழுக்கம்-தர்மம்-கற்பு நெறி சார்ந்த சாத்வீக வாழ்வு தற்போது குறைந்து போக காரணம் மாமிச உணவும் மாற்றப்பட்ட சமூக கலாசார சூழலுமே ஆகும். இவை அனைத்தும் யதார்த்தமாக நடக்கவில்லை. வெள்ளையர்கள் தூண்டுதலால், கிறிஸ்தவம் பரப்பவும், இந்தியா எப்போதும் உணர்வு ரீதியாக வியாபார ரீதியாக மேற்குலகின் அடிமையாக இருக்கவும் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இவற்றின் நோக்கம் பாரத கலாசாரம் தர்ம நெறிகள் உடைக்கபடுதலே. இத்திட்டத்திற்கு திராவிட கம்யுனிஸ கொள்கைகள் வலுச்சேர்த்து அரங்கேற்றின.

இயற்கை
இந்தியாதான் உலகிலேயே பீப் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது. இதை ஏன் பிற நாடுகள் செய்வதில்லை? பசு மாமிசம் என்று எடுத்துக்கொண்டால், பிற உணவுகளை விட பசு மாமிசம் வளர்க்க பெருமளவு நீர் செலவழிக்க வேண்டும். இதை உணர்ந்த வெளிநாடுகள் பீப்பை வளர்த்து தரும் வேலையை இந்தியாவுக்கு தள்ளி விட்டனர். சீனா கூட, அவர்கள் மக்கள் விரும்பி உண்ணும பன்றி இறைச்சியை வளர்க்க நீர் அதிகம் தேவை படுவதால் அதை வெளிநாடுகளுக்கு தள்ளி விட துவங்கியுள்ளது. தற்பொழுது சகஜமாக்கபட்ட கோழி-ஆட்டு கறிகள் போல பசு மாமிசம் சகஜமாக்கபட்டால், நாமக்கல் கோழிப்பண்ணைகள் போல மாமிசத்திற்கான  பசுப்பண்ணைகள் உருவானால், இந்தியா வறண்ட பூமியாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் அனைத்தும் மாமிச பசுக்கள் வளர்க்கவே சரியாக போகும்.






அதே சமயம், குறைந்து போன நாட்டு பசுக்களின் எண்ணிக்கை தற்போது தான் மீண்டு வளர துவங்கியுள்ளது. நாட்டு பசுக்கள் எண்ணிக்கை குறைந்தால் சுற்று சூழலின் நிலைத்தன்மையும் இயற்கை விவசாயமும் கேள்வி குறியாகும் என்பதில் ஐயமே இல்லை.



ஆரோக்கியம்
ஆரோக்கியம் என்று பார்த்தால் பசு மாமிசம் உண்பதால் இதய வால்வுகள் தடிமனாகி இதய நோய்கள மற்றும் மாரடைப்பு வருகிறது என்பதும், குடல் வாலில் நோய் தொற்று ஏற்படுவதும், கார்சினோஜென் எனப்படும் கான்சர் காரணிகளால் புற்றுநோய் ஏற்படுவதும், ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் எனப்படும் ஆண்மை சார்ந்த கேன்சரும், ஊதிப்பெருக்கும் உடல் பருமன், ஸ்ட்ரோக் (பக்கவாதம்) மற்றும் சர்க்கரை நோயும் தாக்கும் என உலகம் முழுவதும் பல அறிஞர்களால் அறிவுறுத்தபடுவட்டு வருகிறது. அதே சமயம் நாட்டு பசுவின் பால், கோமியம், பஞ்சகவ்யம் போன்ற பொருட்கள் மூலம் எண்ணிலடங்கா நன்மைகளை மனித உடலின் அரோக்கியதிற்கும் மருத்துவத்திற்கும் தருகின்றன.

பொருளாதாரம்
பொருளாதார ரீதியாக பார்த்தால் நாட்டு பசுக்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் 70% உர இறக்குமதியையையும் 65% ஆங்கில மருந்துகளையும் தவிர்த்திட முடியும். இதனால் பெருமளவு அந்நிய செலாவணி மிச்சமாகும்.

நிலைமை இவ்வாறு இருக்க சில சமூக விரோத இயக்கங்கள் புரட்சி என்னும் பெயரால் மாட்டுக்கறியை சகஜமாகக துடிக்கின்றன. இவை வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதி. அதுவுமன்றி முற்போக்கு, இயற்கை காவலர் என்றும் உலகின் நண்பர்கள் என்றும் சொல்லிக்கொண்ட இயக்கங்களும் பசு மாமிச வெறியை பரப்புகிறார்கள். இது வெளிநாட்டு முதலாளிகளின் கூலிக்கு மாரடிக்கும் அஜெண்டாவின் ஒரு பகுதி. பசுக்கள் எண்ணிக்கை குறைந்தால் அது வெளிநாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாகவும் இந்திய பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் சாபக்கேடாக முடியும் என்பதும் இந்த புரட்சி பித்தர்களுக்கு தெரியாமல் இல்லை என்பது இவர்கள் இயக்கம் சார்ந்த உண்மைத்தன்மையை ஆராய தூண்டுபவையாகும்.


ஜீவகாருண்யம், ஆன்மிகம், பாரததேச பாரம்பரியம், பண்பாடு போன்றவை பசுகொலையை தடுக்க காரணமாக இருப்பினும், அதற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதங்களான மேற்சொன்ன இயற்கை, ஆரோக்கியம், நீர் தேவை, பசுக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம் போன்றவற்றை முன்னிறுத்தி பசுக்கொலையையும் மாட்டுக்கறி கலாசாரத்தையும் எதிர்க்கவும் ஒழிக்கவும் வேண்டும்.

1 comment:

  1. Could you please let me know your contact number... ? OR the cow protection force contact number in Chennai?
    Thank you

    ReplyDelete