பசு இறைச்சி பாரத சமுதாயத்தில் பல காலம் பின்பற்றப்பட்டது என்று பொய்யை பரப்பி வருகிறார்கள்.. பசுக்கொலை காலம் காலமாக பின்பற்றப்படவில்லை! ஏன்? நம் நாட்டில் இறைச்சி கூடங்களே பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வந்தது! ராபர்ட் கிளைவ் ஆல்... முகமதியர் மற்றும் ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் தான் வெறி பிடித்தது போல பசுக்களை கொலை செய்து திண்ணும் மிருகத்தனம் வளர்ந்தது! ஏன் நம் பாட்டிகளை கேட்டால் கூட சொல்வார்கள்.. கறிச்சட்டி என்று தனியே மாமிசதுக்காக இருக்குமாம்.. வீட்டிற்கு வெளியேதான் அந்த சமையல்.. தாத்தா காலத்தில் அதுவும் கிடையாது..
(கறிக்கடைகளின் பெயரை வைத்தே உணர்ந்துகொள்ளுங்கள் - 'கசாப்' கடை - உருது சொல் )
அதற்கு முன்னர் பலிபூஜை போன்ற விழா காலங்களில் மட்டுமே நடந்தது. அந்த பலியிடப்பட்ட மிருகங்களையும் சில சமூகங்களே உண்டன. அனைவரும் மாமிசம் உண்டனர் என்பது பொய். பசுக்கள் இயற்கையாக மரணித்த பின்னரே உணவுக்காக ஒரு சில குடிகள் பயன்படுத்தின. வேதங்களில் பசு மாமிசம் என்று சொல்வதெல்லாம் டுபாக்கூர். கம்யுனிஸ மொள்ளமாறிகள் செய்த சதி வேலைகள்.
(http://agniveer.com/no-beef-in-vedas-ta/)
உலகம்-பாரதத்தின் முதுகெலும்பு விவசாயம். விவசாயத்தின் முதுகெலும்பு நாட்டு பசுக்கள். தன்னிறைவு பெற்ற வாழ்க்கைக்கு நாட்டு பசுக்கள் இன்றியமையாதது. பால் கொடுக்கும் காலம் முடிந்தாலும் கூட அவற்றின் சிறுநீரும் சாணமுமே பொருளாதார வளத்தை உறுதி செய்யும் வருமானம் கொடுக்கும். பொருளாதாரத்தை காரணம் காட்டி பசுக்களை கொல்ல அனுப்புவதை நியாயப்படுத்துவது தவறானது!
பிற கால்நடைகள் மாமிசதுக்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆனால் பசுக்கள் அன்றாட உணவு (பால் பொருட்கள்), விவசாயம், ஆரோக்கியம், மருத்துவம், உழைப்பு உட்பட வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கலந்த ஜீவன். பசுவை மற்ற கால்நடைகளோடு ஒப்பிடுதல் வட்டத்தையும் சதுரத்தையும் ஒப்பிடுவது போல..
ஆரோக்கியம், கிராமமயமாக்கல், தன்னிறைவு பொருளாதாரம், ஒழுக்க வாழ்வு. இவை அனைத்தும் பசுக்கள் இன்றி சாத்தியமில்லை. பசுக்கொலையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. கம்யுனிஸ-காலனித்துவ-இஸ்லாமிய -கிருத்துவ-முற்போக்கு-திராவிட போன்ற விதண்டாவாதம் மற்றும் தேசத்தை அழிக்கும் சித்தம் இருந்தால் நிச்சயம் நியாயப்படுத்தலாம்!!
நன்றி: சசிகுமார் (கால்நடை விற்பனை தகவல் மையம் குழுவில்)
No comments:
Post a Comment