Wednesday, 3 September 2014

வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள்



வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள், அவைகளை கோமாதா
லக்ஷ்மி என்றெல்லாம் அன்போடும் பாசத்தோடும்,
பொங்கலன்று பூ வைத்து போட்டுவைத்தும் அழகு
பார்த்து, தன் பிள்ளைகள் போலவே பாவிக்கின்றனர்

ஆனால், தன் இரத்தத்தை பாலாக மாற்றி நம் தாய்க்கு
நிகராக தங்கள் வீட்டில் வளர்ந்த மாட்டை வயதான
பின்பு அடிமாட்டுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர்,

சிலர் கோவிலுக்கு காணிக்கையாக விட்டு விடுகின்றனர்.
கோவிலிலும் நிறைய மாடுகள் சேர்ந்ததும் அவைகளை
மொத்தமாக ஏலம் விட்டுவிடுகிறார்கள்...

கோவில்களில் ஏலம் விடும் மாடுகளை அடிமாட்டுக்கு
அதாவது அறுப்பு மாட்டுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்

இப்படி அறுப்பு மாட்டுக்கு எடுத்துச்செல்பவர்கள் மாடுகளை
பலவித சித்தரவதைகளுக்கு ஆளாக்குகின்றனர் ...

லாரிகளில் நிறைய மாடுகளை ஏற்றி பலநாட்கள் அவைகளை
பட்டினி போட்டு மழையிலும் வெய்யிலிலும் நிற்கவைத்தே கஷ்டப்படுத்தி கொடுமைபடுத்தி மாடு அறுக்கும் இடத்திற்கு
கொண்டு செல்கின்றனர் ....

இறுதியில் அவைகளின் கழுத்தை அறுப்பதற்கும் முன்
பெரிய சுத்தியால் அவைகளின் மண்டையில் ஓங்கி
பலமுறை அடிக்கின்றனர் ...

ஏனெனில் நல்ல நிலையில் இருக்கும் மாடுகளின் கழுத்தை அறுத்தால், அவை கழுத்து அறுபட்ட பின்பு வெகுநேரம் துள்ளி துடித்து அறுப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்ப்படுத்தும் என்பதால்

பாருங்கள் நண்பர்களே ....
கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள் ...
அவைகளும் நம்மை போல ஒரு உயிர்தானே ....
தன் இரத்தத்தையே பாலாக மாற்றி,
நம் தாய்க்கு நிகராக விளங்கும் மாடுகளின் நிலையை
கொஞ்சம் நினைத்து பாருங்கள் ...

அன்பு நண்பர்களே !!!

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள்
உறவினர்கள் யாரேனும் மாடு வளர்ப்பவர்களாக
இருந்தால் தயவு செய்து மாடுகளை அடிமாட்டுக்கு
விற்கவோ அல்லது கோவில்களுக்கு காணிக்கை
செலுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்...

நம் வீட்டு தோட்டத்தில் நமக்காகவே வளர்ந்த மாட்டை
அதன் ஆயுள் முடியும் வரை வளர்ப்போம் ...இறந்தபின்பு
தோட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் புதைத்து அதன் மீது
இரண்டு கனிதரும் மரக்கன்றுகளை நடுவோம் ...
இறந்த மாட்டின் உடல் அந்த மரங்களுக்கு நல்ல, சிறந்த
எருவாகிவிடும் .....

கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள் ...
அவைகளும் நம்மை போல ஒரு உயிர்தானே ....
நன்றி mpr

No comments:

Post a Comment