சிருங்கேரியில் பசுக்கடத்தலில் கபீர், ரபீக் உட்பட சில இளைஞர்கள் ஈடுபடவே, நக்சல் ஒழிப்பு படை (Anti Naxal Force) அதிகாரி வண்டியை நிறுத்த சொன்னதும், இறங்கி தப்ப முயன்றவர்களில் கபீர் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த கபீருக்கு அரசு நிவாரண தொகை அறிவித்துள்ளது. அதை கண்டித்து பாரத் கிரந்தி சேனா வின் தேசிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரணவானந்த சுவாமிஜி அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளார். பசு கடத்திய குற்றவாளியான கபீருக்கு நிவாரணம் தருவதை வன்மையாக கண்டித்தார். மேலும் அந்த தொகை, அவனை சுட்டுக்கொன்ற அதிகாரிக்கு சென்று சேர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதிகாரியின் பெயர் வெளியிடப்பட்டால் அவருக்கு ஒரு லட்சம் ஊக்கத்தொகையும், அவர் வழக்கை நடத்தும் செலவையும் பாரத் கிரந்தி சேனா ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.
விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் ஐம்பதாயிரம் நிவாரணம் வழங்கும் அரசு, கடத்தல்காரன் மரணத்துக்கு ஐந்து லட்சம் வழங்குகிறது என்று குறிப்பிட்டு கண்டித்தார்.
No comments:
Post a Comment