Friday, 3 January 2014

நாட்டுப்பசு

நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவம் உணர்ந்து இன்று பலரும் நாட்டுப்பசுக்களை வாங்கி பயன் பெற துவங்கியுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால் நாட்டு பசுக்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து வாங்குகிறார்கள் மக்கள்.. அதன் பொருளாதார காரணங்களை கடந்து... எனவே வருங்காலத்தில் நாட்டுப்பசுக்களை அழிப்பது அவ்வளவு சுலபம் அல்ல..நாட்டு பசுக்களே நம் தெய்வங்கள்.. ஆதார சக்திகள்.. நாட்டு பசு வாங்குகிறேன் என்று குஜராத் கிர் பசுவை வாங்குவதும் முட்டாள்தனம் தான்.. அவரவர் வாழும் பகுதிக்கான பசுவை வாங்க வேண்டும்.. அதுவே முக்கியம்.. இதோ இன்று புதிதாக வாங்கப்பட்ட பசு.. எவ்வளவு பேர் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும் களத்தில் ஏற்படும் மாற்றங்களை தடுக்க இயலாது..! பசுக்கள் வெறும் பால் கொடுக்கும் மெஷின்கள் அல்ல.. பொருளாதார-தொழில் உபகரணம் அல்ல.. அவை மக்களின் வாழ்வோடும், உணர்வோடும், கலாசாரத்தொடும் இணைந்தவை.. காடுகளாக கிடந்த பூமிகளை விளைநிலங்களாக-நாடுகளாக வளப்படுத்தியத்தில் மனிதனை விட பசுக்களுக்குத்தான் பெரும்பங்கு உண்டு..! (குறிப்பு: பசு என்றாலே நாட்டு பசு மட்டும்தான் சீமைமாடுகள் அல்ல)

thanks: sasikumar


No comments:

Post a Comment