Friday, 4 April 2014

Pink Revolution - காங்கிரஸ் அரசின் பிங்க் புரட்சி

வரும் சில ஆண்டுகளில் நாட்டை பாலைவனமாக்கி விவசாயிகளை ஆண்டியாக்கி மக்கள் அனைவரையும் நோயாளியாக்கி, மருந்துக்கும் உரத்துக்கும் மற்றும் அனைத்து தேவைகளுக்கும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க வைக்க மெகா பிளான் ஒன்று அரங்கேறி வருகிறது. அதன் சூட்சும முடிச்சு தான் “Pink Revolution”. முதலில் பசுமை புரட்சி என்று நிலங்களை நோயாளியாக்கி, விதைகளை கெடுத்து விவசாயிகளை அடிமையாக்கினர். அப்படியே வெண்மை புரட்சி (பால் புரட்சி) என்று விஷ பாலையும் வெளிநாட்டு சாத்தான்களான சீமை மாடுகளை கொண்டுவந்து நம் தேச பசுக்களை கலப்பினம் செய்து கெடுத்து, வளங்களை சீரழித்தார்கள். இப்போது சிகப்பு புரட்சி என்று இருக்கும் நாட்டு பசுக்களையும் வெட்டி பசுமை மற்றும் வெண்மை புரட்சியில் தப்பி மீதி இருக்கும் அனைவரையும் நாசமாக்கி நிரந்தரமாக வெளிநாட்டு அடிமைகளாக்கும் திட்டம் தான் இது. இதை பற்றிய சில முக்கிய தகவல்கள்,



·         நம் நாட்டின் சட்டப்படி பசுக்களை வெட்டக்கூடாது. இந்திய அரசியல் சட்டமே அதை தடை செய்கிறது. சில மாநிலங்களில் மட்டும் அதுவும் வயதான, வத்திப்போன பசுக்களை மட்டும் கொல்ல அனுமதியளிக்கிறார்கள் (பெரும்பாலும் கம்யுனிசம் ஆளும்/ஆண்ட மாநிலங்கள்).

·   காங்கிரஸ் ஆட்சியில் போன வருடம் மட்டுமே 50% பீப் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. சட்டப்படி குற்றமாக பசுக்கொலை இருக்கும் போது எப்படி இவ்வளவு ஏற்றுமதி சாத்தியம் என்றால், கால்நடை அலுவலர் சொல்கிறார் “பசுக்களை கொல்வது குற்றம்தான்; ‘ஆவணப்படி’ கொல்லப்படுவது அனைத்தும் எருமைகளே, அதுவும் ஆண் எருமைகள் மற்றும் பால் வற்றிய பெண் எருமைகள்” என்கிறார். இது முழு பூசணிக்காய் அல்ல, முழு மலையை சோற்றில் மறைக்கும் வேலையாகும். வருடத்திற்கு 20 லட்சம் டன் பீப் (ஏற்றுமதி மட்டும்; உள்நாட்டு பயன்பாடு தவிர்த்து!) போகும்போது, அதை ஆண்/பயனற்ற பெண் எருமைகள் மட்டுமே என்றால் எவன் நம்புவான்? இங்கு எருமைகறி என்று செல்லும் மாமிசம் வெளிநாடு சென்றதும் பெயர் மாற்றம் பெறுகிறது. நெடுஞ்சாலைகளில் வந்து ஒரு நாள் நின்றால் எத்தனை வண்டிகள் பசுக்களை ஏற்றி செல்கின்றன என்பதை  எழுத நோட் போடவேண்டும். அரசாங்க அனுமதி இல்லாமல் இந்த மாபெரும் திட்டம் நிறைவேறுமா? ரயில்களில் கால்நடைகளை கடத்தவும் அனுமதி தருகிறார்களாம்.

·    வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கூட சாதிக்க முடியாத அளவு சமீப வருடங்களில் பசுக்கள் கொல்லப்படுகின்றன.

· அமெரிக்கா பிரேசில் உட்பட எல்லா நாடுளையும் வென்று பீப் ஏற்றுமதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது காங்கிரஸ் அரசு. ஏற்றுமதி சாதனை மட்டுமல்ல, உள்நாட்டிலும் மக்களை மாட்டுக்கறி உண்ணவைக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ செய்கிறார்கள்.

·    பழைய பசுக்கொலைக்கூடங்களை நவீனமயமாக்குதல்; பெரிதாக புதிய நவீன பசுக்கொலைக்கூடங்கள் கட்டுதல்; இயந்திர தளவாடங்கள் வாங்க சீன-ஐரோப்பிய நிருவனங்களோடு கைகோர்த்து துரித நடவடிக்கை; இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு 50-90% மானியம் என்று எவ்வளவு ஊக்கமளிக்க முடியுமோ அவ்வளவும் கிடைக்கிறது.

·         மாமிசம் தவிர்த்த பாகங்களான ரத்தம், எலும்பு, குடல், கொம்பு, கால் குழாம் போன்றவை பல்வேறு உணவு, அழகுசாதன பொருட்களில் கலக்கப்பட்டு, மறைமுகமாக இந்தியர்களை பசு மாமிசம் உண்ண வைக்கிறார்கள். இதில் முக்கியமானவை வெள்ளை சர்க்கரை, லிப்ஸ்டிக், முககிரீம்கள், நூடுல்ஸ், புரோட்டாக்கடை ஆயில் போன்றவை.



· இவ்வாறு பசுக்களை அழித்துவிடுவதால், நாட்டில் இயற்கை வேளாண்மை சாத்தியமற்றதாகிவயும். மண் தரிசாகிவிடும். மக்களின் ஆரோக்கியம் குன்றும். அதன்மூலம் மருந்துக்கம்பெனிகள் மற்றும் மருத்துவமனைகள் பணத்தை குடிக்கும். உரத்துக்கும் மருந்துக்கும் வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டும்.  நம் நாட்டு பணம் அனைத்தும் சுரண்டி செல்லப்படும்.


இவ்வாறு பசுக்களை கொல்ல வைப்பதன் மூலம் மாபெரும் பண்ணாட்டு அரசியல் சூழ்ச்சியை அரங்கேற்ற கடுமையாக காங்கிரஸ் அரசு முயற்சி எடுத்து வந்துள்ளது.

Monday, 31 March 2014

பஞ்ச காலத்தில் பசு

பாருங்கடா!பஞ்சம் விடியாத பாவி பயல்களா..!

தன் குழந்தை சோறில்லாமல் இருக்கும் நிலையிலும், தன் வயிர்த்ருப்பாடு தீராமல் சாகும் நிலையிலும் இந்த பெருமகன் தன் பசுவை விற்கவோ, அடித்து தின்னவோ இல்லை.. இவர்தான் உண்மையான விவசாயி, நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை இதுதான்.. 

பசுக்கள் நம் வீட்டின்/குடும்பத்தின் அங்கம.. அதை வணிக பொருளாக நினைத்தால் பெரிய பாவம்..

குறிப்பு:பசுக்கள் என்றால் நாட்டு பசுக்கள் மட்டுமே.

Sunday, 30 March 2014

முஸ்லிம் கோ ரக்ஷக் சம்மேளன்

முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் இயக்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த “முஸ்லிம் கோ ரக்ஷக் சம்மேளன்” (முஸ்லிம் பசுப்பாதுகாப்பு மாநாடு) இரண்டு நாள் மாநாடு, மக்கள் மற்றும் சுற்றுசூழல் நலன்களை கருத்தில்  கொண்டு பசுவை தேசிய விலங்காக அறிவித்து பசுக்கொலையை பூரணமாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய சர்க்காரை வலியுறுத்தியது. இந்த மாநாட்டின் தீர்மானங்கள் மூலம் மு.ரா.ம. புதிய சரித்திரத்தையே படைத்துள்ளது. முஸ்லிம்களும் பசுக்கொலையும் பிரிக்க இயலாதது என்ற அபோதுக்கருத்தை உடைத்து முஸ்லிம் மனோபாவத்தின் புதிய பரிணாமத்தை இம்மாநாடு திறந்துள்ளது.

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பிரதேஷ், ம. பிரதேஷ், சட்டிஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இரநூருக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.



இம்மாநாட்டின் தீர்மானங்களை கூட்டதில் படித்த மாநாட்டின் புரவலர் திரு.இந்ரேஷ் குமார், இந்த சிக்கலான விஷயம் குறித்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் இவ்வளவு  துணிச்சலாக தங்கள் கருத்துக்களையும் உண்மைகளையும் பகிர்ந்து கொண்டமை குறித்து பாராட்டு தெரிவித்தார்.

·  முஸ்லிம்களால் நடத்தப்படும் உலகின் முதல் பசு பாதுகாப்பு மாநாடு என்று குறிப்பிட்ட அவர், 1857 ஆண்டு கடைசி முகலாய அரசரான பகதூர் ஷா பசுவதையை முற்றிலும் தடை செய்தார் என்று தெரிவித்தார். மேலும், பாரதத்தில் ராமராஜ்யம் ஏற்பட பசுப்பாதுகாப்பை வலியுறுத்திய மகாத்மா காந்தியின்  உறுதியான நிலைப்பாடு மற்றும் நம்பிக்கை குறித்து நினைவூட்டிய அவர், காந்திய வழியில் செல்வதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பசுக்களை கொல்ல கதவுகளை திறந்து விட்டதை குறிப்பிட்டார்.

·         தீர்மானத்தில், பசுக்களை கொலை செய்வதை பூரணமாக தடை செய்தும், அந்த தடையை தீர்க்கமாக அமுல்படுத்த வலிமையான மத்திய சட்டமும் கோரப்பட்டது. பசு அகில உலகின் தாய் என்றும், மு.ரா.ம. ஐக்கிய நாடுகள் சபையை அணுகி, மனித சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு அதன் உறுப்பினர் நாடுகளில் பசுக்கொலையை தடை செய்ய வலியுறுத்தும்படியும் அழுத்தம் கொடுக்கப்போவதாக தீர்மானித்துள்ளது.

·         கிறிஸ்தவம், இஸ்லாம், ஜூடாஸ்ம், புத்தம், சமணம், சீக்கியர் உட்பட பல்வேறு மத தலைவர்களும், மனித சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பை வலியுறுத்தி செய்திகள் வெளியிட வேண்டும் என்றும், மத்திய-மாநில  அரசுகள் பசுக்கள் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிக்கவும், இயற்கை வேளாண்மையை பிரபலப்படுத்தி அதன் சந்தை வாய்ப்புக்களை பெருக்கவும் வசதிகள் செய்து தர கோரியது.

·         மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவும் வருங்காலத்தில் ஆக்கிரமிக்க முடியாதவாறு வலிமையான சட்டங்கள் இயற்றவும், பசுமாமிசம் ஏற்றுமதியையும், பசுவதைக்கூடங்களையும் முழுமையாக தடை செய்து மூடிவிடவும் மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.


·         மாநாட்டின் உறுப்பினர்களை பசு சேவைக்கென தங்களின் நேரத்தை அர்ப்பணிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதோடு, மத்திய சர்க்கார் ய்ர்ப்பாட்டில் மாவட்ட அளவு வர தேசம் முழுவதும், பசுப்பாதுகப்ப்புக்கென ஒரு கமிஷன் ஏற்பாடு செய்யப்பட்டு, பசு நலன் குறித்த நடவடிக்கைகளும் பசு சார்ந்த இயற்கை வேளாண்மை மற்றும் இதர நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட வலியுறுத்தப்பட்டது.

·         மேலும், புனித குரானில் முதல் அத்யாயம் “சுரா பக்ரா” பசுக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை நினைவூட்டினர். மேலும் இறைதூதர், நோய்கள ஏற்ப்படுத்தும் என்பதால் பசுமாமிசம் உண்பதை தடை செய்ததையும் அதே நேரம் பசுவின் பால் நெய் போன்றவை ஆரோக்கிய நற்குணங்கள் நிரம்பியவை எனவே அவற்றை அதிகளவில் பயன்படுத்தவும் உத்தரவிட்டதை குறிப்பிடப்பட்டது.

·         கடந்த 1432 ஆண்டுகளாக புனித மெக்காவில் பசுக்கள் பலியிடப்படவே இல்லை. எனவே பசுக்கொலை பிரச்னை அரசியல் பிரச்னை தான் எனவும், மனித சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் கண்ணோட்டத்தில் தான் அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பாரதத்தின் முதல் இஸ்லாமிய பள்ளியான “தாருல் உலூம் தேவ்பந்” பல்வேறு காலகட்டங்களில் பசுக்கொலைக்கு எதிராக பத்வாக்கள் வெளியிட்டுள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.




இந்த தீர்மானங்களை அங்கீகரித்து அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட பலரும் கையெழுத்திட்டனர்.

Tuesday, 18 March 2014

எல்லா சாம்பலும் விபூதியா?? - பிரபல பிராண்டுகளில் போலி விபூதிகள்

நம் தேசத்தில் திருநீருக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. மருத்துவம், ஆன்மிகம், அன்றாட வாழ்வு என்று அனைத்திலும் இரண்டற கலந்தது திருநீறு. ஆனால், இன்றளவில் நாம் உண்மையான விபூதியை பயன்படுத்தி அதன் பலன்களை அனுபவிக்கிரோமா என்றால் இல்லை. காரணம் போலி பொருட்கள். உண்மையான விபூதியில் கலப்படம் செய்தால் கூட ஒரு அர்த்தம் உண்டு; ஆனால் இங்கு விபூதி என்று விற்கப்படும் சாம்பல் விபூதியே அல்ல எனபதுதான். இங்கு வேடிக்கை என்னவென்றால் போலி பொருள் விலை அதிகம்; ஆனால் உண்மையான விபூதி விலை குறைவாக விற்பதுதான்!




திருநீறு என்பது நாட்டுபசுவின் சாணத்தை உருண்டை பிடித்து தட்டி காயவைத்து அடுக்கி நெல் கருக்கை கொண்டு ஸ்புடம் போட்டு தயாரிக்கப்படுவதே. இதற்கு பல விதிமுறைகளும் வழிமுறைகளும் உண்டு. அவ்வாறு இரண்டு மூன்று நாள் பொடிந்து வரும் சாம்பலை சலித்து எடுத்து வருவதே சுத்தமான விபூதி. இதை இட்டுக்கொள்வதால் பித்தம் உறிஞ்சப்படும் மற்றும் விபூதியின் பலன் என்று சொல்லப்படும் அனைத்து நன்மைகளும் கிட்டும். 



ஆனால் தற்போது விபூதி என்று பிரபல பிராண்டுகள் முதற்கொண்டு பல பிராண்டுகளில் விற்கப்படும் திருநீறுகள் பேப்பர் சாம்பல், கல் பொடி, குப்பைகளின் சாம்பல் என்று நைஸாக வர என்ன என்ன உதவுமோ அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர், சீமை மாட்டின் சாணத்தில் இருந்து விபூதி செய்கிறார்கள்; சிலர் நாட்டுபசுவின் சாணத்தில் கேஸ் எடுத்து நான்கு நாள் ஊறிபோய் வெளியேறும் ஸ்லரி (slurry) கொண்டு விபூதி செய்கிறார்கள். இவை அனைத்துமே தவறானதாகும். இவர்கள் மொழியில் திருநீறு என்பது வெறும் சாம்பல் என்றாகிவிட்டது! இந்த போலி சாம்பலை விபூதி என்று கோயில்களில் இறைவனுக்கு பயன்படுத்துவதோ மக்களுக்கு கொடுப்பதோ பெரும்பாவமாகும். இவற்றை அணிவதால் உடலுக்கு தீங்கே விளையும்.  நல்ல திருநீறு சாம்பலை போலவும் கொஞ்சம் நற நற வென்றே (நன்றாக சலிக்கப்பட்டால் இன்னும் கொஞ்சம் நைசாக)  இருக்குமே ஒழிய, வெள்ளை வெளேர் என்றும் மிக மிக நைஸாகவெல்லாம் இருக்காது. 

சுத்தமான விபூதி வேண்டுவோர், நாட்டுப்பசுக்களை வைத்துள்ள நல்ல கோசாலைகளை அணுகி, சுத்தமான விபூதியா என்று உறுதி செய்து வாங்கி பயன்படுத்தவும். கோயில் நிர்வாகிகளிடம் சுத்தமான விபூதியை வாங்கி  கொடுக்குமாறு அறிவுறுத்தவும். அப்படி சுத்தமான விபூதி வேண்டுவோர், வெளியில் வாங்க இயலாதோர் +91 88837-40013 எண்ணை தொடர்பு கொள்ளவும். சுத்தமான விபூதி கிடைக்கக் ஏற்ப்பாடு செய்வார்.

Friday, 14 March 2014

தமிழக சர்க்காரின் அறிவுறுத்தலும் காவல் துறையின் மெத்தன போக்கும்

தமிழக சர்க்காரின் கால்நடைத்துறை 2012 டிசம்பர் மாதத்திலேயே, எல்லா எஸ்பி, கலக்டர் அலுவலகங்களுக்கும் மிருக வதைகள் சட்டம் மற்றும் கால்நடை போக்குவரத்து குறித்த தகவல்களையும், அதை மீறுவோருக்கும், பசுக்களை ஏற்றி செல்லும் வண்டிகளையும் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்குகள் பதிவு செய்ய சொல்லியும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. RoC No: 64816/J2/2012.

பசு ஆர்வலர்கள், அவரவர் மாவட்டத்தில், இதுவரை எத்தனை வழக்குகள் பதிந்துல்லார்கள். எவ்வளவு பசுக்கள் மீட்கப்பட்டன என்பது குறித்து தகவல் பெரும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க வேண்டும். ஏனெனில், ஒரு முறை மாவட்ட துணை கலக்டருக்கே இந்த சட்டங்களின் ஷரத்துக்களை நம் குழு தான் சொல்லித்தந்தது. நிலை இவ்வாறு இருக்க, இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சாமானிய காவலர்களுக்கு இதை பற்றி அறிய வாய்ப்பில்லை. 

இந்த தகவல் நமக்கு மிக சிறந்த ஆயுதமாகும். இதை கொண்டு அரசாங்கத்தை வேளை செய்ய வலியுறுத்தலாம்.



Friday, 10 January 2014

பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்

பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்

·      அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள்,

“பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”

·      ஆச்சார்ய விநோபாவே

“நான் பைபிள் குரான் இரண்டையும் படித்துள்ளேன். மறைமுகமுகமாக இரண்டும் சொல்வது, பசுவை கொல்வது பெரும் பாவமே”

·      ஹக்கீம் அஜ்மல் கான், இஸ்லாமிய தேசியவாதியும், இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், யுனானி மருத்துவத்தை மீட்ட மிக பெரும் நிபுணரும் ஆவார்,

“குரானோ, அரேபிய மரபுகளோ பசுக்கொலையை அனுமதிக்கவில்லை“

·      புகழ்பெற்ற இஸ்லாமிய தத்துவ மேதையும், பாக்தாத் இஸ்லாமிய மையத்தை தோற்றுவித்தவருமான அல்கஸ்அலி (1058-1111AD), அஹ்ய உல் தீன் (Revival of Religoious Science) என்னும் புத்தகத்தில்,

“மாட்டின் இறைச்சி ஒரு நோய் (மார்ஸ்), அதன் பால் புனிதமானது, ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் அதன் நெய் ஒரு மருந்து.பசு மனித குலத்திற்கு தாயைப்போல.மனிதர்க்கு இறையருளை போல் அனைத்தையும் தரவல்லது. தாய் குழந்தைக்கு பாலூட்டுவதை போல் மனித சமூகதிர்க்கே பாலை கொடுக்கிறது. பசுவின் பால் மூளைக்கும் நினைவாற்றலுக்கும் நல்லது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. உறுதியான மூளை உள்ளவன் அல்லாவை என்றும் நினைத்திருப்பான். அதனால் பால் மனிதகுலத்தின் அடிப்படை தேவை. அப்படிப்பட்ட மாட்டை கொள்வது கொடிய பாவம். அசைவ உணவுக்கு மற்ற வழிகள் உள்ளபோது, மனித குலத்தின் நன்மை கருதி பசுவை கொல்வதை நிறுத்த வேண்டும். பசுக்களை காப்பது மானுட கடமை மட்டும் அல்ல அது ஒரு இறைகடனும் ஆகும்”

·      மொகலாய சாம்ராஜ்யத்தின் முதல் அரசரும், இந்தியாவுக்குள் இஸ்லாமிய அரசை நிறுவியவரும், தீவிர இறை பற்றாளருமான மாமன்னர் பாபர் (தனது ‘துசுக்-இ-பாபரி’ புத்தகத்தில் ஏட்டில்),

“மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் பசுக்கள் பலியிடபடுவத்தை/கொல்லப்படுவதை அனுமதிக்க கூடாது. இதை மீறும் எனது வழிவந்தவர்கள் யாராயினும் குடிமையாலும், சாமானிய மக்களாலும்  தூக்கி எறியபடவேண்டும்”

·      மொகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர் 28.07.1857 அன்று வெளியிட்ட அரச கட்டளை,

“இறைவனின் படைப்பில் (கல்க் குதா கா), பேரரசரின் சாம்ராஜ்யத்தில், தலைமை தளபதின் உத்தரவினால், யாரெல்லாம் பசுக்களையோ, காளைகளையோ, கன்றுகளையோ – பொது இடத்திலோ/வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ரகசியமாகவோ- வெட்டினாலோ/பலியிட்டாலோ, பேரரசரின் விரோதியாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கபடுவார்கள்”

·      மைசூர் சுல்தான்கள் சாம்ராஜ்ஜியம்:

“பசுக்களும் மாடுகளும் கன்றுகளும் கொல்லப்படுவதும், பலியிடப்படுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்ட குற்றம். மீறுபவர்கள் கைகள் துண்டிக்கப்படும்”

·      பத்மஸ்ரீ முஜாபர் ஹுசைன், 13 தேசிய விருதுகள் பெற்ற இஸ்லாமிய எழுத்தாளர்,


“புனித குரானின் எந்த ஒரு சுராவிலும் (அத்தியாயத்திலும்) பசுக்களையோ, காளைகளையோ கொல்ல அனுமதிக்கவில்லை”

Friday, 3 January 2014

நாட்டு பசுக்கள் குறித்த புத்தகம் வாங்க..