Wednesday, 3 September 2014

பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்


• அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், 

“பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்” 

• ஆச்சார்ய விநோபாவே

“நான் பைபிள் குரான் இரண்டையும் படித்துள்ளேன். மறைமுகமுகமாக இரண்டும் சொல்வது, பசுவை கொல்வது பெரும் பாவமே”

• ஹக்கீம் அஜ்மல் கான், இஸ்லாமிய தேசியவாதியும், இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், யுனானி மருத்துவத்தை மீட்ட மிக பெரும் மருத்துவ நிபுணரும் ஆவார்,

“குரானோ, அரேபிய மரபுகளோ பசுக்கொலையை அனுமதிக்கவில்லை“

• புகழ்பெற்ற இஸ்லாமிய தத்துவ மேதையும், பாக்தாத் இஸ்லாமிய மையத்தை தோற்றுவித்தவருமான அல்கஸ்அலி (1058-1111AD), அஹ்ய உல் தீன் (Revival of Religoious Science) என்னும் புத்தகத்தில்,

“மாட்டின் இறைச்சி ஒரு நோய் (மார்ஸ்), அதன் பால் புனிதமானது, ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் அதன் நெய் ஒரு மருந்து.பசு மனித குலத்திற்கு தாயைப்போல.மனிதர்க்கு இறையருளை போல் அனைத்தையும் தரவல்லது. தாய் குழந்தைக்கு பாலூட்டுவதை போல் மனித சமூகதிர்க்கே பாலை கொடுக்கிறது. பசுவின் பால் மூளைக்கும் நினைவாற்றலுக்கும் நல்லது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. உறுதியான மூளை உள்ளவன் அல்லாவை என்றும் நினைத்திருப்பான். அதனால் பால் மனிதகுலத்தின் அடிப்படை தேவை. அப்படிப்பட்ட மாட்டை கொள்வது கொடிய பாவம். அசைவ உணவுக்கு மற்ற வழிகள் உள்ளபோது, மனித குலத்தின் நன்மை கருதி பசுவை கொல்வதை நிறுத்த வேண்டும். பசுக்களை காப்பது மானுட கடமை மட்டும் அல்ல அது ஒரு இறைகடனும் ஆகும்”

• மொகலாய சாம்ராஜ்யத்தின் முதல் அரசரும், இந்தியாவுக்குள் இஸ்லாமிய அரசை நிறுவியவரும், தீவிர இறை பற்றாளருமான மாமன்னர் பாபர் (தனது ‘துசுக்-இ-பாபரி’ புத்தகத்தில் ஏட்டில்),

“மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் பசுக்கள் பலியிடபடுவத்தை/கொல்லப்படுவதை அனுமதிக்க கூடாது. இதை மீறும் எனது வழிவந்தவர்கள் யாராயினும் குடிமையாலும், சாமானிய மக்களாலும் தூக்கி எறியபடவேண்டும்”

• மொகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர் 28.07.1857 அன்று வெளியிட்ட அரச கட்டளை,

“இறைவனின் படைப்பில் (கல்க் குதா கா), பேரரசரின் சாம்ராஜ்யத்தில், தலைமை தளபதின் உத்தரவினால், யாரெல்லாம் பசுக்களையோ, காளைகளையோ, கன்றுகளையோ – பொது இடத்திலோ/வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ரகசியமாகவோ- வெட்டினாலோ/பலியிட்டாலோ, பேரரசரின் விரோதியாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கபடுவார்கள்”

• மைசூர் சுல்தான்கள் சாம்ராஜ்ஜியம்:

“பசுக்களும் மாடுகளும் கன்றுகளும் கொல்லப்படுவதும், பலியிடப்படுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்ட குற்றம். மீறுபவர்கள் கைகள் துண்டிக்கப்படும்”

• பத்மஸ்ரீ முஜாபர் ஹுசைன், 13 தேசிய விருதுகள் பெற்ற இஸ்லாமிய எழுத்தாளர்,

“புனித குரானின் எந்த ஒரு சுராவிலும் (அத்தியாயத்திலும்) பசுக்களையோ, காளைகளையோ கொல்ல அனுமதிக்கவில்லை”

உலகில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட முதல் பசுப் பாதுகாப்பு மாநாடு இந்தியாவில்தான் 2014 ஆண்டு நடந்தது. அம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட செய்திகளில் சில,

“..புனித குரானில் முதல் அத்யாயம் “சுரா பக்ரா” பசுக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை நினைவூட்டினர். மேலும் இறைதூதர், நோய்கள ஏற்ப்படுத்தும் என்பதால் பசுமாமிசம் உண்பதை தடை செய்ததையும் அதே நேரம் பசுவின் பால் நெய் போன்றவை ஆரோக்கிய நற்குணங்கள் நிரம்பியவை எனவே அவற்றை அதிகளவில் பயன்படுத்தவும் உத்தரவிட்டதை குறிப்பிடப்பட்டது. கடந்த 1432 ஆண்டுகளாக புனித மெக்காவில் பசுக்கள் பலியிடப்படவே இல்லை. எனவே பசுக்கொலை பிரச்னை அரசியல் பிரச்னை தான் எனவும், மனித சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் கண்ணோட்டத்தில் தான் அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பாரதத்தின் முதல் இஸ்லாமிய பள்ளியான “தாருல் உலூம் தேவ்பந்” பல்வேறு காலகட்டங்களில் பசுக்கொலைக்கு எதிராக பத்வாக்கள் வெளியிட்டுள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்..”

கொங்க கோசாலை


கேரளா வெட்டுக்கு செல்லும் நாட்டுப்பசுக்களை மீட்டு அவற்றை வைத்து பராமரித்து நன்மையடையும் நல்லோருக்கு விற்பனை செய்து வருகிறது கொங்க கோசாலை. நீங்கள் நாட்டுப்பசுக்களை வாங்க விரும்பினால் கொங்க கோசாலையை அணுகவும். நாட்டுப்பசுவோடு, பசுவை காத்த புண்ணியமும் சேரும்.



தொடர்புக்கு: +91 93608 30039

கொங்கதேச பகுதிகளில் வாங்கப்படுவதால் கொங்கதேச பசுக்கள் மட்டுமே இருக்கின்றன. கொங்கதேச பகுதியில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பசுக்களை வாங்குவோர் வெட்டுக்கு விர்கமாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்தவர்கள், நாட்டுப்பசுக்கள் வாங்க விரும்புவோர் அவசியம் தொடர்பு கொள்ளவும். பரிந்துரை செய்யவும்.

வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள்



வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள், அவைகளை கோமாதா
லக்ஷ்மி என்றெல்லாம் அன்போடும் பாசத்தோடும்,
பொங்கலன்று பூ வைத்து போட்டுவைத்தும் அழகு
பார்த்து, தன் பிள்ளைகள் போலவே பாவிக்கின்றனர்

ஆனால், தன் இரத்தத்தை பாலாக மாற்றி நம் தாய்க்கு
நிகராக தங்கள் வீட்டில் வளர்ந்த மாட்டை வயதான
பின்பு அடிமாட்டுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர்,

சிலர் கோவிலுக்கு காணிக்கையாக விட்டு விடுகின்றனர்.
கோவிலிலும் நிறைய மாடுகள் சேர்ந்ததும் அவைகளை
மொத்தமாக ஏலம் விட்டுவிடுகிறார்கள்...

கோவில்களில் ஏலம் விடும் மாடுகளை அடிமாட்டுக்கு
அதாவது அறுப்பு மாட்டுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்

இப்படி அறுப்பு மாட்டுக்கு எடுத்துச்செல்பவர்கள் மாடுகளை
பலவித சித்தரவதைகளுக்கு ஆளாக்குகின்றனர் ...

லாரிகளில் நிறைய மாடுகளை ஏற்றி பலநாட்கள் அவைகளை
பட்டினி போட்டு மழையிலும் வெய்யிலிலும் நிற்கவைத்தே கஷ்டப்படுத்தி கொடுமைபடுத்தி மாடு அறுக்கும் இடத்திற்கு
கொண்டு செல்கின்றனர் ....

இறுதியில் அவைகளின் கழுத்தை அறுப்பதற்கும் முன்
பெரிய சுத்தியால் அவைகளின் மண்டையில் ஓங்கி
பலமுறை அடிக்கின்றனர் ...

ஏனெனில் நல்ல நிலையில் இருக்கும் மாடுகளின் கழுத்தை அறுத்தால், அவை கழுத்து அறுபட்ட பின்பு வெகுநேரம் துள்ளி துடித்து அறுப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்ப்படுத்தும் என்பதால்

பாருங்கள் நண்பர்களே ....
கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள் ...
அவைகளும் நம்மை போல ஒரு உயிர்தானே ....
தன் இரத்தத்தையே பாலாக மாற்றி,
நம் தாய்க்கு நிகராக விளங்கும் மாடுகளின் நிலையை
கொஞ்சம் நினைத்து பாருங்கள் ...

அன்பு நண்பர்களே !!!

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள்
உறவினர்கள் யாரேனும் மாடு வளர்ப்பவர்களாக
இருந்தால் தயவு செய்து மாடுகளை அடிமாட்டுக்கு
விற்கவோ அல்லது கோவில்களுக்கு காணிக்கை
செலுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்...

நம் வீட்டு தோட்டத்தில் நமக்காகவே வளர்ந்த மாட்டை
அதன் ஆயுள் முடியும் வரை வளர்ப்போம் ...இறந்தபின்பு
தோட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் புதைத்து அதன் மீது
இரண்டு கனிதரும் மரக்கன்றுகளை நடுவோம் ...
இறந்த மாட்டின் உடல் அந்த மரங்களுக்கு நல்ல, சிறந்த
எருவாகிவிடும் .....

கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள் ...
அவைகளும் நம்மை போல ஒரு உயிர்தானே ....
நன்றி mpr

அக்னிஹோத்ரம்

அக்னிஹோத்ரம் என்பது என்ன ? 
(குறிப்பு: இங்கே பசு என்றால் நாட்டுப்ப்பசு; நெய் என்றால் நாட்டுப்பசுவின் நெய்)

பூமியை சுற்றி சந்திரன், சூரியன் மற்றும் பல கிரகங்கள் ஓடுகின்றன. பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ளும்போது அந்த கிரகங்கள் ஒவ்வொரு இடங்களிலும் நிற்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட நேரங்களில் மனிதன், மிருகம் மற்றும் நமது எண்ணங்கள் என அனைத்தும் ஒரு மாறுதலுக்கு உள்ளாகின்றன. உண்மையைக் கூறினால் அலைகழிக்கப்படும் மனதையும் கூட அந்த குறிப்பிட்ட நேரங்களில் ஸ்திரப்படுத்தினால் நாமும் மனத்தைக் கட்டுப்படுத்தும் திறமையைப் பெற்று விடுவோம். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சுற்றி உள்ள பிரபஞ்சத்தின் வெளியை சுத்தப்படுத்தினால் போதும். அப்படிப்பட்ட நேரத்தில் நம் வீட்டில் உள்ள வெற்று இடத்தையும் நம்மையும் தூய்மைப்படுத்தும் , மன அமைதியைத் தரும் . அதை பெற சில நிமிடங்களே செய்ய வேண்டிய சிறிய வேள்வியே அக்னிஹோத்ரம் என்பது. 



அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுன்கீனப்படுத்தும் நம் வீட்டில் 
வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும்- ரிக், யுஜுர்வன, சாம மற்றும் அதர்வண வேதங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. அக்னிஹோத்ராவை வேத நாராயணனை வேண்டியே செய்தார்கள். ரிஷி முனிவர்கள் துவக்கி வைத்த அதை அப்போது சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த பிராமணர்களே செய்து வந்துள்ளார்கள். வேதத்தில் கூறப்பட்ட முறையிலான அக்னிஹோத்ராவை இன்னமும் கேரளாவில் சில நம்பூத்ரி பிராமணர்கள் கடைப்பிடித்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் காலப்போக்கில் அதே ஹோமத்தை நமக்குத் தேவையான அளவில் மாறுதலாக்கித் தந்து உள்ளார்கள். கடைபிடிக்கப்படும் முறைதான் வேறுபட்டு உள்ளதே தவிர அதன் முடிவில் நமக்கு கிடைக்கும் பலன் இரண்டும் ஒன்றுதான்.
அக்னிஹோத்ரா செய்ய தேவையான பொருட்கள் என்ன? 

ஒரு பிரமிட்
பசு வரட்டி
நல்ல நெய்
முழு அரிசி 
நான்கு வரி மந்திரங்கள். 

இதை எங்கு, யார் செய்யலாம் ? 

இதை வீட்டிற்குள் எந்த அறையிலும் செய்யலாம்
சிறியவர் பெரியவர் என்ற பேதம் இல்லை
ஜாதி மத பேதமும் இல்லை
ஆண்கள் இல்லை பெண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம் 
இதற்கு விரதம் இருந்துவிட்டே செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை
குறிப்பிட்ட நேராத்தில் மட்டும் செய்ய வேண்டும் என்பதே விதி. 

இதை ஆரம்பித்தப் பின் சில நாட்களில் நிறுத்தி
விட்டால் ஏதாவது தீமை வருமா ? 
நிச்சயமாக அப்படி எதுவுமே இல்லை. செய்தவரை அதற்கான நல்ல பலன் கிடைக்கும். விட்டுவிட்டால் எப்போதும் போலத்தான் இருப்பீர்கள். நாம் பல பூஜைகளை ஆரம்பித்துவிட்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் பாதியில் நிறுத்தி விடுவது இல்லையா ? அப்படித்தான் இந்த அக்னிஹோத்ரமும். 

சரி அக்னிஹோத்ராவை எப்படி செய்ய வேண்டும்? 
குறிப்பிட்ட நேரத்தில் காலை சூரிய உதயத்தின்போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் சிறிய பிரமிட் போன்ற தாமிர குண்டத்தில் பசு வரட்டியை வைத்து கற்பூரத்தை முதலில் ஏற்றி அடந்த தீயினால் நெய்விட்ட பசுவரட்டியை பற்ற வைத்து அதை பிரமிட் போன்ற குண்டத்தில் வைத்து எரிய விடவேண்டும். அப்போது அந்த நான்கு வரி மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டே பசு நெய்யினால் ஈரப்படுத்திய சிறிது அரிசியை ஐந்து விரல்களினாலும் எடுத்துக் கொண்டு ஸ்வாகா எனக் கூறிக்கொண்டே அந்த ஹோம குண்டத்தில் போட வேண்டும். அவ்வளவுதான். 
அக்னிஹோத்ர மந்திரம்

காலையில் கூற வேண்டிய 
அக்னிஹோத்ர மந்திரம் 
அக்னயே ஸ்வாகா
அக்னயே இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாகா 
பிரஜாபதயே இதம் ந மம 

மாலையில் கூற வேண்டிய 
அக்னிஹோத்ர மந்திரம் 
சூர்யாய ஸ்வாகா
சூர்யாய இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாகா 
பிரஜாபதயே இதம் ந மம 

அப்படி செய்து முடித்தப் பின் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.ஹோமம் முடிந்தது. வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை. அதன் பலன் பத்தே நாட்களில் தெரியத் துவங்கும் என்கிறார்கள். வீடு அமைதியாக உள்ள உணர்வு ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் செய்யும் காரியங்கள் தடங்கல் இன்றி நடக்கும்.


போபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும்

வேதம் கூறும் யக்ஞத்தை மேலை நாடுகள் விஞ்ஞான பூர்வமாக ஆர்வத்துடன் ஆராய ஆரம்பித்து வெகு காலமாயிற்று. அந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களை வியக்க வைத்தன. ஆனால் வெளி உலகிற்கு அதிகமாகத் தெரியாத இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்தியாவில் 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி நடந்த கோர விபத்தினால் வெளி வந்து பிரபலமாகி அக்னிஹோத்ரத்தின் மகிமையை அதிகமாகப் பரப்பின.

யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த MIC விஷ வாயு அந்த டிசம்பர் இரவில் ஏராளமானோரை பலி வாங்கியது.

ஆனால் சோஹன்லால் குஷ்வாஹா என்பவர் தன் வீட்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்த போது அவர் மனைவி உடனடியாக அக்னி ஹோத்ரம் செய்யச் சொன்னார். சோஹன்லால் அக்னிஹோத்ரம் செய்யவே அவர் வாந்தி நின்றது. விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இருபதே நிமிடங்களில் சுற்றுப்புறம் முழுவதும் விஷம் அகன்றது!

எம்.எல்.ரதோர் என்பவர்  ஐந்து வருடங்களாக அக்னிஹோத்ரம் செய்து வருபவர். அவரும் அதே நள்ளிரவில் எழுந்த ஓலக்குரல்களையும் அழுகுரல்களையும் கேட்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சு வாயுவினால் ஏராளமானோர் இறந்ததைக் கேட்டார். உடனே த்ரயம்பக் யக்ஞத்தை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம். அவர் வீட்டில் விஷப் புகை நுழையவில்லை; அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எந்த விதமான விஷ பாதிப்புமின்றி நலமுற இருந்தனர்.

வர்ஜீனியா ஆராய்ச்சி: 

யூனியன் கார்பைடு நிறுவனம் இந்த ‘ஹோம எபெக்டைப்’ பற்றிக் கேள்விப்பட்டது. வெஸ்ட் வர்ஜீனியாவில் உள்ள அதன் தலைமையகத்தில் இதைப் பற்றி ஆராய உத்தரவிட்டதோடு லட்சக்கணக்கான டாலர்களையும் ஆராய்ச்சிக்காகத் தந்து உதவியது.

விஞ்ஞானிகள் அக்னிஹோத்ரத்தின் நல் விளைவுகளை ஆராய ஆரம்பித்தனர்.

ஏற்கனவே அக்னிஹோத்ரம் பற்றி விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்த பாரி ரத்னரின் முடிவுகளை இந்த விஞ்ஞானிகளும் உறுதிப் படுத்தினர்.

அக்னிஹோத்ர பயன்கள்

ரத்னர் அக்னிஹோத்ரத்தின் பயன்களாக பல விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்:

ரணமாகி இருக்கும் வளி மண்டலத்தை அக்னிஹோத்ரம் சீராக்குகிறது.

வளிமண்டலத்திற்கு உறுதியான ஊட்டச்சத்தை அக்னிஹோத்ரம் அள்ளித் தருகிறது.

அக்னிஹோத்ரம் தாவரங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறது; பறவைகளைச் சந்தோஷமடையச் செய்கிறது.இயற்கையில் உள்ள ஆக்ஸிஜன் மறு சுழற்சிச் சுழலை லயத்துடன் இருக்கச் செய்ய உதவுகிறது. நீர் நிலைகளில் சூரிய ஒளியை நன்றாக உறிஞ்ச வழி வகை செய்கிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல மருந்துகளைத் தயாரிக்க முடிகிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல பயிர்களை விளைவிக்க முடிகிறது. அக்னிஹோத்ரம் விஷத்தை முறிக்கும் அருமருந்தாக இருக்கிறது!

வேதம் கூறும் விஞ்ஞானம்

வேதம் கூறும் பயோ எனர்ஜி விஞ்ஞானம் பிரபஞ்சத்தில் கோடானுகோடி சூரிய மண்டலங்கள் உள்ளது என்றும் அதில் நமது சூரிய மண்டலத்தில் உள்ள பூமியைப் போல அரிதான ஒன்று இல்லை என்றும் கூறி மனிதனின் பிராண சக்தியை வளர்ப்பது யக்ஞங்களே ஆகும் என்று கூறுகிறது.

பல நாடுகளிலும் பரவி வரும் அக்னிஹோத்ரம்


ரத்னர் மேற்கு ஜெர்மனியில் ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாகக் கூறினார்.

நாமக்கல ஈரோடு - பசு பாதுகாப்பு

ஆரோக்கியம், விவசாயம் மற்றும் நம் நாட்டின் பொருளாதாரம் என நம் நாட்டின் வளத்துக்கும் அனைத்துக்கும் காரணமாகவும் நம் மக்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த உறவுமான நம் நாட்டு பசுக்கள் பெருமளவில் அழிந்து வந்தது. தற்போது விவசாயிகள் பலர் அதை உணர துவங்கி தேடும்போது நாட்டு பசுக்கள் வளர்க்க நினைப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் புரோக்கர்களின் கைங்கர்யத்தால் மாட்டு சந்தைகளுக்கு பல அற்புதமான பசுக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த பசுக்களை வாங்கவும் அதை நல்ல விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும் பணிகள் செய்ய நண்பர்கள் ஒன்றிணைய வேண்டும். பசுக்கள் மீது பற்றும அன்பும் கொண்ட நண்பர்கள் இப்பணிகளுக்கு பணமாகவோ இல்லை, கொஞ்சம் நேரத்தையோ செலவிட நினைப்பவர்கள் +91 99448-55044 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

பசுக்களே நம் தெய்வம். பசுக்களை காப்பதை விட புண்ணிய காரியம் வேறெதுவுமில்லை. பசுக்களை காப்பது நம்மையும், நம் குடும்பம், வம்சம், ஊர், நாடு, தேசம், ஆரோக்கியம், இயற்கை, பொருளாதாரம் என அனைத்தையும்/அனைவரையும் காப்பது போலாகும்.



வீரத்துறவி ஸ்ரீ ஸ்ரீ ப்ரணவானந்த சுவாமிஜி


சிருங்கேரியில் பசுக்கடத்தலில் கபீர், ரபீக் உட்பட சில இளைஞர்கள் ஈடுபடவே, நக்சல் ஒழிப்பு படை (Anti Naxal Force) அதிகாரி வண்டியை நிறுத்த சொன்னதும், இறங்கி தப்ப முயன்றவர்களில் கபீர் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த கபீருக்கு அரசு நிவாரண தொகை அறிவித்துள்ளது. அதை கண்டித்து பாரத் கிரந்தி சேனா வின் தேசிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரணவானந்த சுவாமிஜி அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளார். பசு கடத்திய குற்றவாளியான கபீருக்கு நிவாரணம் தருவதை வன்மையாக கண்டித்தார். மேலும் அந்த தொகை, அவனை சுட்டுக்கொன்ற அதிகாரிக்கு சென்று சேர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதிகாரியின் பெயர் வெளியிடப்பட்டால் அவருக்கு ஒரு லட்சம் ஊக்கத்தொகையும், அவர் வழக்கை நடத்தும் செலவையும் பாரத் கிரந்தி சேனா ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார். 



விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் ஐம்பதாயிரம் நிவாரணம் வழங்கும் அரசு, கடத்தல்காரன் மரணத்துக்கு ஐந்து லட்சம் வழங்குகிறது என்று குறிப்பிட்டு கண்டித்தார்.

Tuesday, 26 August 2014

முகமது பயிஸ் கான் உண்ணாவிரதம்

பசுவதை தடை சட்டம் கேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த முகமது பயிஸ் கான் வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில் தந்து 22 வது நாளில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட காட்சி.