“சர்வே தேவா ஸ்திதா தேஹே சர்வ தேவமயீஹி கௌ”
14 லோகங்களிலும் உள்ள 33 கோடி தேவர்களை-தெய்வங்களை
தன்னகத்தே கொண்டுள்ள கோமாதாவை (நாட்டு பசு) வணங்குகிறேன்
- பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
- கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
- சிரம் - சிவபெருமான்
- நெற்றி நடுவில் - சிவசக்தி
- மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
- மூக்கினுள் - வித்தியாதரர்
- இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
- இரு கண்கள் - சந்திரர், சூரியர்
- பற்கள் - வாயு தேவர்
- ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
- ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
- மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
- உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
- கழுத்தில் - இந்திரன்
- முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
- மார்பில் - சாத்திய தேவர்கள்
- நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
- முழந்தாள்களில் - மருத்துவர்
- குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
- குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
- குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
- முதுகில் - உருத்திரர்
- சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
- அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
- யோனியில் - ஏழு மாதர்கள்
- குதத்தில் - இலக்குமி தேவி
- வாயில் - சர்ப்பரசர்கள்
- வாலின் முடியில் - ஆத்திகன்
- மூத்திரத்தில் - ஆகாய கங்கை
- சாணத்தில் - யமுனை நதி
- ரோமங்களில் - மகாமுனிவர்கள்
- வயிற்றில் - பூமாதேவி
- மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
- சடாத்களியில் - காருக பத்தியம்
- இதயத்தில் - ஆசுவனீயம்
- முகத்தில் - தட்சிணாக்கினி
- எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
- எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.
No comments:
Post a Comment