நாட்டு பசுக்கள் 1.5-4 லிட் கறக்கயில் சீமை மாடுகள் (பன்றிகள்) ஆறு - பத்து லிட் பால் கறக்கிறது. ஏன்..? அதற்க்கு இயற்கையிலேயே பெண்மை தன்மை மிகுதி. பெண்மை ஹார்மோன் அதிகம். மூன்று நான்கு ஈத்துக்களில் சினை பிடிக்கும் தன்மை நின்று விடும். போதாக்குறைக்கு சீமை மாடுகளில் மரபணு மாற்றம் ஹார்மோன் ஊசி என்று ஏற்றி அதன் உடல் செயல்பாட்டையே கெடுத்துவிடுகிறார்கள். சீமை காளைகளை பார்த்தால் உணர்ச்சியற்ற ஜடமாக நிற்கும். அதன் பாலியல் உணர்வு மிக குறைவு. இதனால் சீமை பன்றி பாலை குடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலின் ஹார்மோன் சமநிலை தடுமாற துவங்கும். உணர்ச்சி பெருக்கடைந்த பெண்கள், உணர்ச்சி குறைபாடுடைய ஆண்கள் என்று சமூகம் சமநிலையை இழக்கும். இதனால் சமூகத்தில் கற்பொழுக்கம் சாத்தியமற்றதாகிறது.
இந்த ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் உடலின் அனைத்து செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை கோளாறுகள், பால் சுரப்பு, முறையற்ற மாதவிடாய் கோளாறு, சீக்கிரம் மாதவிடாய் நின்று விடுதல் என மறைமுக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சீமை மாடுகளை யார் வேண்டுமானாலும் தொடலாம் பால் கறக்கலாம். எதுவும் செய்யாமல் ஜடமாக நிற்கும். இதன் பாளை குடிக்கும் ஆண்களும் பெண்களும் அதுபோலத்தான் இருப்பார்கள். ரோஷம்-சொரணை குறையும். மூளையின் செயல்பாட்டில் வேகம் குறையும். முன்னாளில் சின்ன வார்த்தை தவறி சொன்னாலும் அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதும், கிட்டே நெருங்கி வரும்போதே எட்ட தள்ளி நின்று பேசும் பெண்களையும், சிறிய அவமதிப்பென்றாலும் உடனடியாக ரியாக்ட் செய்யும் பெரியவர்களையும் கண்டுள்ளோம். இன்று எவ்வளவு மட்டமாக பேசினாலும் சொரணை கேட்டு போனதுபோல் நிற்கும்படி குணம் எப்படி மாறியது..?
நாட்டு பசுக்களின் உடலில் ஆண்-பெண் ஹார்மோன் சரி விகிதமாக சீராக உள்ளது. அதன் பால் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தும்போது சீரற்ற ஹார்மோன் உள்ள உடலையும் சீராக்கும். இதனால் சீரான முறையான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ நம் உடலும் ஒத்துழைக்கும்.
நாட்டு பசுக்களை அதன் எஜமானரை தவிர கண்டவர்கள் எல்லாம் தொட முடியாது. ஓரிடத்தில் தொட்டால் அந்த இடத்தை மட்டும் சிலிர்த்து காட்டும். அவ்வளவு உணர்வு உள்ளது. அதன் பாலை தொடர்ந்து பயன்படுத்தும் போது புத்தி கூர்மை, ரோஷம், வீரம், தன்னிலை உணர்தல் எல்லாம் சரிவர நடக்கும்.
சீமை மாடுகளை பயன்படுத்துவோர், அதன் தாக்கம் முதல் தலைமுறையில் தெரியாவிட்டாலும், மரபணு மூலமாக இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையில் நிச்சயம் தெரிந்துவிடும்.
No comments:
Post a Comment