Sunday, 30 June 2013

நாட்டு பசுவும் பொருளாதாரமும்

பொருளாதாரம்

சீமை மாடுகள் மூன்று மடங்கு தீனி தின்றுவிட்டு நாட்டு பசுவை விட வெறும் ஒன்றரை மடங்கு பால் தருகிறது. (அந்த பாலின் மூலமாக பின்னாளில் பல வியாதிகள் வந்து உயிரை எடுக்கும் என்பது வேறு விஷயம்) மூன்று நான்கு ஈத்துகளில் கன்று ஈனும் தன்மை நின்று போகும் (பெரும்பாலான வகைகளில்). பராமரிப்பு, வேலை, தீனி அதிகம் தேவை. நோய் சீக்கிரம் தாக்கும். காளை கன்று ஈன்றால் வெட்டுக்கு தவிர வேறு எதற்கும் உதவாது. பஞ்ச காலங்களை தாங்காது. ஒரு முறை இளைத்தால் மீண்டும் தேறாது. இதன் சாணமும் சிறுநீரும்-நாட்டு பசுவின் நன்மையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை. ஆக, அதிக பால் சுரப்பால் தற்காலிகமாக கையில் பணம் புரள்வது போன்ற மாய தோற்றத்தை தவிர வேறு பலன் இல்லை.

நாட்டு பசுக்களின் நன்மைகளை இரு வகைகளில் பிரிக்கலாம். ஒன்று வருமான பெருக்கம் மற்றொன்று செலவு குறைப்பு.

செலவு குறைப்பு:
தீவன செலவு மிக குறைவு. பராமரிப்பு செலவு மிக குறைவு. நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகையால் மருத்துவ செலவு கிடையாது. விவசாய உரச்செலவு குறைகிறது (விரிவான விளக்கங்கள் விவசாயம் என்ற தலைப்பில்). பல நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலை தருவதால் மனிதர்களுக்கும் மருத்துவ செலவை மறைமுகமாக குறைக்கிறது. நாட்டு பசுக்கள் இருந்தால் டிராக்டர், டீசல், ஹார்லிக்ஸ்-பூஸ்ட் உள்ளிட்ட செயற்கை பானங்கள், யூரியா உட்பட பல உரங்கள், மாட்டு தீவனங்கள், நோய்க்கான மருத்துவ செலவுகள், மாடு பராமரிப்பு செலவுகளும் என ஏகப்பட்ட செலவுகள் மற்றும் நேரமும்  மிச்சமாகும். 

வருமான பெருக்கம்:
நாட்டு பசும்பாலை லிட்டர் ரூ.40 கொடுத்து வாங்கவும் மாநகரங்களில் மக்கள் தயாராக உள்ளனர். நாட்டு பசுவின் ஒரு வருடத்து காளை பஞ்ச காலத்திலும் ரூ.20,000 கு போகும். நாட்டு பசு பத்து ஈத்து குறையாமல் கொடுக்கும். நாட்டு பசுவின் சாணத்தில் இருந்து செய்யப்படும் விபூதி கிலோ ரூ.150 கு விற்கப்படுகிறது (3 கிலோ சாணம்=1 கிலோ விபூதி). சிறுநீர் கொண்டு செய்யப்படும் அர்க் லிட்டர் ரூ.500! (20 லிட் சிறுநீர்=13 லிட் அர்க்). பஞ்சகவ்யத்தின் மூலம் 300 கும் மேற்பட்ட மருந்துகள் பல்வேறு நோய்களுக்கு செய்யபடுகின்றன.

ஒரு நாட்டு பசுவின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1,000 சம்பாதிக்க முடியும் என சேலம் சுரபி கோசாலா நிறுவனர் சுவாமி ஆத்மானந்தா சொல்கிறார். அதற்க்காக இலவச பயிற்சியும் தருகிறார்.


தொடர்புக்கு: சுரபி பசு பாதுகாப்பு இல்லம், ஸ்ரீகுருதேவ் குருகுலம், ஸ்ரீநகரம், தெற்குஅம்மாப்பேட்டை, சேலம்- 636 014. அலைபேசி:94432-29061.

No comments:

Post a Comment