நாட்டு மாடு-சீமை மாடு அடிப்படை வித்தியாசங்கள்
நாட்டு மாடுகள் பற்றி புரிந்துகொள்ள அடிப்படையில் நாடு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள
வேண்டியது அவசியமாகும்.
நாடு என்றால் என்ன..?
இன்று உள்ளது போல படைபலம் கொண்டு தன்னால் இயன்ற அளவு பிடித்து கொள்வது நாடு
அல்ல. நாடு என்பது ஒவ்வொரு பகுதியின் நீர் வடிகாலை பொறுத்து அங்கு நிலவும் சீதோஷ்ண
நிலை, மண்ணின் தன்மை பொறுத்து அமையும், ‘தன்னிறைவு பெற்ற’ சீதோஷ்ண-சமூக-கலாசார-பொருளாதார
மண்டலங்கள். உதாரணம்: கொங்கு நாடு மலைகள் சூழ்ந்து, அந்த மலைகளில் இருந்து வடியும்
நீர் காவிரி உள்ளிட்ட நதிகளின் நீர்பிடிப்பு பகுதியாக இருக்கும். பாண்டிய
நாட்டுக்கு வைகை போல சீதோஷ்ண மண்டலங்களே நாடுகள். நாடுகள் பிரிக்கபட்டாலும் இந்த
தன்னிறைவு கொள்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதையே சனாதன கொள்கை (Sustainability) என்று சொல்வார்கள். அதாவது அந்நாட்டின் பெரும்பான்மை தேவைகளுக்கு அந்நாட்டை
விட்டு வெளியே செல்ல தேவை இருக்காது. நாடுகள் ஏன்? நம் கிராமங்களே சனாதன
கொள்கையின் அடிப்படையில் உருவானதே. வீட்டில் ‘செலவு டப்பா’ என்று சொல்கிறோமே, ஏன்..? அது ஒன்றுதான் செலவாக இருந்தது. அதாவது வெளியில்
சென்று வாங்க வேண்டியது. மீதி பொருட்கள் எல்லாம் உள்ளூரிலேயே கிடைக்கும் படி நம்
முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.
அப்படியான நாடுகளில், அந்த நாடுகளுக்கேற்ப மண்ணின் நுண்ணுயிர்கள் முதல்
செடிகொடிகள், காய் கறிகள், தானியங்கள்,
விலங்குகள், மனிதர்கள் அவர்தம் குணங்கள் செயல்பாடுகள் என அனைத்தும் மாறுபடும்.
இதையே நாட்டு ரகங்கள் என்கிறோம். இவை அந்த மண்ணின் தன்மையும், நீரையும், சீதோஷ்ண
நிலையையும் அனுசரித்து வருவதால் அம்மண்ணிற்கேற்ற வகைகள்-அதை தாங்கி வாழ கூடியதும்
ஆகும்.
Bos Taurus-Bos
Indicus
சீமை மாடுகளை ‘உயர் ரக’ என்னும் ஆடை மொழி
கொடுத்து நம் நாட்டிற்குள் “பல்வேறு சக்திகள்” திட்டமிட்டு நுழைத்து விட்டன. ஆனால் அவை முதலில் நம் மாடுகளே அல்ல. தற்கால
அறிவியல் உலகம் ஒவ்வொரு உயிரினத்திற்கும்
கொடுக்கும் உயிரியல் பேரை (Zoological Name) கொண்டே அறியலாம்.
நாட்டு பசுக்கள் – Bos Indicus
சீமை மாடுகள் (பன்றிகள்) - Bos Taurus
எனவே, சீமை மாடுகள் என்பன நம் மாட்டின் வகை என்பதே தவறு.
This comment has been removed by the author.
ReplyDelete