Wednesday 3 September 2014

பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்


• அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், 

“பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்” 

• ஆச்சார்ய விநோபாவே

“நான் பைபிள் குரான் இரண்டையும் படித்துள்ளேன். மறைமுகமுகமாக இரண்டும் சொல்வது, பசுவை கொல்வது பெரும் பாவமே”

• ஹக்கீம் அஜ்மல் கான், இஸ்லாமிய தேசியவாதியும், இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், யுனானி மருத்துவத்தை மீட்ட மிக பெரும் மருத்துவ நிபுணரும் ஆவார்,

“குரானோ, அரேபிய மரபுகளோ பசுக்கொலையை அனுமதிக்கவில்லை“

• புகழ்பெற்ற இஸ்லாமிய தத்துவ மேதையும், பாக்தாத் இஸ்லாமிய மையத்தை தோற்றுவித்தவருமான அல்கஸ்அலி (1058-1111AD), அஹ்ய உல் தீன் (Revival of Religoious Science) என்னும் புத்தகத்தில்,

“மாட்டின் இறைச்சி ஒரு நோய் (மார்ஸ்), அதன் பால் புனிதமானது, ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் அதன் நெய் ஒரு மருந்து.பசு மனித குலத்திற்கு தாயைப்போல.மனிதர்க்கு இறையருளை போல் அனைத்தையும் தரவல்லது. தாய் குழந்தைக்கு பாலூட்டுவதை போல் மனித சமூகதிர்க்கே பாலை கொடுக்கிறது. பசுவின் பால் மூளைக்கும் நினைவாற்றலுக்கும் நல்லது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. உறுதியான மூளை உள்ளவன் அல்லாவை என்றும் நினைத்திருப்பான். அதனால் பால் மனிதகுலத்தின் அடிப்படை தேவை. அப்படிப்பட்ட மாட்டை கொள்வது கொடிய பாவம். அசைவ உணவுக்கு மற்ற வழிகள் உள்ளபோது, மனித குலத்தின் நன்மை கருதி பசுவை கொல்வதை நிறுத்த வேண்டும். பசுக்களை காப்பது மானுட கடமை மட்டும் அல்ல அது ஒரு இறைகடனும் ஆகும்”

• மொகலாய சாம்ராஜ்யத்தின் முதல் அரசரும், இந்தியாவுக்குள் இஸ்லாமிய அரசை நிறுவியவரும், தீவிர இறை பற்றாளருமான மாமன்னர் பாபர் (தனது ‘துசுக்-இ-பாபரி’ புத்தகத்தில் ஏட்டில்),

“மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் பசுக்கள் பலியிடபடுவத்தை/கொல்லப்படுவதை அனுமதிக்க கூடாது. இதை மீறும் எனது வழிவந்தவர்கள் யாராயினும் குடிமையாலும், சாமானிய மக்களாலும் தூக்கி எறியபடவேண்டும்”

• மொகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர் 28.07.1857 அன்று வெளியிட்ட அரச கட்டளை,

“இறைவனின் படைப்பில் (கல்க் குதா கா), பேரரசரின் சாம்ராஜ்யத்தில், தலைமை தளபதின் உத்தரவினால், யாரெல்லாம் பசுக்களையோ, காளைகளையோ, கன்றுகளையோ – பொது இடத்திலோ/வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ரகசியமாகவோ- வெட்டினாலோ/பலியிட்டாலோ, பேரரசரின் விரோதியாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கபடுவார்கள்”

• மைசூர் சுல்தான்கள் சாம்ராஜ்ஜியம்:

“பசுக்களும் மாடுகளும் கன்றுகளும் கொல்லப்படுவதும், பலியிடப்படுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்ட குற்றம். மீறுபவர்கள் கைகள் துண்டிக்கப்படும்”

• பத்மஸ்ரீ முஜாபர் ஹுசைன், 13 தேசிய விருதுகள் பெற்ற இஸ்லாமிய எழுத்தாளர்,

“புனித குரானின் எந்த ஒரு சுராவிலும் (அத்தியாயத்திலும்) பசுக்களையோ, காளைகளையோ கொல்ல அனுமதிக்கவில்லை”

உலகில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட முதல் பசுப் பாதுகாப்பு மாநாடு இந்தியாவில்தான் 2014 ஆண்டு நடந்தது. அம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட செய்திகளில் சில,

“..புனித குரானில் முதல் அத்யாயம் “சுரா பக்ரா” பசுக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை நினைவூட்டினர். மேலும் இறைதூதர், நோய்கள ஏற்ப்படுத்தும் என்பதால் பசுமாமிசம் உண்பதை தடை செய்ததையும் அதே நேரம் பசுவின் பால் நெய் போன்றவை ஆரோக்கிய நற்குணங்கள் நிரம்பியவை எனவே அவற்றை அதிகளவில் பயன்படுத்தவும் உத்தரவிட்டதை குறிப்பிடப்பட்டது. கடந்த 1432 ஆண்டுகளாக புனித மெக்காவில் பசுக்கள் பலியிடப்படவே இல்லை. எனவே பசுக்கொலை பிரச்னை அரசியல் பிரச்னை தான் எனவும், மனித சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் கண்ணோட்டத்தில் தான் அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பாரதத்தின் முதல் இஸ்லாமிய பள்ளியான “தாருல் உலூம் தேவ்பந்” பல்வேறு காலகட்டங்களில் பசுக்கொலைக்கு எதிராக பத்வாக்கள் வெளியிட்டுள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்..”

No comments:

Post a Comment