Sunday, 30 June 2013

பசுவதைக்கூட அக்கிரமம்


இஸ்லாமும் பசுக்கொலையும் - முகமது நபி


நாட்டு பசுவும் ஆன்மீகமும்

ஆன்மிகம்

நாம் கோவிலில் இறைவனுக்கு பயன்படுத்தும் பால், தயிர், நெய் விளக்கு போன்றவற்றிற்கு நாட்டு பசுவின் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். சீமை மாட்டு பொருட்களை பயன்படுத்துவது மிகப்பெரிய பாவமாகும். அதேபோல கும்பாபிசேகம், கோபூஜை, கிரகபிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நாட்டு பசுவையே பயன்படுத்த வேண்டும். செமை பன்றிகளை வணங்குவது அர்த்தமற்றது மாற்றமின்றி பாவமும் கூட.

நாட்டு பசுவின் உடலில் 33 கோடி தேவர்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளனர்.

1.       பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
2. கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
3.       சிரம் - சிவபெருமான்
4.       நெற்றி நடுவில் - சிவசக்தி
5.       மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
6.       மூக்கினுள் - வித்தியாதரர்
7.       இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
8.       இரு கண்கள் - சந்திரர், சூரியர்
9.       பற்கள் - வாயு தேவர்
10.   ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
11.   ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
12.   மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
13.   உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
14.   கழுத்தில் - இந்திரன்
15.   முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
16.   மார்பில் - சாத்திய தேவர்கள்
17.   நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
18.   முழந்தாள்களில் - மருத்துவர்
19.   குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
20.   குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
21.   குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
22.   முதுகில் - உருத்திரர்
23.   சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
24.   அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
25.   யோனியில் - ஏழு மாதர்கள்
26.   குதத்தில் - இலக்குமி தேவி
27.   வாயில் - சர்ப்பரசர்கள்
28.   வாலின் முடியில் - ஆத்திகன்
29.   மூத்திரத்தில் - ஆகாய கங்கை
30.   சாணத்தில் - யமுனை நதி
31.   ரோமங்களில் - மகாமுனிவர்கள்
32.   வயிற்றில் - பூமாதேவி
33.   மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
34.   சடாத்களியில் - காருக பத்தியம்
35.   இதயத்தில் - ஆசுவனீயம்
36.   முகத்தில் - தட்சிணாக்கினி
37.   எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
38.   எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

காமதேனு அனைத்தையும் தரவல்ல-படைக்கவல்ல தெய்வமாகும். பல தலைமுறைகளாக தீராத கொடும பாவங்களும்கூட கோசேவை, கோதானம் போன்றவற்றால் நிச்சயம் தீரும் என்பது வேத சாஸ்திரங்களில் உள்ள வாக்கு.

நம் நாட்டை பொருத்தவரை வரலாறு ஆன்மிகம் பசு மூன்றும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாததாகும். பசு ஒரு நாட்டின் தலையாய செல்வமாகும். பெண்ணும் மாடும் ஒரு நாட்டில் இருந்து வேறு நாட்டிற்கு போக அனுமதியில்லை. படையெடுத்து வந்தால் செல்வங்களோடு பசுக்களைத்தான் முதலில் ஒட்டி செல்வர். இதையே நிறை கவர்தல்-நிறை மீட்டல் என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது.

கோவில்கள்-கோ+இல், பசு இருக்கும் இடம். ‘ஆலயம் - பசு தன்னை மறந்து லயித்து நிற்கும் இடம். எனவே கோவில் என்பது எங்கு இருக்க வேண்டும் என்று இறைசக்தியை கண்டுணர்ந்து உணர்த்தும் ஆற்றல நாட்டு பசுவுக்கே உண்டு. கோவில் தூபஸ்தம்பங்களில் பசு லிங்கத்திற்கு பால் சுரக்கும் சிற்பத்தின் உள் அர்த்தம் இதுவே.

ஸ்ரீ கிருஷ்ணர் – ராதாதேவியும் கிருஷ்ணா பரமாத்மாவும் கோலோகத்தில் இருந்து தவறாது கோபூஜை செய்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் கோபூஜையின் பலனாக கோகுலம் சுபிட்சமடைந்தது.

பழனி முருகன் – ஞானப்பழத்தின் பொருட்டு பெற்றோரிடம் கோபித்து வந்த முருகன் பழனியில் பசுபராமரிப்பில் தான் ஈடுபட்டார். அதுவே திரு‘ஆவினன்குடி. 

பஞ்சாமிர்தம் என்பது இன்று கடைகளில் விற்பது போல வாழைப்பழம் உள்ளிட்டவை கொண்டு செய்வதல்ல. பால், தயிர், நெய், பனங்கல்கண்டு, தேன் முதலான ஐந்து பொருட்கள் சமமான அளவு கொண்டு செய்யப்படுவதே. அளவில்லா மருத்துவ பலன் கொண்டது.

சண்டிகேஸ்வரர் – சிவாலயங்களில் இருக்கும் சண்டிகேஸ்வரர் கோசேவையுடன் சிவபூஜை செய்து வந்ததால் சிவபெருமானின் முதல் பக்தனாக இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்..

திலீப ராஜா – ஸ்ரீராமரின் முன்னோரான திலீப ராஜா, காமதேனுவை வணங்காது சென்ற பாவத்தால் புத்திர பேறு இல்லாமல் போனது. அதனால் குலகுருவின் ஆலோசனை படி காமதேனுவின் மகளான நந்தினி பசுவின் பராமரிப்பில் ஈடுபட்டார். அதனை சிங்கத்திடம் இருந்து காக்கும் பொருட்டு உயிரை விட துணிந்தமையால் நந்தினி பசு ஆசிர்வதித்தது. அதனால் வம்சம் தழைக்க சிறந்த புத்திரனை பெற்றார்.

குப்பண்ண பரதேசியார் – திருச்செங்கோடு மலையில் வாழ்ந்தவர். இறைப்பணியோடு கோசேவையும் செய்து வந்ததால் இறைசக்தி சித்திக்க பெற்றார். இன்றும் இவர் மடம் மலையில் உண்டு.


விவசாயத்தில் நாட்டு பசு

விவசாயம்

விவசாயதுக்கு தேவையான உரத்தை சிறுநீர்-சாணம் மூலமாக தரும். விலைமதிக்கமுடியாத நுண்ணுயிர்களை மண்ணுக்கு தந்து அதன் உயிராற்றலை மேம்படுத்தும். ஒரு நாட்டு பசுவை கொண்டு 35 ஏக்கர நிலத்தை பண்படுத்த முடியும்.

காற்றிலேயே 68% தழைசத்து (Nitrogen) இருக்கையில் வெறும் 46% தழைச்சத்து உள்ள யூரியா ஏன் போட வேண்டும்..? காற்றில் உள்ள தழைசத்தை கிரகித்து கொள்ளும் சக்தியை மண் இலந்ததே காரணம். அதற்க்கு தேவை நுண்ணுயிர்கள். மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் நடந்துவிட்டால் யூரியாவின் தேவை மிக குறைவு. இதே போலத்தான் எல்லா சத்துக்களும். அந்த நுண்ணுயிர்களை இயற்கையாகவே நாட்டு பசுக்கள் தனது ஜீரண பாதையில் கொண்டுள்ளதால்தான் அதன் சாணம மிக சிறந்த உரமாகிறது. அதை முறையாக பஞ்சகவ்யமாக்கி மண்ணுக்கு சேர்ப்பதன் மூலம் மண்ணின் உயிர்த்தன்மையை மீட்க முடியும்.

இதனால் உரச்செலவை குறைப்பதுடன், மண்ணின் வளத்தையும் விஷமற்ற உணவுகளையும் விளைவிக்க முடியும். பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் உள்ளிட்ட ஏகப்பட்ட ஊட்டசத்து மருந்துகளும். மண்ணில் மண்புழு வாழ்வதற்கான சூழலை மேம்படுத்துகிறது. மண்ணின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. பூச்சி விரட்டி மருந்துகளும் பயிரின் பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்த உதவுகின்றது. பஞ்ச கவ்யம் என்பது நாட்டு பசுவின் ஐந்து பொருட்களான பால், தயிர்,  நெய், சாணம, சிறுநீர் இவற்றை கொண்டு செய்யப்படுவது. சிலர் சீமை மாட்டு பொருட்களை  பயன்படுத்துவது மண்ணின் தன்மையையும் குணத்தையும் காலப்போக்கில் மாற்றிவிடும். நாட்டு பசுவின் பஞ்சகவ்யம் மூலம் கிடைக்கும் பலனில் பத்து சதவீதம் கூட கிடைக்காது.

நாட்டு பசுக்கள் இல்லாமல் சீரோ பட்ஜெட் பார்மிங், இயற்கை வேளாண்மை, கலப்பு பண்ணையம் என எதுவும் ஏட்டு சுரைக்காயாகத்தான் இருக்கும்.


நாட்டு பசுவும் பொருளாதாரமும்

பொருளாதாரம்

சீமை மாடுகள் மூன்று மடங்கு தீனி தின்றுவிட்டு நாட்டு பசுவை விட வெறும் ஒன்றரை மடங்கு பால் தருகிறது. (அந்த பாலின் மூலமாக பின்னாளில் பல வியாதிகள் வந்து உயிரை எடுக்கும் என்பது வேறு விஷயம்) மூன்று நான்கு ஈத்துகளில் கன்று ஈனும் தன்மை நின்று போகும் (பெரும்பாலான வகைகளில்). பராமரிப்பு, வேலை, தீனி அதிகம் தேவை. நோய் சீக்கிரம் தாக்கும். காளை கன்று ஈன்றால் வெட்டுக்கு தவிர வேறு எதற்கும் உதவாது. பஞ்ச காலங்களை தாங்காது. ஒரு முறை இளைத்தால் மீண்டும் தேறாது. இதன் சாணமும் சிறுநீரும்-நாட்டு பசுவின் நன்மையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை. ஆக, அதிக பால் சுரப்பால் தற்காலிகமாக கையில் பணம் புரள்வது போன்ற மாய தோற்றத்தை தவிர வேறு பலன் இல்லை.

நாட்டு பசுக்களின் நன்மைகளை இரு வகைகளில் பிரிக்கலாம். ஒன்று வருமான பெருக்கம் மற்றொன்று செலவு குறைப்பு.

செலவு குறைப்பு:
தீவன செலவு மிக குறைவு. பராமரிப்பு செலவு மிக குறைவு. நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகையால் மருத்துவ செலவு கிடையாது. விவசாய உரச்செலவு குறைகிறது (விரிவான விளக்கங்கள் விவசாயம் என்ற தலைப்பில்). பல நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலை தருவதால் மனிதர்களுக்கும் மருத்துவ செலவை மறைமுகமாக குறைக்கிறது. நாட்டு பசுக்கள் இருந்தால் டிராக்டர், டீசல், ஹார்லிக்ஸ்-பூஸ்ட் உள்ளிட்ட செயற்கை பானங்கள், யூரியா உட்பட பல உரங்கள், மாட்டு தீவனங்கள், நோய்க்கான மருத்துவ செலவுகள், மாடு பராமரிப்பு செலவுகளும் என ஏகப்பட்ட செலவுகள் மற்றும் நேரமும்  மிச்சமாகும். 

வருமான பெருக்கம்:
நாட்டு பசும்பாலை லிட்டர் ரூ.40 கொடுத்து வாங்கவும் மாநகரங்களில் மக்கள் தயாராக உள்ளனர். நாட்டு பசுவின் ஒரு வருடத்து காளை பஞ்ச காலத்திலும் ரூ.20,000 கு போகும். நாட்டு பசு பத்து ஈத்து குறையாமல் கொடுக்கும். நாட்டு பசுவின் சாணத்தில் இருந்து செய்யப்படும் விபூதி கிலோ ரூ.150 கு விற்கப்படுகிறது (3 கிலோ சாணம்=1 கிலோ விபூதி). சிறுநீர் கொண்டு செய்யப்படும் அர்க் லிட்டர் ரூ.500! (20 லிட் சிறுநீர்=13 லிட் அர்க்). பஞ்சகவ்யத்தின் மூலம் 300 கும் மேற்பட்ட மருந்துகள் பல்வேறு நோய்களுக்கு செய்யபடுகின்றன.

ஒரு நாட்டு பசுவின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1,000 சம்பாதிக்க முடியும் என சேலம் சுரபி கோசாலா நிறுவனர் சுவாமி ஆத்மானந்தா சொல்கிறார். அதற்க்காக இலவச பயிற்சியும் தருகிறார்.


தொடர்புக்கு: சுரபி பசு பாதுகாப்பு இல்லம், ஸ்ரீகுருதேவ் குருகுலம், ஸ்ரீநகரம், தெற்குஅம்மாப்பேட்டை, சேலம்- 636 014. அலைபேசி:94432-29061.

நாட்டு பசுக்கள் ஏன் முக்கியம்?

நாட்டு பசுக்கள் ஏன் முக்கியம்?

நாட்டு பசுக்களை பேணுவதற்கு நம் வரலாறு, ஆன்மிகம் முதல் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தர்க்க ரீதியான கோணத்தில் இரண்டு மிக முக்கிய விஷயங்களை முன் வைக்கலாம்.

உணவு: சாத்வீகமான உணவு. ஒழுக்கமும், அறிவும் கொடுத்து சமூகத்தை நிலையாக வைக்கக்கூடிய குணத்தை கொடுக்கும் உணவு. நோய் வராமலும் வந்த நோயை குணப்படுத்த பல நொறு மருந்துகளுக்கு மூல பொருளாகவும் நாட்டு பசுவின் பால் முதல் சிறுநீர் வரை அனைத்தும் பயன்படுகிறது.

நுண்ணுயிர்கள்: செடிகொடிகள் வரை மனிதர்கள் வரை ஒரு நாட்டின் அனைத்து உயிர்களிலும் நுண்ணுயிர்களே உயிரியல் செயல்பாட்டை நடத்துகின்றன. அந்த நுண்ணுயிர்களின் உற்பத்தி மூலம் நாட்டு பசுக்களே.
நாட்டு பசுக்கள் இல்லாமல் சனாதன – தன்னிறைவு பெற்ற வாழ்க்கை சாத்தியமில்லை. உழவுக்கு மழை போல, பசு இல்லாவிடினும் மண் தன் உயிரை இழக்கும். விவசாயம், உணவு, மருந்து, சமூகம் என அனைத்திலும் பசுவின் தாக்கம் அளப்பரியது. எனவேதான், எந்த மிருகத்துக்கும் இல்லாத அளவு பசுவை கோமாதா என வணங்கி போற்றி  பேணுகிறோம்!


முக்கிய குறிப்பு: பால் என்றால் பால் மூலம் பெறப்படும் பொருட்கள். பாலை நேரடியாக ஜீரணிக்கும் சக்தி குழந்தைகளுக்கு 3 வயது வரை மட்டுமே உண்டு. பெரியவர்களுக்கு மோர் தான் சிறந்த உணவு. பாலின் கொழுப்பு பாலாகவோ, தயிராகவோ உடலில் சேர்வதை விட பஞ்சகர்ண சுத்தி என்று சொல்லப்படும் மோர் கடைந்து வெண்ணெய் எடுத்து உருக்கி செய்யப்படும் நெய்யின் மூலம் சேர்வதே சிறந்தது. இதனால் தான் பாளை நேரடியாக அரைத்து எடுக்கப்படும் நெய் உடலுக்கு அவ்வளவு நல்லதில்லை எனப்படுகிறது.

நாட்டு மாடு-சீமை மாடு அடிப்படை வித்தியாசங்கள்

நாட்டு மாடு-சீமை மாடு அடிப்படை வித்தியாசங்கள்

நாட்டு மாடுகள் பற்றி புரிந்துகொள்ள அடிப்படையில் நாடு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

நாடு என்றால் என்ன..?

இன்று உள்ளது போல படைபலம் கொண்டு தன்னால் இயன்ற அளவு பிடித்து கொள்வது நாடு அல்ல. நாடு என்பது ஒவ்வொரு பகுதியின் நீர் வடிகாலை பொறுத்து அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மை பொறுத்து அமையும், ‘தன்னிறைவு பெற்ற  சீதோஷ்ண-சமூக-கலாசார-பொருளாதார மண்டலங்கள். உதாரணம்: கொங்கு நாடு மலைகள் சூழ்ந்து, அந்த மலைகளில் இருந்து வடியும் நீர் காவிரி உள்ளிட்ட நதிகளின் நீர்பிடிப்பு பகுதியாக இருக்கும். பாண்டிய நாட்டுக்கு வைகை போல சீதோஷ்ண மண்டலங்களே நாடுகள். நாடுகள் பிரிக்கபட்டாலும் இந்த தன்னிறைவு கொள்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதையே சனாதன கொள்கை (Sustainability) என்று சொல்வார்கள். அதாவது அந்நாட்டின் பெரும்பான்மை தேவைகளுக்கு அந்நாட்டை விட்டு வெளியே செல்ல தேவை இருக்காது. நாடுகள் ஏன்? நம் கிராமங்களே சனாதன கொள்கையின் அடிப்படையில் உருவானதே. வீட்டில் ‘செலவு டப்பா என்று சொல்கிறோமே, ஏன்..? அது ஒன்றுதான் செலவாக இருந்தது. அதாவது வெளியில் சென்று வாங்க வேண்டியது. மீதி பொருட்கள் எல்லாம் உள்ளூரிலேயே கிடைக்கும் படி நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.
அப்படியான நாடுகளில், அந்த நாடுகளுக்கேற்ப மண்ணின் நுண்ணுயிர்கள் முதல் செடிகொடிகள், காய் கறிகள்,  தானியங்கள், விலங்குகள், மனிதர்கள் அவர்தம் குணங்கள் செயல்பாடுகள் என அனைத்தும் மாறுபடும். இதையே நாட்டு ரகங்கள் என்கிறோம். இவை அந்த மண்ணின் தன்மையும், நீரையும், சீதோஷ்ண நிலையையும் அனுசரித்து வருவதால் அம்மண்ணிற்கேற்ற வகைகள்-அதை தாங்கி வாழ கூடியதும் ஆகும்.


Bos Taurus-Bos Indicus

சீமை மாடுகளை ‘உயர் ரக என்னும் ஆடை மொழி கொடுத்து நம் நாட்டிற்குள் “பல்வேறு சக்திகள் திட்டமிட்டு நுழைத்து விட்டன. ஆனால் அவை முதலில் நம் மாடுகளே அல்ல. தற்கால அறிவியல்  உலகம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் கொடுக்கும் உயிரியல் பேரை (Zoological Name) கொண்டே அறியலாம்.


நாட்டு பசுக்கள் – Bos Indicus
சீமை மாடுகள் (பன்றிகள்) - Bos Taurusஎனவே, சீமை மாடுகள் என்பன நம் மாட்டின் வகை என்பதே தவறு. 

Thursday, 27 June 2013

சீமை மாடுகள் என்னும் நோய்மூலம்

சீமை மாடுகள் என்னும் நோய்மூலம்
சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை மாட்டு பாலும் நாட்டு பசும பாலும் பார்க்க ஒன்று போல இருந்தாலும் இரண்டிலும் பெரும் வித்தியாசங்கள் உண்டு. பாலின் முக்கிய அங்கமான பால் புரதமானது (Milk Protein) நாட்டு பசுவில்  A2 Beta-Casein ஆகவும் சீமை மாடுகளில் (பன்றிகளில்) A1 Beta-Casein ஆகவும் மாறுபடுகிறது. A1 Beta-Casein புரதம் மிகவும் அபாயகமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்போது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். சீமை மாடுளின் மரபணுவே இப்படி இருக்க, அதற்க்கு போடப்படும் ஹார்மோன் ஊசிகள் மற்றும் பால் கரவைக்கு வைக்கப்படும் தீவனங்களில் கலக்கப்படும் தவறான வஸ்துக்கள் போன்றவற்றால் சீமை மாட்டு பால் அருந்த தகுதியற்றதாகிறது.

சீமை மாட்டு பால் ஸ்லோ பாய்சன் (Slow Poison) போல. அதன் பாதிப்புக்கள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டுக்கு வந்த புதிதில் சரிசமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டு பசுக்களின் தாக்கம் சரிவிகிதமாக இருந்தது. அதனால் அன்றைய காலகட்டங்களில் தெரியவில்லை. ஆனால் தற்போது சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியாதி பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.சர்க்கரை நோய்
வெளிநாடுகளில் A2 பால் என்றே தனித்துவமாக பால் வியாபாரம் நடக்கிறது. இந்த A1 Beta-Casein புரதமானது நம் உடலின் இன்சுலின் சுரப்பியின் புரதத்தை ஒத்திருப்பதால் ஹார்மோன் சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ந்த தடுமாற்றம் சர்க்கரை நோயை வரவழைக்கிறது. நாட்டு பசுவின் பால் இதுபோன்ற எந்த தீங்கையும் உருவாக்குவதில்லை.
பிரசர்
சீமை மாடுகளுக்கு உடலில் வியர்வை சுரப்பி கிடையாது. அதன் கெட்ட நீர் மற்றும் உப்புக்கள் மூத்திரம் மற்றும் பாலின் வழியாக மட்டுமே வெளியேறியாக வேண்டும். சீமை மாடுளினால், அது உண்ணும முரட்டு தீனிக்கும்-மாட்டு தீவனத்தில் அதிக பால் கறவைக்கு சேர்க்கபட்டிருக்கும் வஸ்துக்களுக்கும்அத்தனை உப்பையும் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிட இயலாது. உடலின் உப்பும், கெட்ட நீர்களும் பாலின் வழியாக வெளியேறும். அதனால் தான் சீமை மாட்டு பால் கொஞ்சம் உப்புச்சுவை கூடுதலாக இருக்கும். நாளடைவில் இந்த தீய உப்பின் தேக்கத்தால் உடலில் ரத்தகொதிப்பு நோய் ஏற்ப்பட்டு விடுகிறது. நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற நாட்டு பசுவுக்கு உடல் எல்லாம் வியர்வை சுரப்பி உண்டு. அதுவுமன்றி அவை குறைந்த அளவே தீவனம் எடுக்கும். அதனால் அதன் பால் எவ்வித தீங்குகளையும் எர்ப்படுத்துவதில்லை.
ஆட்டிசம்பல நூறு ஆண்டுகளாக நாம் அதிகம் கேட்டிராத நோய் ஆட்டிசம் (சதை பிறழ்வு). இது குழந்தைகளின் உடலையும் மூளையையும் ஒரு சேர தாக்கும் கொடூர நோய். தற்போது மாநகரங்களில் இந்நோய்க்கென தனியே மருத்துவமனை கட்டும் அளவு பெருகியதன் காரணம் என்ன..? சீமை மாட்டு A1 பால் இந்நோய்க்கான மிக முக்கிய காரணி. சீமை மாடுகள் நம் நாட்டுக்குள் வந்த பின்னர்தான் இந்நோயின் வளர்ச்சி அதிகமாகி வருகிறது. நாட்டு பசுவின் பால் நல்ல புத்தியையும், சூட்டிப்பையும், நரம்பு மண்டலத்துக்கு பலத்தையும் கொடுக்க வல்லது.
ஹார்மோன் சீர்கேடு
வெளிநாட்டு சீதோஷ்ண நிலைக்குரிய சீமை மாட்டு பால் நம் நாட்டில் பயன்படுத்தும்போது உடலின் ஹார்மோன் சமநிலையை தடுமாற செய்கிறது. இதன் தாக்கம் பிட்டியுட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புக்கள், புத்தி, மனோ நிலை அனைத்தையும் தடுமாற செய்கிறது. நாட்டு பசுக்கள் நம் மண்ணுக்கேற்ற தன்மையோடு இயற்கையோடு இயைந்த உடல்வாகு உடையதால் தடுமாறிய ஹோர்மன் சமநிலையைகூட சரி செய்ய கூடியது.
பரம்பரை வியாதிகள்-மரபணு கோளாறுகள்:\
சீமை மாடுகளின் பால் மூலக்கூறுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுவதால் மரபணுவாகிய குரோமோசோம் சங்கிலியில் பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. எனவே இதன் பாதிப்பு நமக்கு தெரியாவிட்டாலும் நம் பிள்ளைகளுக்கோ-பேரன் பேத்திகளுக்கோ நிச்சயம் தெரியும். அதுவும் இது மரபணு மூலமாக பரம்பரை வியாதியாக மாறிவிடும் அபாயம் வெகு அதிகமாகவே உள்ளது.
பாலியல் கோளாறுகள்
சீமை மாடுகளின் உடலில் ஆண்-பெண் செக்ஸ் ஹார்மோன் சமநிலையில் இல்லை. காளைகள் மந்தமானதாகவும் கிடாரிகள்(பெண்) ஹார்மோன் மிகுதியாக உடையதாகவும் உள்ளது. இதை பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு பல வகைகளில் வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய்-கர்ப்பப்பை-பால் சுரப்பு கோளாறுகள் போன்றவை சில.

நாட்டு பசுக்களில் காளை-கிடாரி இரண்டிலுமே செக்ஸ் ஹார்மோன் சமநிலையில் உள்ளது. ஒழுக்கமாக வாழ நாட்டு பசுவின் பாலே சிறந்தது.
மந்த புத்தி
சீமை மாட்டின் பால் தாமச உணவாகும். சோம்பேறித்தனம், மந்தம், அர்த்தமற்ற திடீர் கோபங்கள், எதையும் சடாரென புரிந்து கொள்ளா தன்மை போன்றவற்றை ஏற்ப்படுத்தும். அதன் தன்மையை மீறிய கொழுப்பும், தவறான புரதமும் இந்த பாதிப்பை உண்டாக்குகின்றன. எருமை பாலுக்கும் சீமை மாட்டு பாலுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.


மாறாக,நாட்டு மாடுகளின் பால் சாத்வீகமான உணவாகும். நிதானம், கவனம், சொரணையுள்ள கற்பூர புத்தி, செயல் வீரம் போன்றவற்றை ஏற்ப்படுத்தும்.

# மேலே சொல்லப்பட்டவையன்றி குடல்வால்,மலச்சிக்கல், பார்வை என இன்னும் எண்ணற்ற நோய்களுக்கும் காரணியாக சீமை மாடுகளின் பால் உள்ளது. 

குறிப்பு: பால் என்பது பால் மூலம் பெறப்படும் தயிர் மோர் நெய் உள்ளிட்டவைகளை குறிக்கும். பாளை நேரடியாக ஜீரணிக்க கூடிய சக்தி குழந்தைகளுக்குதான் (மூன்று வயது வரை) உண்டு. மற்றவர்களுக்கு மோரும் நெய்யுமே சிறந்த உணவு. மோரும் நெய்யும் பஞ்சகர்ண சுத்தியின் வாயிலாக பெறப்படுவது.