Wednesday 19 June 2013

மாடுகள் கடத்தல்-சட்டம் சொல்வது என்ன..??



மாடுகள் கடத்தல்-சட்டம் சொல்வது என்ன..??


PCA (Prevention of Cruelty on Animals Act):

• போதுமான இடம் இருக்க வேண்டும்: லாரியின் கணக்கில் வண்டிக்கு 6 பசுக்களே ஏற்ற வேண்டும்.
• லாரியில் உள்ள பசுக்களுக்கு போதுமான நீர்-தீவனம் இருக்க வேண்டும் 
• லாரிகளின் பக்கவாடுகளில் கம்பிகள் குத்தாதவாறு குஷன் வசதி இருக்க வேண்டும் 
• லாரிகளுக்கு மேல்கூரை இருக்க வேண்டும். வெயிலில் பசுக்கள் காயகூடாது.
• பசுக்கள் வண்டிகளில் கொண்டுசெல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளன என கால்நடை மருத்துவர் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
• காளை மாடுகளும்-கன்றுகளும் ஒரே வண்டியில் ஏற்ற கூடாது. தனி தனியே தான் கொண்டு செல்ல வேண்டும்.
• சினை மாடுகள் (கர்ப்பிணி) வண்டியில் ஏற்றவே கூடாது. வண்டியில் உள்ள மாடுகளில் எதுவும் சினை இல்லை என்று டாக்டர் சான்றிதழ் தர வேண்டும்.
• கன்றுகள் 10 வயதுவரை ஏற்றவே கூடாது. கறவை பசுக்களையும் ஏற்றவே கூடாது. கறவை நின்று போன மாடுகளை மட்டுமே கொண்டு செல்லலாம். அதற்கும் டாக்டர் சான்றிதழ் வேண்டும்.
• பசுக்களின் கண்களில் மிளகாய், காதுகளில் சுடுநீர் போன்ற கொடுமைகள் நடக்கிறது. அதற்க்கு கடுமையான தண்டனைகள் உண்டு.

Section 97 (Tansportation of Animals): 

• லைசன்ஸ் பறிமுதல், லாரிகள் பறிமுதல், பைன், சிறை தண்டனை உட்பட பல தண்டனைகளும் இவ்விதிகள் பின்பற்றாதவர்களுக்கு வழங்க படும்.

லாரிகளை பிடித்தவுடன் மாடுகளை காப்பகதிற்கோ, ஆர்வலர்களோ கொண்டு சென்று பராமரிக்கலாம். நீதிபதியே காண வேண்டும் என்றாலும் அவர்தான் வந்து பார்த்து கொள்ள வேண்டும். மேலே சொன்ன விதிகளை எந்த லாரிகாரனும் பின்பற்றுவதில்லை. அதனால் மாடுகளை ஒட்டிசென்றாலும், லாரிகளை கொளுத்தினாலும், டிரைவர்களை தாக்கினாலும் கூட அவர்கள் லாரி உரிமையாளர்கள் ஒன்றும் செய்ய முடிவதில்லை.





No comments:

Post a Comment