Sunday 30 June 2013

விவசாயத்தில் நாட்டு பசு

விவசாயம்

விவசாயதுக்கு தேவையான உரத்தை சிறுநீர்-சாணம் மூலமாக தரும். விலைமதிக்கமுடியாத நுண்ணுயிர்களை மண்ணுக்கு தந்து அதன் உயிராற்றலை மேம்படுத்தும். ஒரு நாட்டு பசுவை கொண்டு 35 ஏக்கர நிலத்தை பண்படுத்த முடியும்.

காற்றிலேயே 68% தழைசத்து (Nitrogen) இருக்கையில் வெறும் 46% தழைச்சத்து உள்ள யூரியா ஏன் போட வேண்டும்..? காற்றில் உள்ள தழைசத்தை கிரகித்து கொள்ளும் சக்தியை மண் இலந்ததே காரணம். அதற்க்கு தேவை நுண்ணுயிர்கள். மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் நடந்துவிட்டால் யூரியாவின் தேவை மிக குறைவு. இதே போலத்தான் எல்லா சத்துக்களும். அந்த நுண்ணுயிர்களை இயற்கையாகவே நாட்டு பசுக்கள் தனது ஜீரண பாதையில் கொண்டுள்ளதால்தான் அதன் சாணம மிக சிறந்த உரமாகிறது. அதை முறையாக பஞ்சகவ்யமாக்கி மண்ணுக்கு சேர்ப்பதன் மூலம் மண்ணின் உயிர்த்தன்மையை மீட்க முடியும்.

இதனால் உரச்செலவை குறைப்பதுடன், மண்ணின் வளத்தையும் விஷமற்ற உணவுகளையும் விளைவிக்க முடியும். பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் உள்ளிட்ட ஏகப்பட்ட ஊட்டசத்து மருந்துகளும். மண்ணில் மண்புழு வாழ்வதற்கான சூழலை மேம்படுத்துகிறது. மண்ணின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. பூச்சி விரட்டி மருந்துகளும் பயிரின் பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்த உதவுகின்றது. பஞ்ச கவ்யம் என்பது நாட்டு பசுவின் ஐந்து பொருட்களான பால், தயிர்,  நெய், சாணம, சிறுநீர் இவற்றை கொண்டு செய்யப்படுவது. சிலர் சீமை மாட்டு பொருட்களை  பயன்படுத்துவது மண்ணின் தன்மையையும் குணத்தையும் காலப்போக்கில் மாற்றிவிடும். நாட்டு பசுவின் பஞ்சகவ்யம் மூலம் கிடைக்கும் பலனில் பத்து சதவீதம் கூட கிடைக்காது.

நாட்டு பசுக்கள் இல்லாமல் சீரோ பட்ஜெட் பார்மிங், இயற்கை வேளாண்மை, கலப்பு பண்ணையம் என எதுவும் ஏட்டு சுரைக்காயாகத்தான் இருக்கும்.


No comments:

Post a Comment