Wednesday 3 September 2014

'பசுவுக்காகவே எனினும்' தண்ணீர் கேட்டு இரப்பதாக இருந்தால் அது அந்த நாக்குக்கு கேவலமே என்று பொருள் கூறுகிறார்கள். மாறாக, பசுவுக்கு நீர் வேண்டும் என்று 'இரந்தாலுமே' அது அந்த நாவிற்கு இழிவை தராது என்று பொருள்படுவதாக தமிழறிஞர் ஒருவர் சொன்னார். எனக்கும் இரண்டாவது பொருளே சரியெனப்படுகிறது.

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்
(அதிகாரம்:இரவச்சம்; குறள்:1066)

எது எப்படியானாலும் பசுவைப் பேணுவதை மிகப்பெரும் தர்மம் என்ற அடிப்படையில் தான் வள்ளுவரும் சொல்லியுள்ளார். பசுவை தொழும் இடம் என்னும் பொருளில் வந்ததுதான் தொழுவம் என்னும் பேர். கோயில் என்பது கோ+இல், ஆலயம் என்பது ஆ+லயம் என ஆன்மீகத்தின் அடிப்படைகள் அனைத்தும் பசுவை சுற்றியே உள்ளன. (பசு என்றால் இந்திய நாட்டுப்பசு மட்டுமே; வேறு எதுவும் பசுக்கள் இல்லை. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

படம்: Tamil Wisdom, EJ Robinson, 1873



நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை


August 19, 2014

மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது மத்திய அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதையும், தற்போது பசுக்கொலைகள் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்புக்கள் மத்தியில் வலுத்து வரும் பா.ஜ.க. வெறுப்புணர்வை தணிக்கும் முயற்சியாகவுமே தெரிகிறது. எனவே, உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதை மறு ஆய்வு செய்யவேண்டியுள்ளது.
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107580
(1) முதலில் பசுக்களுக்கு ஒதுக்கியிருக்கும் இந்த வருடத்திற்கான தொகையான ரூ.150 கோடியோ அல்லது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள ரூ.500 கோடியோ மிக மிக சொற்பமானது என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும். இது யானை பசிக்கு கடுகுச்சோறு போன்றதாகும். இந்த தொகைகள், அன்றாடம் ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளும் பசுக்கொலைக்கூடங்களுக்கான முதலீடு, நவீனமயமாக்க செலவிடப்படும் தொகைகளைவிட சொற்பமானதாகும். மேலும், ‘பிங்க் புரட்சி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு போக்குவரத்து, குளிர் மையம், பேக்கிங், விளம்பரம் என பல்வேறு இனங்களில் 70% வரை மானியம், விற்பனை வரிச்சலுகை, வருமான வரிச்சலுகை என்று கணக்கிட்டு பார்த்தால் எங்கோ போய் நிற்கும். அதனோடு இந்த நிதி ஒதுக்கீட்டை ஒப்பிட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இந்த பிங்க் புரட்சி மூலம் வருஷம் சுமார் 26,000 கோடி வருமானம் கிடைக்கிறதாம். ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை. எருமை மாமிசம் என்ற பேரில் பசு மாமிசம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அதிகாரிகளே தெரிவிக்கிறார்கள். இவ்வளவு ஏற்றுமதியும் வெறும் ஆண் எருமை மற்றும் உதவா மாடுகள் மூலம் மட்டுமே நடக்கிறது என்பதை குழந்தை கூட நம்பாது என்பதும் அறிந்த விஷயமே. அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் தெருவில் சுற்றும் மாடுகளை பிடிக்கவரும் அரசு ஊழியர்களை தாக்குவோரை தடுக்க கேமரா பொருத்திய வண்டிகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கடத்தப்படும் பசுக்களை தடுக்க சுங்கச்சாவடிகளில் முறையான கண்காணிப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் அதவும் கூட இயலாத சூழலே தற்போது உள்ளது. பசுபாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே பசுவதை பெருமளவு குறைந்துவிடும்.
970151_165348566993516_924177262_n
(2) இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக உள்ளன. அதைபற்றிய விளக்கங்களை அரசுத்துறைகள் விவரிக்க வேண்டும். உதாரணமாக “improve the genetic makeup” “upgrade nondescript cattle using elite indigenous breeds” “distribution of disease free high genetic merit bulls” “AI centre “ (Artificial Insemination) போன்றவை. இதே அறிக்கையில் கடைசியில் சொல்லப்பட்டபடி 80% நாட்டுப்பசுவினங்கள் இன்னும் அடையாளம் காணப்படாத-அங்கீகரிக்கப்படாத இனங்களாகவே உள்ளன. அப்படியிருக்க மேற்சொன்ன வாக்கியங்களை படித்தால் இந்த அங்கீகரிக்கப்படாத இனங்கள் உயர்ந்த ரகங்கள் என்று சொல்லப்படும் பசு ரகங்களால் கலப்படம் செய்து அழிக்கபடுமோ என்ற கேள்வி எழுகிறது. மேலும், செயற்கை கருவூட்டல் என்பது இயற்கைக்கு விரோதமானதும் நீண்டகால நோக்கில் கெடுதலையுமே விளைவிக்கும். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 70 HF ரக காளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Untitled
வெள்ளையர்கள் நம் நாட்டு பசுவினங்களை ஆய்வு செய்த பொது பெரும்பாலான பசுவினங்களை ஒரே இனத்தின் கிளைகள் என்று கூறிவிட்டார்கள். அதன்பின் நாமும் அதை பற்றி பெரிய அளவில் கவலைப்படாமல் அதை பெரிய மாற்றமின்றி இன்றளவும் பின்பற்றுகிறோம். இன்னும் வரையறை செய்யப்படாத எண்ணற்ற பசு ரகங்கள், அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த திட்ட அறிவிப்பில் அதற்கான அறிவிப்புகள் இல்லாததோடு, அவ்வாறான வரையறைப்படுத்தாத பசுவினங்கள் கிர், சாஹிவால் போன்ற பசுக்களைக்கொண்டு மேம்படுத்தப்படும் என்று கூறியிருப்பது அவ்வினங்களின் தனித்துவம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
asdf
 (3) மூன்றாவதாக, இந்த அறிக்கையில் கோகுல் கிராம் மற்றும் கோசாலைகள் போன்ற அமைப்ப்புக்கள் குறைந்தது ஆயிரம் பசுக்களோடு செயல்படும் என்று அறிவித்திருப்பது தற்போதைக்கு சரியென பட்டாலும் நீண்ட கால நோக்கில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டியதே. அறிக்கையின் சாராம்சம், பசுக்களை ஒரு வணிகப்பொருளாகவும், பால் மெஷினாகவும் பார்க்கும் மனோபாவத்தை வளர்ப்பதாகவும் உள்ளது. நமது நோக்கம் விவசாயி வீட்டுப்பசு முறை. இதுதான் நமது நாட்டின் பூர்வீக கலாசாரம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பரம்பரை பசுக்கள் இருக்கும். சாதாரண விவசாயி முதல் அரசர்கள் வரை இவை உண்டு. கல்யாணம் செய்யும்போது சீதனமாக வரும் பெண் வீட்டு பசு வர்க்கம் ஆண் வீட்டு பசு வர்க்கத்தோடு கலக்கும். இதனால் அந்த குடும்ப வாரிசுகளைப்போலவே அந்த குடும்பப்பசுவும் அதன் வர்க்கத்தை பெருக்கும். இது ஒரு அற்புதமான அமைப்பு. இப்படி குடும்பப்பசு முறை இருந்ததால்தான் பஞ்ச காலத்தில் கூட விவசாயிகள் மாடுகளை விற்காமல்-கொல்லாமல் இருந்தனர் என்று வெள்ளையர்கள் வியந்து எழுதினர். ஒரு பெண் புதிதாக கல்யாணமாகி வரும்போதும், ஒரு வீட்டுக்கு குடிபோகும்போதும் பால் காய்ச்சுவதே முதல் பணியாகும். அரசர்கள் பட்டாபிஷேகத்தின் போது அவர்கள் வர்க்க பசுவுக்கு மரியாதை செலுத்தி வணங்கப்படும். அது இன்றளவும் தொடர்கிறது.
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
மேலும் நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும் மறைமுகமாக இயற்கை வேளாண்மைக்கு உதவுவதன் மூலம் நோய்கள் தவிர்ப்பு, மருத்துவ செலவினங்கள் தவிர்ப்பு, தேவையற்ற உர இறக்குமதிகள் தவிர்ப்பு, மனிதவளம் சேமிப்பு, சீமை மாடுகளுக்கு செலவாகும் மும்மடங்கு தீவன-நீர் சேமிப்பு, நோய் தாக்கு குறைவு என்று கணக்கிலடங்கா பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நாட்டுப்பசுக்களை வாழ்வின், இயற்கையின் அங்கமாக பார்க்கும் பார்வை அரசுத்துறையினருக்கு வர வேண்டும்.
1146521_10202688760132746_1246986842_n
பாராட்டும் விதமாக முதலில், நாட்டுப்பசுக்களை பற்றிய சிந்தனை வந்திருப்பதே பாராட்டக்கூடிய ஒன்றுதான். இரண்டவாது A2 பால் பற்றி அரசு தரப்பில் வந்துள்ள செய்தி என்பதும், பசுவின் மூலம் பெறக்கூடிய மருத்துவ பொருட்கள் போன்றவற்றை அங்கீகரித்திருப்பதும் பாராட்டலாம். விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விருதுகள், சங்கங்கள் போன்றவையும் வரவேற்க வேண்டிய ஒன்று.
மோடி ஆதரவாளர்கள், ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி இயக்கங்கள் தங்கள் தலைமைக்கு அழுத்தம் தர வேண்டும். சாதுக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி, திக்விஜய்சிங் போன்ற எதிர்கட்சியினர் கூட பசுவதைத் தடையை ஆதரித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது.
நாட்டுப்பசுக்கள் அழிவிலிருந்து நிரந்தரமாக காப்பாற்ற என்னெல்லாம் செய்யலாம்? உதாரணமாக பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானையே எடுத்துக்கொள்வோம். ராஜஸ்தானில், மாநில அரசு ஒட்டகங்களை காக்க அவற்றை மாநில விலங்காக அறிவித்து, அதன் கொலையை முழுமையாக தடை செய்துள்ளது. (ஆயினும் பாரம்பரிய ஒட்டக ரேஸ் தடை செய்யப்படவில்லை என்பதை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்கவும்!). இதே ராஜஸ்தானில் பசுவதை தடைக்கு என தனி அமைச்சகமே உள்ளது. அதேபோல யானைய காக்க மத்திய அரசு யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளது. இஸ்கான் பசுக்களுக்கென தனி பல்கலைக்கழகம் துவங்கப்போவதாக அறிவித்து வேலைகளை துவங்கியுள்ளார்கள். இதை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளில் பஞ்சகவ்ய மருத்துவம் மற்றும் மருந்துகள் பற்றிய பாடங்கள் வைக்கபப்ட வேண்டும். அதுபோல நாட்டுப்பசுவை தேசிய விலங்காக அறிவித்து, நாட்டுப் பசுக்கொலையை முழுவதும் தடை செய்து, நாட்டுப்பசுக்களுக்கென தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், நாட்டுப்பசு மைய பொருளாதார ஊக்குவிப்பு போன்றவற்றை அரசு கையிலெடுக்க வேண்டும்.
524963_351270591630053_449786875_n
நாட்டுப்பசுக்கள் வளர்ப்போர் ஸ்திரமான பொருளாதார தற்சார்பு நிலை எட்ட அடித்தளங்கள் உருவாக்காமல், வெறுமனே பசுவதை தடைச்சட்டம் என்று கொண்டுவந்தால் அது கடைசியில் விவசாயிகளுக்கு கேடாகத்தான் முடியும். அதாவது வெளிநாடுகளைப்போல நாட்டுப்பசுவின் A2 பாலுக்கு அதிக விலை, நாட்டுப்பசுவிலிருந்து பாலல்லாத பிற பொருட்கள் தயாரிப்பு, விவசாயத்தில் உரத்தேவையில் நாட்டுப்பசுக்களின் பங்கு, சந்தை விரிவாக்கம்-உருவாக்கம் போன்றவை, அவை குறித்த விழிபுணர்வு போன்றவற்றை செய்யாவிட்டால் பசுக்களே விவசாயிகளுக்கு பாரமாக போய்விடும். மேற்கூறிய முயற்சிகளை தற்போது அரசு சார்பற்ற தன்னார்வலர்களும் தொண்டு அமைப்புக்களும் செய்து வருகின்றன. ஆனால் தற்போதைய அறிவிப்பு அவ்விதமான அடித்தளங்கள் உருவாக்க உதவுமா என்று சந்தேகம் ஏற்படுத்துகிறது.

http://www.tamilhindu.com/2014/08/நாட்டுப்-பசுக்களுக்காக-ம/

உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்

June 20, 2014

 
Modi-Quote_pink_revolutionசென்ற காங்கிரஸ் ஆட்சியில் பீப் லெதர் தொழிலுக்கு சாதகமாக மாட்டிறைச்சி மையங்கள், பசுவதைக்கூடங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு எழுதப்படாத சட்டங்களாக இந்த தொழில் ஊக்குவிக்கப்பட்டது. சட்டவிரோத பசுக்கடத்தலுக்கு ரயில்களை பயன்படுத்தும் அளவு பகிரங்கமாக நடந்தது. சில ஆண்டுகளிலேயே உலகின் நம்பர் ஒன் பீப் ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு இந்தியா வந்தது. இந்த சாதனைகள்  பாலுக்கு உபயோகமற்ற வயதான மாடுகளையும் எருமைகளையும் மட்டுமே கொன்று செய்யப்பட்டது என்று பொதுமக்களை நம்ப சொன்னார்கள். இதனை பிங்க் புரட்சி என்று நாளேடுகளும், சமூக ஆர்வலர்களும் குறிப்பிட்டு எதிர்த்து வந்தார்கள். அரசியல் கட்சிகளில் பிஜேபி மற்றும் பல ஹிந்து அமைப்புக்களும், இயற்கை நலன் சார்ந்த அமைப்புக்களும் எதிர்த்து குரல் கொடுத்தனர். பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியும் தனது பிரசாரங்களின்போது பிங்க் புரட்சி பற்றி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் தேசத்தின் சொத்தான பசுக்களை அழிவிலிருந்து காப்பது குறித்து அறிவித்திருந்தனர்.
திருசெங்கோட்டு பகுதியில் மோர்ப்பாளையம் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு கறிக்கு வெட்ட பசுக்கள் இங்கிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஊரறிந்த ரகசியம். மத்திய, மாநில அரசுகளால் இந்த சட்டவிரோத கடத்தலைத் தடுக்க இயலவில்லை. வாரம் மூன்று நான்கு லாரிகள் பசுக்களை அடைத்து ஏற்றிச்செல்லும். வளர்க்க விரும்புவோர் வாங்கச்சென்றால் அவர்களுக்கும் நாட்டுப்பசுக்கள் கிடைக்கும். ஆனால் தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன; வெளிநாட்டு அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு-ரேக்ளா  தடைசெய்யப்பட்டு காளைகள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. இவை உணர்த்துவது நாட்டுப்பசுக்களின் மீது வெளிநாட்டு சக்திகள் தொடுத்திருக்கும் திரைமறைவு இன அழிப்புப் போரேயாகும்.
illegal_cow_traffickingபசுக்களைக் கடத்தும் லாரிகளைக் காட்டிக்காட்டி ஓட்டுக்கேட்டவர்கள் இன்று பொதுமக்களை எதிர்கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். கிராமப்பகுதிகளில் இந்த சங்கடம் மிக கடுமையாக உள்ளது என்பதே நிதர்சனம். பதவியேற்று ஒரு மாதம் கடந்தும் இதுவரை ஒரு வார்த்தை கூட பிரதமர் பசுக்கள் குறித்து பேசாமையும், பீப் மற்றும் லெதர் நிறுவனங்களுக்கு கிடைத்த சலுகைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதும் ஜீரணிக்க இயலாத உண்மைகளே. கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நவீன பசுக்கொலைக்கூடங்கள்; இருக்கும் பசுக்கொலைக்கூடங்களை நவீனமாக்குவது போன்ற சதிகளுக்கு எதிராக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. கறுப்பு பணத்தை மீட்க பதவியேற்ற முதல் நாள் கமிஷன் அமைத்த பிரதமரை பாராட்டலாம். கருப்புப்பணம் உருகிவிடப்போவதில்லை. ஆனால் தினம் தினம் மடியும் பசுக்களுக்கு உயிர்கொடுக்க யாரேனும் உள்ளார்களா? இவ்வளவுநாள், இந்த கொடுமைகளுக்கு காரணமென்று காங்கிரசை கைகாட்ட முடிந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு யார் பொறுப்பு? யார் பதில் சொல்வது? அந்த பாவமும் பசுக்களின் ரத்தமும் யாரை கறைபடுத்தும்?
இஸ்லாமிய படையெடுப்புக்களுக்கு முன்னரே ஒரு நாட்டையும் அம்மக்களின் உணர்வுகளையும் தொட்டு பார்க்க முதலில் அந்நாட்டின் பசுக்களை கவர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பசுக்களை மீட்டவர்கள், அப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் தெய்வங்கலாக் போற்றப்பட்டனர். முஸ்லிம் படையெடுப்புக்களை அரசர்கள் தங்கள் நாடுகளை காக்க எதிர்த்தாலும் பொதுமக்களின் கோபம் இஸ்லாமிய படைகள் பசுக்களையும், கோயில்களையும் சீரழிக்க துவங்கிய போதே வெடித்துக்கிளம்பியது. அதனாலயே, பாபர் தனது வாரிசுகளுக்கு இந்தியாவில் நிரந்தர பசுவதை தடை செய்யப்படுவத்தின் அவசியத்தை உணர்த்தியிருந்தார். கிறிஸ்தவ வெள்ளையரின் காலனியாதிக்கத்திற்கு எதிரான முதல் போர் மாட்டுக்கொழுப்பை பயன்படுத்த சொன்னதன் மூலமே ஏற்பட்டது. அதை தொடர்ந்து 1917 பீகார் கலவரம், சாதுக்கள் நடத்திய டெல்லி போராட்டம், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று இன்றுவரை இந்த தேசம் பசுக்களின் பொருட்டு லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவை உணர்த்துவது அன்று முதல் இன்று வரை பசுக்கள் இந்திய மக்களின் உணர்வின் மையம் என்பதும் பசுவதை என்பது சகிப்புத்தன்மையின் எல்லை என்பதுமே.
ban_cow_slaughter_1வெறும் உணர்வுரீதியான எதிர்ப்பு என்பதை தாண்டி, பசுக்களின் ஆரோக்கியம்-சமூக-பொருளாதார ஆளுமை என்பதையும் கணக்கில் கொல்ல வேண்டும். நாட்டுப்பசுக்கள் மூலம் பல ஆயிரம் கோடி உரம், மருந்து மற்றும் பெட்ரோலிய இறக்குமதிகளை குறைக்க இயலும். நாட்டுப்பசுக்களின் மூலம் பெறப்படும் மருந்துப்பொருட்களுக்கு மிகப்பெரிய வணிகச்சந்தை உள்ளது. ஆரோக்கியம், விவசாயம், இயற்கை என்று எல்லா வகையிலும் நாட்டுப்பசுக்களின் வீச்சு அளப்பரியது. இயற்கை வேளாண்மை நாட்டுப்பசுகள் இன்றி சாத்தியமில்லை. இன்றைய நிலையில் பாரதமாதாவை விட கோமாதா முக்கியம். கோமாதாவினால் தான் பாரதமாதா வளமும் புனிதமும் பெறுகிறார். கோமாதாவை நம்பித்தான் பாரதமாதா.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாட்டுப்பசுக்களை (Bos indicus) தேசிய விலங்காக அறிவிக்கவும், பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக நாட்டுப் பசுக்களை மையமாகக் கொண்ட பொருளாதார புரட்சிக்கு வித்திடவும் வேண்டும். நாட்டுப்பசுக்களுக்கு தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் ஆகும்.

Thanks: http://www.tamilhindu.com/2014/06/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/

WHY கோமாத IS OUR குலமாதா?

WHY கோமாத IS OUR குலமாதா????

நாட்டு பசுவின் மகிமை:

ஏதேனும் ஒரு சில காரணங்களால் நம் வீட்டிலோ அல்லது தோட்டத்திலோ வளரும் மரத்தின் கிளைகளை அகற்ற நேர்ந்தால் அதை மீண்டும் துளிர் விட செய்ய நாட்டு பசு சாணம் கொண்டு பூசி வைக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அந்த மரங்களை கிருமிகள் தொற்றிலிருந்து காப்பாற்றிவிடலாம்..


WHY கோமாதா IS குலமாதா?

சொட்டு நீர்க்குழாய் அடைப்புக்குத் தீர்வு!

சொட்டு நீர்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் அத்தனை விவசாயிகளுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்னை சொட்டு நீர்க் குழாய்களில் உப்பு அடைப்பு. இதை சரி செய்வதற்கு சொட்டு நீர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் 'சல்பியூரிக் ஆசிட்’டைதான் பயன்படுத்தச் சொல்கின்றனர். அந்த ஆசிட் பயிர்களில் படும்போது, பயிர் கருகி போய்விடுகிறது. 

இந்தப் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ...

ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கும் சொட்டு நீர்க் குழாய்களுக்கு 20 லிட்டர் தண்ணீரில், 10 லிட்டர் நாட்டு பசு சிறுநீரைக் கலந்துகொள்ள வேண்டும். பாசனம் செய்து முடிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, உரம் செலுத்தும் குழாய் வழியாக இந்தக் கரைசலைச் செலுத்தி, ஐந்து நிமிடம் மட்டும் ஓடவிட்டு மோட்டரை நிறுத்திவிட வேண்டும். மீண்டும் 24 மணி நேர இடைவெளி கொடுத்து, எல்லா கேட் வால்வுகளையும் திறந்துவிட்டு பாசனம் செய்தால், சொட்டு நீர்க் குழாயில் இருக்கும் அடைப்புகள் முழுக்க வெளியேறிவிடும்.

முகமது பயிஸ் கான்

பசுவதை தடை சட்டம் கேட்டு உண்ணாவிரதம் இருந்த முகமது பயிஸ் கான்

பசுவை தேசிய விலங்காக்கச் சொல்லி ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கச் சொல்லி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோரிக்கை. வாழ்த்துக்கள் ஆர்.எஸ்.எஸ்.

பார்ப்போம் எவ்வளவு நாளில் நிறைவேறுகிறது என்று. சமீபத்தில் யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்தது அரசு. ராஜஸ்தான் அரசு தேசிய விலங்காக ஒட்டகத்தை அறிவித்து அதை கொலை செய்வதை நிரந்தரமாக தடுத்தது. அப்படி பார்க்கையில் தேசிய விலங்காக பசுவை அறிவிப்பதில் சிக்கல் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இனி செய்யலாமா வேண்டாமா என்ற அரசின் எண்ணத்தில் தான் இருக்கிறது.

http://timesofindia.indiatimes.com/india/RSS-offshoot-now-demands-national-animal-status-for-cow/articleshow/40859303.cms


கோ பூஜை மற்றும் குலதெய்வ பூஜை

கொங்கதேசத்தின் காங்கய நாட்டிலுள்ள காடையூர் காணியில் உள்ள கொங்க கோசாலையில்(Konga Goshala),
ஆவணி அமாவாசை (25/08/2014), திங்கள்கிழமை சாய்ந்திரம் 5 மணியிலிருந்து ராத்திரி 8 மணி வரை, கோ பூஜை மற்றும் குலதெய்வ பூஜை நடைபெறும்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் தாமாகவே சுயம் பிரதிஷ்டை ஆகியுள்ள நாட்டு பசு மாட்டினை கோ பூஜை செய்வதன் மூலம் சகல தோஷங்களும் நிவர்த்தியாகி, சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நிதர்சனம்.

முழுக்காது பிறழந்தை கூட்ட குலகுரு ஸ்ரீலஸ்ரீ மீனாக்ஷி சைவபுரந்தர பண்டித குருஸ்வாமிகள் மற்றும் காடையூர் பட்டக்காரர் ஸ்ரீமான் அமராபதி காங்கய மன்றாடியார் தலைமையில் நடைபெறும். கோ பூஜையில் கலந்து கொண்டு குரு அருளும், குலதெய்வ அருளும், சகல தேவதைகளின் அருளும் பெறவும்



மதன் மோகன் மாள்வியா


டாக்டர்.சஹாதேவதாசா புத்தகங்கள்









கோயில்களுக்கே பசுக்கள் தான் ஆதாரம்


கோயில்களுக்கே பசுக்கள் தான் ஆதாரம். நாட்டுப்பசுக்கள் கோயில் கருவறையை தீர்மானிக்கும் சக்தி படைத்தது. ஆலயம் என்று சொல்வதே “ஆ+லயம்” அதாவது பசு தன்னை மறந்து லயித்து நின்ற இடம் என்ற பொருளில் தான். நாட்டுப்பசுவுக்கு இங்கே ஏன் முக்கியத்துவம் என்றால், பசுவும் கோயிலும் வெவ்வேறு அல்ல என்பதே. பசுவின் வீடே கோ+யில். பசுவின் திமில்தான் கோ+புரம் என்பது. இந்த திமில் மூலம் நாட்டுப்பசு தனது சூரிய கேது நாடியைக் கொண்டு காஸ்மிக் சக்தியை கிரகிப்பது போலவே கோபுரங்களும் காஸ்மிக் சக்தியை தனது செம்பு கலசங்கள் வாயிலாக இழுத்து உள்ளே தருகின்றன. தர்ப்பை, வரகு போன்ற அதிக மின்னோட்டத்தை தடுக்கும் வஸ்துக்களும் சேர்க்கப்படுகின்றன. ஆதிநாளில் பல கோயில்கள் இன்றைய கிராம கோயில்கள் போல கல்கட்டு கோயில்களாக இருந்தன. அவையெல்லாம் பசுக்கள் கட்டிய இடங்களே. ஒரு கிராம நிர்மானத்தின்போது பசுக்கள் தங்கிய இடங்களே கோயில்களாக உருப்பெற்றன. எனவே கருவறை என்பது மிக மிக முக்கியமான ஒன்று.

பசுவை தொழும் இடம் என்னும் பொருளில் வந்ததுதான் தொழுவம் என்னும் பேர். கோயில் என்பது கோ+இல், ஆலயம் என்பது ஆ+லயம் என ஆன்மீகத்தின் அடிப்படைகள் அனைத்தும் பசுவை சுற்றியே உள்ளன.

http://www.karikkuruvi.com/2014/08/blog-post_18.html

ஐநூறு கோடி போதுமா??



டெல்லியில் சாதுக்கள் போராட்டம்

பசுவதைத் தடுப்பு சட்டத்தை அமல்ப்படுத்தவும், பசுக்களின் மேய்ச்சல் நிலங்கள் மீட்கவும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சாதுக்கள் போராட்டம் நடத்தினர் இருந்தார்கள்.


நாட்டு மாட்டுப்பால் X சீமை மாட்டுப்பால்






சீமை மாட்டு கருமத்தை

சீமை மாட்டு கருமத்தை வச்சிருந்தால் இதுபோன்ற விபரீதங்கள் தான் நடக்கும்.. இவ்வளவு மோசமான ஹார்மோன் கொலாருடைய மாடுகளின் பாலை குடிக்கும் பெண்கள் எப்படி ஒழுக்கமாக வாழ முடியும்..? ஆண்கள் எப்படி ஆண்களாக இருப்பார்கள்...?? சீமை மாட்டு பாலை குடித்தால் உடலின் மொத்த ஹார்மோன் சமநிலையும் தடுமாறி, கண்ட வியாதிகள் வந்தவண்ணம் இருக்கும்..

மேலும் முழுமையான தகவல்களுக்கு,http://www.youtube.com/watch?v=M9msAJDJmJI


ஆடித்தபசு

ஆடித்தபசு!!!!!!!

பசுக்கள் பாதுகாக்கப்படும் நாட்டில், செல்வச்செழிப்பு மிகுந்திருக்கும். அதனால் தான், தானங்களில் உயர்ந்த தானமாக, பசு தானத்தைக் குறிப்பிடுகின்றனர். 
ஒரு குழந்தை பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. தாய்ப்பால் வற்றிப்போனால், அதன் உயிரைக் காப்பது பசுவின் பால். மனித வாழ்வின் துவக்கத்தில் மட்டுமல்ல, அது முடிந்த பின்னும் பால் ஊற்றுகின்றனர். இப்படி வாழ்க்கை முழுவதும் நம்மோடு வருவது பசு. 

இதனால் தான், சிவனை, பசுபதி என்றும், அம்பாளை கோமதி என்றும் சொல்கின்றனர். ‘கோ’ என்றால், பசு.
அம்பாள் கோமதி, பூலோகம் வந்து, உலக நன்மை கருதி தபஸ் (தவம்) இருந்தாள். ‘தபஸ்’ என்பதே பின்னாளில், தபசு ஆனது. இந்த தபசுக் காட்சி, ஆடிமாதம் பவுர்ணமியை ஒட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலிலும், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்திலுள்ள தெற்கு சங்கரன்கோவிலிலும் விமர்சையாக நடைபெறுகிறது.
இப்பகுதியில் வசித்த, ஒரு சிவபக்தர் உஞ்சவிருத்தி (தானம்) பெற்று வாழ்ந்து வந்தார். தினமும் காகங்களுக்கு சாதம் வைத்தபின், சாப்பிடுவது அவர் வழக்கம். அவ்வாறு சாதம் வைக்கும் போது, ஒரு காகம் மட்டும், சாதத்தை எடுத்து, குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு, பறந்து செல்வதை பார்த்தார். தினமும் அந்தக் காகம் அவ்வாறு செய்வதை கவனித்த சிவபக்தர், அங்கு சென்று பார்த்தார். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. அதற்கு பூஜை செய்து வழிபட்ட சிவபக்தர் அங்கேயே தங்கி விட்டார். இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரிய வரவே, அவரைச் சென்று பார்த்தனர். அப்போது, சிவலிங்கத்தில் ஐக்கியமாகி விட்டார் பக்தர். அதனால், அதற்கு, ‘சங்கரலிங்கம்’ என, பெயர் சூட்டினர். பின், அவ்விடத்தில் கோவில் எழுப்பினர்.

இந்த இடத்தில் தான், அன்னை உமையவள், தவமிருந்தாள். அவள் பிரகாசமான முகமுடையவள். எனவே, அன்னையை, கோமதி என்றனர். அவளை தரிசிக்க தேவர்கள், பசுக்களாக மாறி வந்தனர். அந்த பசுக்களை காத்தமையால், ஆவுடையம்மாள் என்றும் அழைக்கப்படுகிறாள்.

இந்த லிங்கத்தின் முன்புறம் ராகு, இடது புறம் கேது என, இரு நாகங்கள் உள்ளன; நாகதோஷம் உள்ளவர்களுக்கு இது பரிகாரத்தலம்.

தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ இத்தலம் அமைந்துள்ளது. இந்த புண்ணிய நதியில் நீராடினால், பாவங்கள் தொலையும். அன்னையின் தபசுக் காட்சி நதிக்கரையில் நடைபெறுகிறது. இந்த நல்ல நாளில், பசுக்களை பாதுகாக்கும் வகையில் உதவிகளை வழங்கினால், குடும்பம் வாழையடி வாழையாக செல்வச் செழிப்புடன் திகழும்; தீர்க்காயுள், தீர்க்கசுமங்கலி பாக்கியமும் கிடைக்கும்

சண்டிகேஸ்வரர்


நன்றி: விஜயபாரதம் இதழ் 

ஜல்லிக்கட்டு போட்டிகளில்


ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகளை கொடுமை செய்கிறார்கள்.. அதனால் அந்த போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து "இனிமேல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கூடாது" என்ற தீர்ப்பையும் பெற்றிருக்கிறார்கள்.... விலங்குகள் நல ஆர்வலர்கள்...

                                                 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்றாலும் வழக்கம் போல எதையும் செய்ய முடியாத சாமான்யனாய் சில சந்தேகங்கள் வரத்தான் செய்கிறது....

1) இந்த வழக்கை தொடுத்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் எல்லோருமே நூறு சதவிகித சைவ உணவு உண்பவர்களா???

2) அப்படியே அவர்கள் சைவ உணவு உண்பதே வைத்துக்கொண்டாலும் மாடுகள் உழவு செய்யாமல் , பாரவண்டி இழுக்காமல் தான் அந்த உணவு பொருட்கள் இவர்களை வந்தடைகிறதா ???(மாடுகளை காயடித்து அதன் சந்ததி பெருக்கத்தையே நிறுத்தினால் மட்டுமே அதை உழவுத்தொழிலிலோ, பார வண்டி இழுக்கவோ பயன்படுத்த முடியும்.. காயடிபதை விடவா ஒரு பெருங்கொடுமை உண்டு..??????)

3) ஜல்லிக்க்கட்டு காளைகளை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விட்டு அதிக பட்சம் பத்து நிமிடங்களுக்குள்ளாக அது பட்டியை விட்டு வெளியே போய் விடும்... இந்த பத்து நிமிடத்தில் அதனை பிடிக்க பத்து பதினைந்துபேர் முயல்வார்களே,,, அவர்களில் யாரும் கட்டை, கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தான் அந்த மாடுகளை கொடுமை படுத்துகிறார்களா????

4) ஜல்லிக்கட்டுக்களுக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு போஷாக்காக கொடுக்கப்படும் தீவனங்கள், கவனிப்புகள் அந்த மாடுகள் அந்த போட்டிகளுக்காக இல்லை என்றால் கூட கிடைக்கும் என்று அந்த வழக்குத்தொடுத்தவர்களால் உறுதியளிக்க முடியுமா????

5) காயடிக்காத மாடுகளை மற்ற தொழில்களில் ஈடுபடுத்த முடியாது ( பசுமாடுகளை சினைப்படுத்தும் வேலையை தவிர) இவ்வளவுகாலம் ஜல்லிக்கட்டுக்கென காயடிக்காமல் வளர்த்து கொழு கொழு என்று இருக்கும் மாடுகள், இனிமே அந்த போட்டிகளுக்கு உதவாதென்றால் அதனை வளர்த்தவர்கள் விற்பனை செய்ய தான் முயல்வார்கள்... அப்படி விற்பனையாகும் மாடுகளை வாங்குபவர்கள் கறிக்காக அதனை வெட்டுவார்கள்... ஆக.. பத்து பதினைந்து இளைஞர்கள் அதனை மடக்குவதை கொடுமை என்று சொன்ன அந்த ஆர்வல புடுங்கிகள் அந்த மாடுகளின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா?????

கடைசியா ஒரு சாமான்யனா எங்கூர் பக்கம் சொல்ற ஒரு சொல்வழக்கோடு என் சந்தேகங்களை இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன்...

"மேயிற மாட்ட கெடுத்துச்சாம் நக்குற மாடு...

-- Thanks: Senthil K Nadesan

தேசிய பட்ஜெட்டில்..

தேசிய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முதுகெலும்பான நாட்டுப்பசுக்களுக்கு ஐம்பது கோடி ஒதுக்கீடு.. ரசாயன உர இறக்குமதி மானியம், நூறு நாள் வேலை திட்டம்.. ஸ்மார்ட் சிட்டிக்கள், புல்லட் ரயில்கள்.. இவற்றிற்கு லட்சம் கோடிகள்.. 




இரண்டும் ஒன்றா??


வெளிநாட்டு காளைகள் இறக்குமதி

ஜல்லிக்கட்டு வணிகமயாகிவிட்டது என்றும் அது மீண்டும் கிராம ஆன்மீக விழாவாக கொண்டாடும் சூழல் உருவாக்கவேண்டும் என்று ஜல்லிக்கட்டு தடையை ஆதரித்தவர்கள் எழுதினார்கள். காளைகள் சாமானிய கிராமத்து மக்கள் கைகளில் இருந்து பிடுங்கப்பட்ட பின்பு எப்படி சாத்தியமாக்குவார் என்று கேட்டு கொண்டேன். அதற்கு நேற்று விடை கிடைத்தது.டெய்ரி டெவலப்மன்ட் போர்டு 80 டென்மார்க்கின் HF ரக காளைகளை இறக்குமதி செய்யப்போகிறதாம். தரம் தாழ்ந்த (!!) நம் நாட்டு பசு இனங்களின் மீட்பராக சீமை காளைகள் வருகிறது. இதுக்கு மேதாவிங்க வச்ச பேர் Breed Improvement (Article 48). வந்தனா சிவா மொழியில் இது Genetic Pollution!. வருங்காலத்தில் திமிலில்லா HF காளைகளை வீரர்கள் எப்படி அணுகுவார்கள்?. இந்த சீமைமாட்டு பாலை குடித்து வளரும் பயில்வான்களுக்கு சீமை காளை கன்றுகளை அடக்கினாலே பெரிய விஷயம்தான். ஒருபக்கம் மேற்கத்திய அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு தடை; தொடர்ந்து காளைகள் வெட்டுக்கு கேரளா பயணம்; மறுபக்கம் பிடிவாதமாக காளைகள் வைத்திருப்பவர்களிடம் கிறிஸ்தவ மிஷனரிகள் அழுத்தமான பேரம்; இன்னொருபுறம் சீமை காளைகள் இறக்குமதி. புள்ளிகளை இணைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்க போவதில்லை. ஆடி மாச காத்திலும் ஆங்காங்கே அணையா அகல்விளக்குகள் நம்பிக்கை வெளிச்சம் தருகின்றன.
--சசிகுமார்



நம்ம ஆண்கலை விட வெளிநாட்டுக்காரன் அழகா வாட்ட சாட்டமா இருக்கான் னு, அவன் விந்தணுவ இறக்குமதி பண்ணி, எல்லா பொண்ணுகளுக்கும் கருத்தரிக்க வையுங்கடா முட்டா பசங்களா..

ஜல்லிக்கட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தடை


ஜல்லிக்கட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தடை தெக்கத்தி மண்ணின் ஆன்மாவைக் குலைத்துப் போட்டிருக்கிறது. வீடுகளிலும் மாடுகளிலும் கறுப்புக் கொடி கட்டி மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். ஜல்லிக்கட்டு மீது ஆழமான ஆர்வமும் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டு வாழ்ந்த மக்கள், தனித் தொழுவம், தனித்தீவனம் என்று அன்பும் பெருமிதமுமாகக் காளைகளை வளர்த்தவர்கள் தங்களுக்கே மூக்கணாங்கயிறு மாட்டியதுபோல் துடிக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஜல்லிக்கட்டைத் தடை செய்யவேண்டும் என்று பீட்டா போன்ற அமைப்புகளும், விலங்குகள் நல ஆர்வலர்களாக விளங்கும் பிரபலங்களும், விலங்குகள் நல அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. தொடக்கத்தில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டை அனுமதித்த உச்ச நீதிமன்றம் அண்மையில் முழுமையாகத் தடைசெய்துவிட்டது.


                                      


ஜல்லிக்கட்டு : ஓர் அறிமுகம்
தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் ஊற்றுக்கண்ணாக இருந்த தென்தமிழக மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய கலையாக விளங்கும் ஜல்லிக்கட்டை தமிழ் இலக்கியங்கள் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில் சுட்டுகின்றன. விலங்குக்கும் மனிதனுக்குமான தொன்மப் போராட்டத்தின் நீட்சியாகத் தொட்டுத் தொடரும் வீர விளையாட்டுகளில் ஒன்றே ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டில் காளைகள் வதைக்கப்படுகின்றன என்பது விலங்குகள் நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. வால்களைக் கடிப்பதாகவும், மாடுகளுக்கு மது புகட்டுவதாகவும், காயங்கள் ஏற்படுத்தி வெறி ஊட்டுவதாகவும், தேவையற்ற உயிர்ப்பலி ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
முற்றிலும் இயற்கை வழியில் நடந்த தமிழக விவசாயத்தில் கால்நடைகள் அளப்பரிய பங்களிப்பைச் செலுத்தி வந்தன. நிலத்தை உழவும், நீர் பாய்ச்சவும், அறுவடை செய்யவும், விற்பனைக்குக் கொண்டு செல்லவும் மாடுகளின் பங்களிப்பு விவசாயத்தில் தவிர்க்க முடியாதது. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதுதான் நம் விவசாயம். நெற்பயிரின் அடிப்பகுதி அப்படியே காட்டில் விடப்பட்டு வயலுக்கு உரமாகும். நடுப்பகுதி வெட்டி எடுத்து வரப்பட்டு மாட்டுக்கு உணவாகும். நுனிப்பகுதியில் தளைத்திருக்கும் பயிர் வீட்டுக்கு உணவாகும். வைக்கோலை உண்டுவிட்டு மாடுகள் தரும் கழிவே விளைச்சலுக்கு உதவும் உரமாகவும் இருந்தது.

தை முதல் நாளை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடிய மக்கள், தை இரண்டாம் நாளை கால்நடைப் பொங்கலாகக் கொண்டாடினர். மாட்டுப் பொங்கலின் தொடர்ச்சியாக நிகழ்ந்த விளையாட்டே ஜல்லிக்கட்டு. இது வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் தமிழரின் பண்பாட்டோடு தொடர்புகொண்ட கலையாகவும் இருந்துள்ளது.

விலங்குகள் நல ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டை தென் மாவட்டத்துக்கு மட்டுமான விளையாட்டு என்றே நீதிமன்றத்தில் சொன்னார்கள். அது சரியல்ல. தமிழகம் முழுவதும், ஏன் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இது நடத்தப்படுகிறது. தனித்து ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நிகழாவிட்டாலும் மஞ்சு விரட்டு, மாடு கூடுதல், மாடு அவிழ்த்து விடுதல், ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா, வடம், வாடி என பல பெயர்களில் நடத்தப்படுகிறது.
தஞ்சை வட்டாரத்தில், மாட்டுப் பொங்கலன்று கால்நடைகளைக் குளிப்பாட்டி நல்ல உணவு கொடுத்து இரவு ஒரு திடலில் கொண்டு வந்து கட்டுவார்கள். அங்கு ஒரு மரத்தின் கீழே இறைவனின் உருவைப் பிடித்துவைத்து பொங்கலிடுவார்கள். பின் பொங்கலைக் குவித்து பழங்களைச் சேர்த்து பிசைந்து மாடுகளுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டுவார்கள். மறுநாள் அதிகாலை மாடுகளின் கழுத்தில் தேங்காய், பழங்களைக் கட்டி அவிழ்த்துவிடுவார்கள். முறைப்பெண்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்க, இளைஞர்கள் மாடுகளைத் துரத்தி அந்த தேங்காயைப் பறிப்பார்கள். இதுவே சேலம், ஈரோடு, கோவை, காரைக்குடி பகுதிகளில் மஞ்சு விரட்டு என்ற பெயரில் நடக்கிறது.

அலங்காநல்லூர், அவனியாபுரம், சக்குடி, பாலமேடு, சூரியூர், சத்திரப்பட்டி, குலமங்கலம், அச்சம்பட்டி, பொதும்பு, கீழப்பட்டி, அய்யம்பட்டி, பழவராயன்பட்டி, பாரப்பட்டி, சோழங்குருணி, கலணை, கொசவப்பட்டி, அய்யாப்பட்டி என 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கென ஆயிரக்கணக்கில் காளைகள் வளர்க்கப்படுகின்றன. அவை வேறெந்த வேலைக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. பிற மாடுகளோடு சேர்த்து வளர்க்கப்படுவதும் இல்லை. தனித் தீவனம், தனிக் கொட்டில் என மிகுந்த கவனம் எடுத்து வளர்க்கப்படுகின்றன. நீச்சலடிக்க, நடக்க, ஓட எனத் தனிப்பயிற்சியும் அளிக்கப்படுவதுண்டு. ஜல்லிக்கட்டு காளைகள் இனப்பெருக்கம் செய்யப்படும் விதமும் வித்தியாசமானது. மதுரையைச் சுற்றியுள்ள மைக்குடி, மணப்பட்டி, ஊமச்சிக்குளம், தொட்டியப்பட்டி, குரண்டி, வாடிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த கிடைமாட்டுக்காரர்களிடம் தகுதிவாய்ந்த ஜல்லிக்கட்டு கன்றுகள் வாங்கப்படுகின்றன. களத்தில் நின்று விளையாடும் காளைகளை நன்றாக மேய்ந்து கொழுத்த பசுவோடு இணைசேர்த்து ஜல்லிக்கட்டு காளைகளை உருவாக்குவார்கள். தகுதி வாய்ந்த கன்றுகள் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விலைபோகும். களத்தில் நின்று விளையாடும் மாடுகளை லட்சங்கள் கொடுத்து வாங்கிக்கொள்ள ஆட்கள் வரிசை கட்டுவார்கள். மாடுகள் வளர்ப்பதும் ஜல்லிக்கட்டில் ஜெயிப்பதும் கௌரவ அடையாளம்.

எல்லோரும் ஜல்லிக்கட்டு விளையாட முடியாது. உடல் தகுதியோடு மன தகுதியும் அவசியம். ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு 60 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. ஏகப்பட்ட விதிமுறைகளும் உண்டு. கொம்பைப் பிடிக்கக்கூடாது. திமிலை மட்டுமே பிடிக்கவேண்டும். வாலைப் பிடிக்கக்கூடாது. தண்ணீரில் விழுந்தால் பிடிக்கக்கூடாது. இப்படிப் பல விதிமுறைகள். முறையாக மாடு பிடிக்கப் பழகிய வீரர்களால் மாட்டுக்கும் பாதிப்பிருக்காது. வீரருக்கும் காயமேற்படாது.
விலங்குகள் நல ஆர்வலர்களின் பார்வை பட்டபிறகு ஜல்லிக்கட்டின் முகம் மாறிவிட்டது. அவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 77 விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தது. 2 லட்ச ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும்; வீரர்களுக்கும் மாட்டுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டில் விட வேண்டும்; காளைகளை வெறியூட்டக்கூடாது; மாடுபிடி வீரர்கள் வருவாய்த்துறையினரிடம் பதிவு செய்ய வேண்டும்; போதைப்பொருள், ஊக்கமருந்து பயன்படுத்தக்கூடாது; இப்படியான 77 விதிமுறைகளில் பெரும்பாலானவை நியாயமாக இருந்தாலும் 2 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும் என்ற விதிமுறை ஜல்லிக்கட்டை முடக்கியது. பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டைக் கைவிட்டார்கள். இந்தச் சூழலில் முற்றிலுமாக ஜல்லிக்கட்டைத் தடை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரியதன் பின்னணியில் இந்திய சந்தையை ஒட்டுமொத்தமாக கைகொள்ளும் நோக்கிலான அந்நியச் சதி இருப்பதாக கசியும் செய்திகள்தான் இப்போது திகிலூட்டுகின்றன.
கால்நடைகளும் சிக்கல்களும் ஒரு காலத்தில் விவசாயிகள் மந்தை மந்தையாகக் கால்நடைகளை வைத்திருந்தார்கள். பசுமைப்புரட்சி என்ற பெயரில் இயற்கை விவசாயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இந்திய வயல்களுக்குப் பொருந்தாத உபகரணங்களையும், உரம் பூச்சிக்கொல்லிகளையும் கொண்டு வந்து குவித்தார்கள். அதன் வழி இந்தியாவின் பாரம்பரிய விவசாயம் அழிந்து போனது.

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நோய்களுக்குத் தாக்குப்பிடித்து காலங்காலமாக பலன் கொடுத்து வந்த தமிழகத்தின் நாட்டு மாட்டு ரகங்களை அழித்து வெளிநாட்டு கலப்பினங்களைக் கொண்டு வந்து குவித்தார்கள். கால்நடைகள் என்பது விவசாயத்துக்கே பிரதானமானது. பால் என்பது அதை வளர்க்கும் குடும்பத்துக்கு மட்டுமானது. ஆனால், பாலை ஒரு விற்பனைப் பொருளாக்கி கால்நடைகளுக்கும் மனிதர்களுக்குமான பந்தத்தைக் குலைத்துவிட்டார்கள். கலப்பின மாடுகளைப் பொறுத்தவரை பாலைத் தவிர அவற்றால் எந்த உபயோகமும் இல்லை. கூடுதலாகப் பால் தந்த கலப்பின மாடுகளோ பெருந்தீனி தின்றன. அடிக்கடி நோய் வாய்ப்பட்டன. தட்பவெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்தன.

பர்கூர், காங்கேயம், செம்மரை, ஆலம்பாடி, அலிகார், உப்பளச்சேரி, வெச்சூர், கோவைக்குட்டை, தார்பார்க்கர், கிர், சாகிவால், காங்கிரிஜ், ராட்டி, ரெட்சிந்தி என இந்தியாவில் 33 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. இந்த மாடுகள் பால் குறைவாகக் கறந்தாலும் அவற்றில் சத்து இருந்தது.

காங்கேயம் ரக மாடுகளை நோய், நொடிகள் எளிதில் தாக்காது. தீவனப் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் பனை ஓலை, கொழுக்கட்டைப் புல் என்று கிடைத்ததை உண்டு, உழவு, இழுவை வேலைகளைச் சோர்வடையாமல் செய்யக்கூடிய ஒரு ரகம். காங்கேயம் பசு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பால் கொடுக்கும். உம்பளாச்சேரி காளை டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய தொடைகால் சேற்றில் கூட தொடர்ச்சியாக 8 மணி நேரம் சோர்வில்லாமல் வேலை செய்ய வல்லது. இந்த மாட்டின் கால் குளம்பு, குதிரைக் குளம்பு போல இருக்கும். காலைத் தரையில் வைத்து இழுக்காமல் தூக்கிவைத்து நடக்கும். ஒவ்வொரு பசு மாடும் சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனக் கூடியது. இந்த ரக மாடும் தினமும் ரெண்டரை லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கக் கூடியது தான். இன்னும் பர்கூர் மலை மாடு, புலிக்குளம், மணப்பாறை, கண்ணாபுரம் என்று மாட்டினங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவு பெருமைகளோடு, காலம் காலமாகப் போற்றி வளர்த்த மாடுகள் அனைத்தையும் வெண்மைப் புரட்சிக்கு பலி கொடுத்துவிட்டோம்.
இன்றைக்கு காளைகள் உழுத நிலத்தில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் டிராக்டர்கள் உழவு செய்கின்றன. காளைகள் மண்ணைச் செழிக்க வைக்க உரமிட்டது. ஆனால், டிராக்டர் டீசலைக் குடித்துவிட்டுப் புகையைக் கக்குகிறது.

விவசாயத்தை இயந்திரமயப்படுத்திவிட்டு நாட்டு மாடுகளை விவசாயத்தில் இருந்து அப்புறப்படுத்துவதே பன்னாட்டு நிறுவனங்களின் முதல் இலக்காக இருந்தது. அது நிறைவேறியதும், பால் வணிகத்தை முதன்மைபடுத்தி கலப்பினத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தின. நார்வே, சுவிட்சர்லாந்து நாடுகள் இத்தொழில்நுட்பத்தில் முன்னணியில் நிற்கின்றன.
இந்த மாடுகளின் பாலைக் குடிக்கும் குழந்தைகளின் இயல்பு மாறிவிடுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். சிறுமிகள் பத்து, பதினோரு வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். இதன் தொடர் விளைவு, நார்மல் டெலிவரிகளே அற்றுப் போய்விட்டன. 80 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவம் தான். ஆண்களுக்கு மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் கலப்பின பசுக்களின் பாலே காரணம் என்கிறார்கள் சில மருத்துவர்கள். இந்தப் பாலில் இருக்கும் கேசின் என்ற புரதம் நீரிழிவு நோயைத் தூண்டக்கூடியது.
வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறையக் கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்துவிட்டன. இன்னும் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்டு மாடுகளையும் அழித்துவிட்டு கலப்பின மாட்டுச் சந்தையாக தமிழகத்தை மாற்றுவதற்கான யுத்திதான் ஜல்லிக்கட்டுத் தடை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு விலங்குகள் நல அமைப்பு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்ததோடு வழக்கிலும் தீவிர ஆர்வம் காட்டியது. இந்தியாவில் இருக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பெரும் நிறுவனங்களின் நிதியைப் பெற்றுக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் மீது சந்தேகத்தைத் திருப்புகிறார்கள். உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடந்தபோதெல்லாம் நிறைய வெளிநாட்டுக்காரர்கள் வந்து விசாரணையை ஆர்வத்தோடு கவனித்ததாகவும் சொல்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் புலிக்கோலம், காங்கேயம் காளைகள் மூலமாகவே தென் மாவட்டங்களில் நாட்டு மாடுகள் இனப்பெருக்கம் நடந்து வருகின்றன. ஒரு ஜல்லிக்கட்டுக் காளைக்காக தீவனம், பராமரிப்பு என்று பல ஆயிரங்களை மாட்டின் உரிமையாளர்கள் செலவு செய்வார்கள். ஜல்லிக்கட்டே இல்லை என்றான பிறகு அந்த மாடுகளை வைத்துப் பராமரிப்பதில் ஒரு பயனும் இல்லை. அது மாடு வளர்க்கும் நடுத்தரக் குடும்பத்துக்கு மக்களுக்கு பெரும் சுமை. அதனால் அவர்கள் மாடுகளை அடிமாட்டுக்கு கொண்டு போய் விற்றுவிடுவார்கள். அதைக் கேரளக்காரர்கள் வாங்கிக்கொண்டுபோய் வெட்டிச் சாப்பிடுவார்கள். அப்படியாக மிஞ்சியிருக்கும் நாட்டுமாட்டு ரகங்களும் அழிந்துபோகும். பிறகென்ன..? எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தில் கலப்பின மாடுகளை அல்லது அதற்கான விபரீத தொழில்நுட்பத்தை கொண்டு வந்து குவித்து காசு பார்க்கலாம்.

கலப்பின மாடுகள் உங்கள் ஊரில் முளைக்கும் புற்களைத் தின்னாது என்று சொல்லி நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து தீவனங்களைக் கொண்டு வரலாம். தீவனங்களுக்கான மலட்டு விதைகளை கொண்டு வந்து நிலத்தில் கொட்டலாம். ஒரு கட்டத்தில் மொத்த உணவுச் சந்தையையும் கைப்பற்றிவிடலாம். இதற்குத்தான் வெளிநாட்டு ஏஜென்ஸிகள் ஆர்வம் காட்டின என்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள். சில நடிகைகளும் பிரபலங்களும் மாட்டை வதைக்கிறார்கள் என்று குரல் கொடுப்பதும், ஒரு மத்திய அமைச்சர் வீட்டு விலங்கான மாட்டை காட்டு விலங்குகள் பட்டியலில் சேர்ப்பதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் சந்தேகத்தை வலுவடையவே செய்கின்றன. இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு பல்லாயிரம் கால்நடைகள் உணவுக்காக வெட்டிக் கொல்லப்படும் நிலையில், ஒரு சமூகத்தின் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்தது ஏன் என்ற அவர்களின் கேள்வி நியாயமானதாகவே இருக்கிறது.

நல்ல மாற்றம்


நாட்டுப்பசுக்களின் நன்மைகளையும் சீமை மாட்டின் தீமைகளையும் உணர்ந்து, இன்று பலரும் சீமை மாடுகளை விற்று தொலைத்துவிட்டு நாட்டுப்பசுககளை வாங்கி வருவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அப்படி வாங்கப்பட்ட பசு. இடம் சேலம் மாவட்டம் ஆத்தூர்.

நாட்டு பசுக்களை சொந்த தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். சீமை மாட்டு பாலை டவுனில் இருப்போருக்கு போய் சேரட்டும் என்று சொசைடியில் ஊற்றுகிறார்கள். கிராமங்களையும் விவசாயிகளையும் கேவலமாக நினைத்தது, அவர்கள் சீரழிவை பற்றி சிந்திக்காத நகரத்து மக்களை பற்றி ஏன் கவலை படனும். கிமாத்து மக்கள் அவர்கள் சொந்த தேவைக்கு மட்டும் சத்தான நாட்டு மாட்டு பால், பாரம்பரிய உணவு வகைகள், இயற்கை காய்கறிகள் போன்றவற்றை பயன்படுத்தவும். நகரங்களுக்கு அனுப்ப மருந்தை போட்ட, ஓட்டு ரக காய்கறி உணவுகளையும், சீமை மாட்டு பாலையும் அனுப்புங்கள். அவனவன் உருப்படியாக வாழ நினைத்தால் கிராமத்திற்கு வந்து ஒழுக்கமாக சாணி எடுத்து விவசாயம் செய்து வாழட்டும். அப்போது விவசாயமும் வாழும்.

படுதா போட்டு மூடி

காங்கிரஸ் ஆட்சியில் ஓபன் லாரியில் பசுக்களை கடத்தியவர்கள் இப்போது படுதா போட்டு மூடி பசுக்களை கடத்தி கொல்லுகிறார்கள்...

நமோவின் சாதனை புல்லரிக்கிறதல்லவா...?? 

(நீதி: மானம் கெட்ட நாய்களுக்கு எவ்வளவு பேசினாலும் உறைக்காது)


வீட்டின் அழகு


நெம்ப பேரு வீட்டுல கலர், கலரா வாஸ்து, கீஸ்து மீன நடு வீட்டுக்குள்ள விதவிதமான கண்ணாடி தோட்டி வாங்கி வளத்துறாங்க. இது அவங்க ஆசையா இருக்கலாம். ஆனா அந்த மீன வெச்சா தான் வீட்டுக்கு அழகு வருமா? அதுனால உங்களுக்கு என்ன உபயோகம்? அதுக்கு போயி தேவையில்லாத செலவு வேற பன்னனும். அந்த மீன ஒரு நாளைக்கு குழம்பு கூட வெச்சு சாப்பிட முடியாது ...!

உங்க வீட்டுக்கு உள்ள வந்து எல்லாரும் அத பாக்க போராது இல்ல.ஆனா ஆசைக்கு ஒரு நல்ல
அழகான #நாட்டுமாடு அல்லது அருமையான ஒரு சோடி #காளை வாங்கி கட்டி பாருங்க. உங்களுக்கு உபயோகமும் ஆகும் வீட்டுக்கும் அழகாகவும் , கெத்தாவும் இருக்கும் . நீங்க அறியாம தெரியாம செஞ்ச பாவமெல்லாம் வெலகி ஏலேழு ஜென்மத்துக்கும் புண்ணியமாவது சேரும்.

நன்றி @விக்னேஸ் வேலுச்சாமி கவுண்டர்


கொங்க கோசாலை - மழகொங்கம்

நாமக்கல் மாவட்டம், திருசெங்கோட்டு பகுதியில் வெட்டுக்கு செழும பசுக்களை மீட்டு அதை வளர்க்க விரும்புவோரிடம் சேர்க்கும் நோக்கில் புதிய கோசாலை துவங்கப்பட இருக்கிறது.

திருச்செங்கோடு நாமக்கல் பகுதிக்குரிய மழகொங்க மாடு என்றும் கீகரை மாடு என்றும் சொல்லக்கூடிய நாட்டு பசு வகை வேண்டுவோர், அவசியம் தொடர்பு கொள்ளலாம். கோசாலையை பார்க்க விரும்புவோர் ஒருங்கினைப்பாலரை தொடர்பு கொள்ளலாம். தன்னார்வலர்கள் சேர்ந்து செய்யும் இந்த அரும்பெரும் பணியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: 88837 40013 & 99448 55044



ஜல்லிக்கட்டு



மாடு என்னும் சொல்லுக்குச் ‘செல்வம்’ என்று பொருளுண்டு. மாட்டுக்கும் மனிதர்களுக்குமான உறவுகள் பற்றிப் பல செய்திகள் வரலாறு நெடுகிலும் உள்ளன. மாடுகளைப் பழக்கி வேளாண்மையில் ஈடுபடுத்தியதாலேயே மனிதன் நிலைகொள்ள முடிந்தது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு மாடுகளும் அவற்றின் உழைப்பும் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பசுக்களும் எருமைகளும்கூட வேளாண் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டன எனினும் அவற்றின் முதன்மையான உற்பத்திச் செயல்பாடு பால் வழங்குவதுதான். இன்றைக்கும் பால் பெரும் விற்பனைப் பொருள்களுள் ஒன்று.

எருமைக் கிடாக்கள் உழவுக்கு இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. எனினும் உழவு, ஏற்றம், வண்டி, தாம்பு முதலிய வேலைகளுக்குக் காளைகளே ஏற்றவை. காயடிக்கப்பட்டபின் எருது என்னும் பெயர் பெறும் அவற்றின் உழைப்பை எல்லாக் காலத்திலும் பயன்கொண்டதோடு போற்றியும் வந்திருக்கிறது மனித சமூகம். பதின்பருவத்து ஆண்மகனைக் காளை, மிடல், ஏறு என்றெல்லாம் அழைப்பதுண்டு. மாட்டு மந்தையின் அளவை வைத்து ஒரு குழுவின் செல்வத்தை அளவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒரு குழு மற்றொரு குழு வோடு போர் தொடங்குகிறது என்றால் முதலில் மாட்டு மந்தைகளைக் கவர்ந்து வருவது மரபு.

போர் பற்றிய புறப்பொருள் இலக்கணத்தில் முதல் திணை வெட்சி. ‘வெட்சி நிரை கவர்தல்.’ அதாவது வெட்சிப்பூவைச் சூடிச் சென்று ஆநிரைகளைக் (மாட்டு மந்தை) கவர்ந்து வருதலை விவரிக்கும் திணை இது. ஆநிரை மீட்டல் கரந்தைத் திணை. மாடுகளைக் கவர்ந்து வருவது, அவற்றை அனைவருக்கும் பகிர்ந்து வழங்குவது, அவற்றை மீட்பது எனப் பல துறைகள் புறப்பொருள் இலக்கணத்தில் உண்டு. கன்றுகளாகத் துள்ளித் திரியும் மாடுகளை வேலைகளுக்குப் பழக்குவது அருங்கலை. அதுவும் பாய்ச்சல் மாடுகளாக இருப்பவற்றைப் பழக்கப் பெரும்பிரயத்தனம் தேவை. பலரது உதவியும் உழைப்பும் வேண்டும். கி.ராஜநாராயணனின் ‘கோபல்லபுரம்’ நாவலில் காட்டு மாடு ஒன்றைப் பிடிப்பதும் அவற்றை வேலைகளுக்குப் பழக்குவதுமாகிய நிகழ்ச்சி வருகிறது. கந்தர்வனின் ‘கொம்பன்’ என்னும் சிறுகதையில் கிடையில் சுதந்திரமாகத் திரியும் கொம்பன் மாடுகளைப் பிடித்து வந்து உழவு வேலைகளுக்குப் பழக்குவது தொடர்பான அரிய காட்சிச் சித்திரம் உள்ளது.

மாடுகளின் துள்ளலை அடக்கி அவற்றை வேலைகளுக்குப் பயன்படுத்துவதை ஒரு விளையாட்டாக்கிய செயல்தான் ‘ஏறு தழுவுதல்.’ ஆடுமாடுகள் வளர்ப்பதையே தம் தொழிலாகக் கொண்டிருந்தது முல்லை நிலம். இங்கு குறைவான அளவிலேயே உழவுத்தொழில் நடைபெறும். பால், தயிர், மோர் ஆகியவை பண்டமாற்று விற்பனைப் பொருளாக இருந்தமைக்குச் சங்க இலக்கியச் சான்றுகளே உண்டு. மாடு வளர்ப்பையே தம் பிரதான தொழிலாகக் கொண்ட முல்லை நிலத்தில்தான் ‘ஏறு தழுவுதல்’ என்னும் வீர விளையாட்டு நடந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் ஒன்றாகிய கலித்தொகையின் ‘முல்லைக்கலி’ பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஏறு தழுவுதலை விவரிக்கின்றன. அவற்றில் காளைகளின் வகைகள், அவற்றின் சீற்றம், காளைகளைத் தழுவிப் பிடிக்கும் ஆண்களின் வீரம் ஆகியவை பேசப்பட்டுள்ளன.

காளைகளோடு போராடி உயிர் துறப்பது வீரமாகக் கருதப்பட்டுள்ளமையையும் காண முடிகின்றது. காளையை அடக்கி வீரத்தை நிறுவுபவனையே முல்லை நிலத்துப் பெண் மணம் செய்துகொள்வாள். ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்பது முல்லைக்கலிப் பாடலில் வரும் புகழ்பெற்ற அடிகள். ‘எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்’ என ஏறு தழுவுதல் நடக்கும் களம் பற்றிய சித்திரமும் வருகின்றது. ஏறு தழுவும் களத்தில் புகும் மாடுகளைப் பற்றிய வருணனைகள் மிகச் சிறப்பாக அப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. ‘நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவை’ என்கிறது ஒரு பாடல். தமிழ் மரபு, பண்பாடு சார்ந்த பெரும்பதிவைக் கொண்டிருக்கும் கருவூலம் இந்தப் பாடல்கள்.

இதன்பின் இலக்கியப் பதிவுகள் இல்லை என்றாலும் ஏறு தழுவுதல் நடந்தமையைக் காட்டும் பருண்மைச் சான்றுகளாக நடுகற்கள் விளங்குகின்றன. வீரப் போர் புரிந்து இறந்தவனுக்கு எடுத்து வழிபடப்படுவது நடுகல். இவ்வழிபாடே மக்கள் தெய்வங்களாகக் காடுமேடுகளில் எல்லாம் கோயில்களாகப் பரவிக் கிடக்கின்றது. எதிரியோடு போராடி மாண்டவனுக்கு மட்டுமல்ல, விலங்குகளோடு போராடி வீர மரணம் அடைந்தவனுக்கும் நடுகல் உண்டு. புலியோடு போராடி மாண்டவனுக்கு எடுக்கப்பட்ட கல்லைப் ‘புலிக்குத்திக் கல்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுபோலப் பன்றிகுத்திக் கல், குதிரைகுத்திக் கல், யானைப்போர் நடுகல் எனப் பலவகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று ‘எருது பொருதார் கல்’ என்பதாகும். இதில் காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிற்பங்களைக் கொண்ட நடுகற்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன. தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கிடைத்துள்ள கற்கள் குறிப்பிடத்தக்கவை. சில நடுகற்களில் எழுத்துக்களும் உள்ளன. சேலம் மாவட்ட ‘எருது பொருதார் கல்’ ஒன்றில் காணப்படும் வாசகம் இது:

கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு.

கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடிப் பட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவன் மகன் பெரியபயல் எடுத்த நடுகல் இது. இதில் ‘எருது விளையாடி’ என்னும் தொடர் இடம்பெறுவது கவனத்திற்குரியது. ஏறு தழுவுதலை ஒரு விளையாட்டாகக் கருதியுள்ளார்கள் என்பதன் சான்று இது. இக்கல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய கற்கள் வெவ்வேறு நூற்றாண்டைச் சார்ந்தவையாக உள்ளன. ஆகவே ஏறு தழுவும் விளையாட்டு தொடர்ந்து தமிழ் மரபில் நிலவி வந்திருக்கிறது என்பது தெரிகிறது.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய விளையாட்டுக்கள் நடந்தமைக்குப் பல சான்றுகள் கண்கூடாகக் கிடைக்கின்றன. ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம், குபராவின் வீரம்மாளின் காளை, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் ஆகியவை முக்கியமான இலக்கியப் பதிவுகள். திரைப்படங்களில் பல காட்சிகள் உள்ளன. தாய்க்குப் பின் தாரம், வீர பாண்டிய கட்டபொம்மன், முரட்டுக்காளை, விருமாண்டி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. வீரபாண்டிய கட்டபொம்மனில் வரும் ‘அஞ்சாத சிங்கம் என் காளை அது பஞ்சாப் பறக்கவிடும் ஆளை’ என்னும் பாடல், காளையின் வீரத்தைப் புகழ்கிறது. புகைப்படப் பதிவுகளும் பல.

இவ்விளையாட்டு தமிழர் திருநாளாகிய தைப்பொங்கலோடு நெருங்கிய தொடர்புடையது. அறுவடைத் திருநாளாகிய பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெவ்வேறு வகையில் தொடர்ந்து நடைபெறக்கூடியது. சூரியன் பொங்கலாகிய வாசல் பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகியவற்றோடு முடிவுறுவது அல்ல இது. அவற்றைத் தொடர்ந்து வரும் காணும் பொங்கல் என்பதன் பரிமாணங்கள் பல. சென்னையில் உள்ளோர் பெருங்கூட்டமாகக் கடற்கரையில் ஒருநாள் மாலை கூடுவதையே காணும் பொங்கல் என்று இன்று கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் காணும் பொங்கல் அன்று கூத்து நடத்துவது வழக்கம். அன்று மட்டுமல்ல, தொடர்ந்து பல நாட்கள். மூத்தோர் வழிபாடும் கூத்தும் இணைந்திருக்கும். குலதெய்வ வழிபாடும் கலை நிகழ்ச்சிகளும் இணைந்திருக்கும். பொங்கலும் விளையாட்டுக்களும் பிரிக்க முடியாதவை. இவையெல்லாம் தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும். இவற்றைக் கொண்டாட்ட மாதங்கள் எனலாம். இக்கொண்டாட்டத்தில் மாடுகளுக்கும் பங்குண்டு. ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டு மட்டுமே ஊடக வெளிச்சம் பட்டு வெளியுலகிற்குத் தெரிந்திருக்கிறது. மஞ்சு விரட்டு, மாடு விடுதல் முதலிய பல விளையாட்டுக்கள் உள்ளன. இவை பொங்கல் பண்டிகையோடு இரண்டறக் கலந்தவை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமும் மரபும் கொண்ட விளையாட்டு இது என்பதற்குப் பதிவுகளும் நடைமுறைகளும் என இப்படிப் பல சான்றுகள் உள்ளன. இன்று ‘மிருகவதை’ என்னும் ஒற்றை நோக்கில் மட்டும் பார்த்து இவ்விளையாட்டிற்குத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம். மிருகவதை என்றால் முதலில் தடை செய்ய வேண்டியவை என ஒரு பெரும்பட்டியலே தரலாம். கோழிப் பண்ணைகள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நடப்பது என்பதே மறந்துபோன விஷயம். இன்னும் ஆட்டுப் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள், முயல் பண்ணைகள், காடைப் பண்ணைகள் எனப் பலவகைப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் வளர்க்கப்படும் மிருகங்களும் பறவைகளும் சுதந்திர வெளியில் நடமாடுகின்றனவா? இறைச்சிக்காக மிருகங்கள் கொல்லப்படும் விதம் பற்றி இந்த மிருக வதைத் தடுப்பாளர்கள் ஏன் பேசுவதில்லை?

பன்றியைக் கொல்வதற்குக் குத்தூசி என்னும் ஒருவகைப் பெரிய ஊசி பயன்படுத்தப்படுகின்றது. பின்னங்காலுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவ்வூசியைச் சொருகுகிறார்கள். பன்றி கிட்டத்தட்டப் பத்து நிமிடம் துடிதுடித்துச் சாகிறது. அடிமாடுகளைக் கொல்லப் பலமுறைகள் உள்ளன. எந்த முறையாக இருந்தாலும் மாடு சாவதற்குக் கால் மணி நேரம் ஆகிறது. இவற்றைவிட மாடுகளைப் பயன்படுத்தும் எந்த விளையாட்டும் கொடூரமானதல்ல. பண்ணைகளில் பெருநிறுவனங்கள் முதலீடு செய்யும் காலம் இது. இறைச்சி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் முக்கியப் பண்டம். ஆகவே மிருகவதைத் தடுப்பாளர்கள் அவற்றில் தலையிட மாட்டார்கள்.

ஜல்லிக்கட்டில் மாடு எதுவும் கொல்லப்படுவதில்லை. சாராயம் கொடுத்து வெறியேற்றுதல் முதலியவை நடந்திருக்கின்றன. எல்லா இடங்களிலும் அது வழக்கமல்ல. அவற்றை முன்னரே நீதிமன்றம் தடுத்து நிபந்தனைகள் விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்பட்டால் போதுமானது. விபத்துக்கள் நடைபெறுகின்றன என்பதால் நாற்கரச் சாலைகளையும் சுங்கச் சாவடிகளையும் மூடி விடுவார்களா? விபத்துக்களைத் தடுக்க ஆயிரம் யோசனைகள் சொல்லப்படுகின்றன. ஜல்லிக்கட்டிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கடுமையாக்கலாமே தவிர அதைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஜல்லிக்கட்டில் மனித உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்னும் வாதமும் வைக்கப்படுகின்றது. எத்தனையோ விளையாட்டுக்களில் களத்திலேயே வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அடிபட்டிருக்கிறார்கள். அதற்காக அவ்விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டனவா? கிரிக்கெட்டிலோ கால்பந்திலோ ஒரு வீரர் லேசாகக் காயம்பட்டாலே காத்திருக்கும் மருத்துவக் குழு உடனடியாக ஓடிவந்து களத்திலேயே முதலுதவி செய்கிறது. தேவைப்பட்டால் களத்திற்கு வெளியேயும் சிகிச்சை தரப்படுகின்றது. ஜல்லிக்கட்டு நடக்கும்போது அவ்விதம் மருத்துவக் குழுக்கள் தயாராக வைக்கப்பட வேண்டும் என்னும் விதி அமல்படுத்தப்பட்டால் போதாதா? பணக்கார விளையாட்டுக்களுக்கு ஒரு நியதி, சாதாரண மக்கள் விளையாட்டுக்களுக்கு வேறு நியதியா?

ஜல்லிக்கட்டில் மாடும் மனிதனும் தொடர்புபட்டிருக்கிறார்கள். இந்தத் தொடர்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே தொடங்கிய பந்தம். அதன் எச்சமே இன்று விளையாட்டு வடிவில் உள்ளது. ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, மாட்டோடு தொடர்புடைய விளையாட்டுக்கள் பல. மஞ்சு விரட்டு என்பது ஊரில் உள்ள மாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைச் சுதந்திர வெளியில் திரிய விடுவதாகும். பாய்ச்சல் மாடுகள் அதில் பயன்படுத்தப்படுவதில்லை. வட மாவட்டங்களில் இவ்விளையாட்டு உயிர்ப்புடன் நிலவுகின்றது. ஊருக்குள்ளும் காட்டுப்பாதைகளிலும் ஓடும் மாடுகளும் அவற்றை விரட்டிச் செல்லும் மக்களும் கொண்டாட்டத்தில் இணைகிறார்கள். மாடுகள் வயல்களிலும் தீவனப் போர்களிலும் சென்று தஞ்சமடைகின்றன. அவற்றை உரிமையாளர்கள் தேடிச் சென்று பிடித்து வருகிறார்கள். கயிற்றால் கட்டப்பட்டுக் கிடக்கும் மாடுகளுக்கு ஒருசில மணி நேரம் சுதந்திரம் தரும் விளையாட்டு இது.

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மாடு விடுதல் என்னும் விளையாட்டு நடைபெறுகின்றது. இது மாடுகளுக்கு இடையே நடைபெறும் ஓட்டப் பந்தயம் போன்றது. ஒவ்வொரு ஊர் சார்பாக வளர்க்கப்படும் மாடுதான் இந்தப் பந்தயத்தில் பங்கு பெறுகின்றது. அம்மாடு வருடம் முழுக்க எந்தக் கட்டுப்பாடும் இன்றி வளர்கிறது. வரிசையாக நிறுத்தப்படும் வெவ்வேறு ஊர் மாடுகள் ஒரே சமயத்தில் சீழ்க்கை ஒலியுடன் விரட்டப்படுகின்றன. அவற்றுள் எந்த மாடு முதலில் வருகின்றதோ அதற்குப் பரிசு தரப்படுகிறது. இந்தப் போட்டி ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாள் எனக் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்படுகின்றது. அறுவடை முடிந்து மக்கள் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் விளையாட்டுக்கள் இவை. இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் போற்றப்படுகின்றன. அவற்றைப் பேணி வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் மாடுகளின் வளர்ப்பும் அப்படித்தான். விளையாட்டுக்களுக்கென மாடு வளர்ப்பது என்பதே தனிக்கலை. அவற்றுக்கு என்ன வகைத் தீனி தர வேண்டும் என்பது தொடங்கி உடற்பயிற்சிகள் வரை பலவகைப் பேணல்கள் உண்டு. இப்போது விதிக்கப்பட்டிருக்கும் தடை மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள காலகாலத்திற்குமான பந்தத்தை அறுக்கும் முயற்சி. புராணக் கதை எதற்கும் உட்படாமல் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையின் உயிர்ப்பைப் பறிக்கும் செயல்.

தமிழ்நாட்டு மாட்டினங்கள் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டவை. நாட்டு மாடுகள் எனப்படும் இவை இன்று உயிர்த்திருப்பதே ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுக்களில்தான். நாமக்கல் மாவட்டத்தில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரபலம். இந்த ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகளே பெரிதும் பங்கேற்கின்றன. கும்பகோணம் வகை, அந்தியூர் வகை, நாட்டு மாடு என்றே அழைக்கப்படும் ஓர் இனம் ஆகியவையும் பங்கேற்கின்றன. இவற்றின் கொம்பு, திமில், உருவம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் புலிக்குளம், மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய இனங்கள் பங்கேற்பதாக அறிகிறேன்.



ஜல்லிக்கட்டு இல்லையென்றால் இந்த இனங்களின் நிலை என்ன? அழிவுதான். உழவு வேலைகளுக்கு இன்று மாடுகள் பயன்படுத்தப்படுவது அரிது. மாட்டு வண்டிகளும் அருகி வருகின்றன. பாலுக்கெனக் கலப்பினங்களும் வெளிநாட்டு இனங்களும் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு முதலிய விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டதும் நாட்டு மாட்டினங்கள் சந்தைகளில் அடிமாடுகளாக விற்பனை செய்யப்படும் செய்திகள் வருகின்றன. அந்தியூர் மாட்டுச் சந்தை, மோர்ப்பாளையம் மாட்டுச் சந்தை முதலிய மாட்டுச் சந்தைகளும் இனிக் களையிழந்து போய்விடும். மாடுகளின் சுழிகளை வைத்தும் வால், திமிலை வைத்தும் அவற்றின் தகுதியும் தரமும் நிர்ணயிக்கப்படுதலாகிய மரபும் முடிந்துவிடும். இவ்விதம் தமிழினம் காலகாலமாக வளர்த்துப் பயன்பெற்று வந்த நாட்டு மாட்டினங்களின் அழிவை இந்தத் தடை விரைவுபடுத்துகின்றது.

உலகமயமாக்கல் காலத்தில் உலகின் பல்வேறு மனித இனங்கள் தம் பண்பாட்டு வேர்களைக் கண்டறிந்து போற்றிப் பாதுகாக்கும் உத்வேகம் பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டுத் தடைச் சட்டத்தின் மூலமாகத் தம் பண்பாட்டை வெகுவேகமாகப் பறி கொடுக்கும் இனமாகத் தமிழினம் முதன்மை பெறுகின்றது.