Tuesday, 31 December 2013

அடிமாடுகள் சொல்கின்றன

நாங்கள்
நரப் பூச்சிகளின்
நன்றி மறுப்பால்
அறுப்புக்குப் போகும்
அடிமாடுகள்

வயதான ஒருவன்
நோய் வந்த நண்பன்
பால் வறண்ட ஒருத்தி
முடமான முரடன்
நகரும் பொட்டலமாய்
சாகுமிடம் நோக்கி
நான்கு நாட்கள்
நீரில்லாமல்
நின்றபடி பயணம்
கால் தோய்ந்து
சாய்ந்து கொள்ள
சக மாட்டு முதுகுகள்
வயிறு காயும்
முதல் நாள் மட்டுமே
மலஜலம் அவதி
உழைப்பை உண்ட பின்
உடம்பையும் கூறு கேட்டாய்
பால் மட்டும் போதாதென்று
உதிரமும் உறிஞ்சக் கேட்டாய்
செத்தும் கொடுக்கிறோம்
சுவைத்துக் கொள்ளுங்கள்
ஆனால் எங்கள்
மரணப் பயணத்தை
சிறிதேனும்
மரியாதைப் படுத்துங்கள்
போன ஆண்டு பொங்கலுக்கு
பொட்டிட்டுப் பூ வைத்து
கடவுளாய் படையல் இட்ட
நீயே வெட்டி இருந்தால்
நிம்மதியாய் செத்திருப்பேன்


--முகநூல் வழி கிடைத்த கவிதை 


Friday, 27 December 2013

ஆலயம்



ஆலயம் – ஆ(நாட்டு பசு) + லயம் – பசு தன்னை மறந்து லயித்து பால் சுரந்த இடமே ஆலயம்.
கோயில் – கோ(நாட்டு பசு)+இல் – பசு இருக்கும் இடம்

மேலே உள்ள சிற்பங்களை நீங்கள் பல கோவில்களில் கண்டிருப்பீர்கள். கோவில் கருவறை உள்ள இடத்தை நாட்டு மாடோ, சித்தர்களோ, (ஞானிகள்-பெரும் வீரம் தியாகம் கற்பு நெறியில் சிறந்து விளங்கிய பெண்கள் போன்றோரின்) ஜீவசமாதி போன்ற  விஷயங்கள் தான் தீர்மானிக்கும். நம் விருப்பத்தின் படி கருவறை மாற்றப்பட்டால் அங்கு தெய்வ சக்தி இராது. கருவறையில் நல்லெண்ணெய் தீபம் மூலமே வெளிச்சம் இருக்க வேண்டும் (புகழ் பெற்ற கோவில்களை எண்ணி பார்க்கவும்). கருவறைக்குள் டைல்ஸ் கிரானைட் போன்றவற்றை போட கூடாது. இறைவன் திருவுருவம் பச்சை கற்பூரம், நாட்டு பசுவின் நெய் தீபம், நல்லெண்ணெய் விளக்கொளியில் தான் தீபாராதனை காட்ட வேண்டும்!

கோவில் என்பது ஆன்ம பலத்தை பேருக்கும் பொருட்டு உள்ள இடம். கருவறையை சுற்றி அந்த அந்த தெய்வத்தை பொறுத்து (சிவன்-விஷ்ணு-முருகன்-அம்பிகை-காளி) ஆகம விதியின் படி கோவில் அமைக்கப்பட வேண்டும்.

Monday, 9 December 2013

ராபர்ட் கிளைவ் மரணம்


ராபர்ட் கிளைவ் என்ற வெள்ளையன் தான் முதன் முதலில் பாரதத்தில் பசுக்கொலைக்கூடங்களை நிறுவினான். அவற்றை இன்றளவும் நேரு முதற்கொண்டு அவர் வம்சாவழியினர் பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவின் சுயசார்பு சமூக பொருளாதார கட்டமைப்பும், இயற்கை விவசாயம், ஆரோக்கியம் என அனைத்துக்கும் நாட்டு பசுக்களே முதுகெலும்பாக உள்ளதை உணர்ந்த கிளைவ் பசுக்களை அழிக்க வகுத்த திட்டம் இன்றளவும் நடந்து வருகிறது. இடையில் வெள்ளைக்காரனின் அடிவருடிகளாக இன்றலவுமுள்ள ஆட்சியாளர்கள் பலரும் இந்த சதிக்கு துணையாக உள்ளனர்.

சரி, இந்த மாபாதகன் ராபர்ட் கிளைவின் முடிவு எப்படிப்பட்டது என்று அறிந்தால் நமக்கு கொஞ்சம் ஆறுதலும், இன்றும் பசுக்கொலைக்கு ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கும் திராவிட, கம்யுனிஸ, முற்போக்கு தேச துரோக  கும்பல்களுக்கும் மற்றும் வெள்ளைக்காரன் வீசிய எலும்பு துண்டுகளை இன்றளவும் கடித்துக்கொண்டிருக்கும் துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவும் இருக்கும். 

ராபர்ட் கிளைவ் என்னதான் நரித்தனமாக பல போர்களை வென்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு பலமான அடித்தளம் போட்டிருந்தாலும், பசுக்கொலை கூடங்கள் நிறுவிய சிறிது காலத்திலேயே அவனது அழிவு காலம் துவங்கி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி அவனது செல்வாக்கு சரிய துவங்கியது. உள்ளூர் ஜமீன்கள் மன்னர்கள் துணையையும் மீறி இவனது ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்து ஊருக்கு திரும்பினான். அங்கு அவன் லஞ்சம வாங்கி கொள்ளையடித்த கதை வெளிவரவே அங்கும் எந்த செல்வாக்கும் அற்றவனாக மாறிப்போனான். கையிருப்பு நிதியும் வீழ துவங்கியது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என தூக்கமின்றி தவிக்க துவங்கினான். மனச்சிதைவு நோய்க்கு ஆளானான். பேசக்கூட ஆளில்லாத நிலைக்கு வந்தான். தூக்கம் வர தூக்க மாத்திரை ஊசி என்று போக ஒரு கட்டத்தில் அதுவும் பயனின்றி போக போதை மருந்துக்கு போனான். போதை மருந்து இல்லாமல் தூக்கமில்லை என்ற நிலைக்கு சென்றான். நரம்புகள் வலுவிழந்தது. உடல் ஒத்துழைக்க மறுத்தது. நடக்கவும் முடியவில்லை. உணவு தயாரிக்க முடியவில்லை. போடவும் ஆள் இல்லை. சிலர் பரிதாபப்பட்டு கொண்டு வந்த உணவை விழுங்க கூட இயலவில்லை. கஷ்டப்பட்டு நாட்களை நகர்த்தினான். தன்னை கொன்றுவிடுமாறு கதறி கெஞ்சினான். தூங்க முடியவில்லை, உண்ண இயலவில்லை, நடக்கக்கூட முடியாது என நரகத்தில் சித்ரவதை அனுபவித்தான்.

தற்கொலை செய்தால் அவன் மதம் ஏற்றுக்கொள்ளாது. சர்ச்சில் புதைக்கக்கூட அனுமதிக்காது என்பதால் சாவுக்கு ஏங்கினான். ஒரு கட்டத்தில் வலியின் கொடுமைகள் தாங்காமல் தனது கழுத்தை தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போனான். ரத்தம் உறைய காணவும் ஆள் இன்றி கிடந்தான். இவனது கொடூர சாவு, பசுக்கொலைக்கு துணை செல்லும் அத்தனை பேருக்கும் ஒரு சாவு மணி!

தெய்வம் நின்று கொல்லும்!