வரும் சில ஆண்டுகளில் நாட்டை பாலைவனமாக்கி விவசாயிகளை
ஆண்டியாக்கி மக்கள் அனைவரையும் நோயாளியாக்கி, மருந்துக்கும் உரத்துக்கும் மற்றும்
அனைத்து தேவைகளுக்கும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க வைக்க மெகா பிளான் ஒன்று
அரங்கேறி வருகிறது. அதன் சூட்சும முடிச்சு தான் “Pink Revolution”. முதலில் பசுமை புரட்சி என்று நிலங்களை நோயாளியாக்கி,
விதைகளை கெடுத்து விவசாயிகளை அடிமையாக்கினர். அப்படியே வெண்மை புரட்சி (பால்
புரட்சி) என்று விஷ பாலையும் வெளிநாட்டு சாத்தான்களான சீமை மாடுகளை கொண்டுவந்து
நம் தேச பசுக்களை கலப்பினம் செய்து கெடுத்து, வளங்களை சீரழித்தார்கள். இப்போது
சிகப்பு புரட்சி என்று இருக்கும் நாட்டு பசுக்களையும் வெட்டி பசுமை மற்றும் வெண்மை
புரட்சியில் தப்பி மீதி இருக்கும் அனைவரையும் நாசமாக்கி நிரந்தரமாக வெளிநாட்டு
அடிமைகளாக்கும் திட்டம் தான் இது. இதை பற்றிய சில முக்கிய தகவல்கள்,
·
நம் நாட்டின்
சட்டப்படி பசுக்களை வெட்டக்கூடாது. இந்திய அரசியல் சட்டமே அதை தடை செய்கிறது. சில
மாநிலங்களில் மட்டும் அதுவும் வயதான, வத்திப்போன பசுக்களை மட்டும் கொல்ல
அனுமதியளிக்கிறார்கள் (பெரும்பாலும் கம்யுனிசம் ஆளும்/ஆண்ட மாநிலங்கள்).
· காங்கிரஸ் ஆட்சியில்
போன வருடம் மட்டுமே 50% பீப் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. சட்டப்படி குற்றமாக
பசுக்கொலை இருக்கும் போது எப்படி இவ்வளவு ஏற்றுமதி சாத்தியம் என்றால், கால்நடை
அலுவலர் சொல்கிறார் “பசுக்களை கொல்வது குற்றம்தான்; ‘ஆவணப்படி’ கொல்லப்படுவது அனைத்தும் எருமைகளே, அதுவும் ஆண் எருமைகள்
மற்றும் பால் வற்றிய பெண் எருமைகள்” என்கிறார். இது முழு
பூசணிக்காய் அல்ல, முழு மலையை சோற்றில் மறைக்கும் வேலையாகும். வருடத்திற்கு 20
லட்சம் டன் பீப் (ஏற்றுமதி மட்டும்; உள்நாட்டு பயன்பாடு தவிர்த்து!) போகும்போது,
அதை ஆண்/பயனற்ற பெண் எருமைகள் மட்டுமே என்றால் எவன் நம்புவான்? இங்கு எருமைகறி என்று
செல்லும் மாமிசம் வெளிநாடு சென்றதும் பெயர் மாற்றம் பெறுகிறது. நெடுஞ்சாலைகளில்
வந்து ஒரு நாள் நின்றால் எத்தனை வண்டிகள் பசுக்களை ஏற்றி செல்கின்றன என்பதை எழுத நோட் போடவேண்டும். அரசாங்க அனுமதி இல்லாமல்
இந்த மாபெரும் திட்டம் நிறைவேறுமா? ரயில்களில் கால்நடைகளை கடத்தவும் அனுமதி
தருகிறார்களாம்.
· வெள்ளைக்காரர்கள் ஆட்சியில்
கூட சாதிக்க முடியாத அளவு சமீப வருடங்களில் பசுக்கள் கொல்லப்படுகின்றன.
· அமெரிக்கா பிரேசில்
உட்பட எல்லா நாடுளையும் வென்று பீப் ஏற்றுமதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை
படைத்துள்ளது காங்கிரஸ் அரசு. ஏற்றுமதி சாதனை மட்டுமல்ல, உள்நாட்டிலும் மக்களை மாட்டுக்கறி உண்ணவைக்க என்னவெல்லாம்
செய்யவேண்டுமோ செய்கிறார்கள்.
· பழைய
பசுக்கொலைக்கூடங்களை நவீனமயமாக்குதல்; பெரிதாக புதிய நவீன பசுக்கொலைக்கூடங்கள்
கட்டுதல்; இயந்திர தளவாடங்கள் வாங்க சீன-ஐரோப்பிய நிருவனங்களோடு கைகோர்த்து துரித
நடவடிக்கை; இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு 50-90% மானியம் என்று எவ்வளவு ஊக்கமளிக்க
முடியுமோ அவ்வளவும் கிடைக்கிறது.
·
மாமிசம் தவிர்த்த
பாகங்களான ரத்தம், எலும்பு, குடல், கொம்பு, கால் குழாம் போன்றவை பல்வேறு உணவு, அழகுசாதன
பொருட்களில் கலக்கப்பட்டு, மறைமுகமாக இந்தியர்களை பசு மாமிசம் உண்ண வைக்கிறார்கள்.
இதில் முக்கியமானவை வெள்ளை சர்க்கரை, லிப்ஸ்டிக், முககிரீம்கள், நூடுல்ஸ்,
புரோட்டாக்கடை ஆயில் போன்றவை.
· இவ்வாறு பசுக்களை அழித்துவிடுவதால்,
நாட்டில் இயற்கை வேளாண்மை சாத்தியமற்றதாகிவயும். மண் தரிசாகிவிடும். மக்களின்
ஆரோக்கியம் குன்றும். அதன்மூலம் மருந்துக்கம்பெனிகள் மற்றும் மருத்துவமனைகள்
பணத்தை குடிக்கும். உரத்துக்கும் மருந்துக்கும் வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டும். நம் நாட்டு பணம் அனைத்தும் சுரண்டி
செல்லப்படும்.
இவ்வாறு பசுக்களை கொல்ல வைப்பதன் மூலம் மாபெரும் பண்ணாட்டு அரசியல் சூழ்ச்சியை அரங்கேற்ற கடுமையாக
காங்கிரஸ் அரசு முயற்சி எடுத்து வந்துள்ளது.